அறிவிப்பு
2005 ஆம் ஆண்டிற்கான இயல் விருது இம்முறை பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட்டிற்கு வழங்கப்படுகிறது. கனடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் இணைந்து இந்த விருதை வருடா வருடம் வழங்குகிறார்கள்.
ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்துறை உட்பட நான்கு தலைமைப் பீடங்களை அலங்கரிக்கும் இவர் ஆரம்பத்தில் விஸ்கொன்சின் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக கடமையாற்றியவர். இவருக்கு லத்தீன், கிரேக்கம், ரஸ்யன், ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு. பல இந்திய மொழி இலக்கியங்களிலும் பரிச்சயம் பெற்றிருக்கிறார்.
இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) நூல் The American Book Award க்கு பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையம் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. இது தவிர The Forest Book of the Ramayana of Kampan (1988) – ஆரண்ய காண்டம் மொழிபெயர்ப்பு ; The Poems of Ancient Tamil (1975) என்று இன்னும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்பொழுது பதிற்றுப் பத்துவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் இருக்கிறார்.
ஜோர்ஜ் எல் ஹார்ட்டின் தமிழ் சேவை உலகறிந்தது. தமிழை செம்மொழியாக்கவேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004 ல் இருந்து தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. பேர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர். இன்று நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் இங்கே உயர் தமிழ்க் கல்வி பெறுவதுடன் தீவிரமான தமிழ் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்திய பெரியார்களில் இவர் முக்கியமானவர்.
இந்த விருது முதலாவது வருடம் சுந்தர ராமசாமிக்கும், இரண்டாவது வருடம் கே. கணேசுக்கும், மூன்றாவது வருடம் வெங்கட் சாமிநாதனுக்கும், நாலாவது வருடம் பத்மநாப ஐயருக்கும் வழங்கப்பட்டது. இந்தக் கெளரவத்தில் ‘இயல் விருது ‘ கேடயமும், பணமுடிப்பு 1500 டொலரும் அடங்கும். வழமைபோல இம்முறையும் விருது விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் எதிர்வரும் ஆனி மாதம் நடைபெறும்.
—-
amuttu@rogers.com
- உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘
- நனையத்துணியும் பூனைகள்
- அமைதியுறுவாய்
- அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?
- வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)
- சி. கனகசபாபதி நினைவரங்கு
- நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்
- குறளும் பரிமேலழகர் உரையும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை
- அந்த நாள்
- நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்
- சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
- தவமாய் தவமிருந்து
- கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்
- பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை
- கடிதம்
- ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
- ஒரு திருத்தம்
- விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்
- காசாம்பு
- எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))
- ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
- காதல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6
- மதமாற்றம் எனும் செயல் குறித்து
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- யூத மெஸையாக்கள் (Messiahs)
- மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.
- ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)
- மின்சாரப்பூக்கள்…
- ஸி. செளாிராஜன் கவிதைகள்
- சாதனை
- கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )