ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

என் எஸ் நடேசன்


அமைதியான காலமாக இருப்பால்; அலங்காரமான மொழியில் நாவலொன்றை எழுதியிருப்பேன்.

இலக்கியம் படைப்பதற்காக நான் பேனையை எடுப்பதில்லை. சமூகத்தில் ஒளிந்திருக்கும் பொய்யை வெளிக்காட்டுவதற்கும் உண்மையை வெளிப்படுத்துவதற்குமே நான் எழுதுகிறேன்.

இந்த வசனங்களுக்கு உாிமையாளர் ஜோர்ஜ் ஓர்வல். ஏதாவது தவறு இருந்தால் எனது மொழிபெயர்ப்பின் வழு.

இலக்கியவாதிகள் தங்கள் வாழும் சமூகத்தை வெளிப்படுத்துபவர்கள். சிறந்த படைப்புகள் அவர்களது திறமையையும் மொழிமேல் அவர்கள் கொண்ட ஆட்சியையும் வெளிப்படுத்தும்.

விலங்குப் பண்ணையிலும்(Animal Farm);, நைன்ரீன் எயிற்றி போாிலும் (1984) ஜோர்ஜ் ஓர்வெல் தான் வாழாத சமூகத்தை, அதாவது ஸ்ராலின் கீழ் உள்ள சோவியத் ரஸ்யாவில் மக்களின் நிலையை, தனது உள்ளுணர்வால் அறிந்து வெளிக்கொணர்ந்தார். இதன் மூலம் சிறந்த இலக்கியவாதிக்கும் மேலாக காண முடிகிறது.

ஸ்ராலின் பற்றி உலகம் எங்கும், நாசிகளுக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் உன்னத புருஷர் என கொண்டாடும் காலத்தில் விலங்குப்பண்ணை படைக்கப்பட்டது. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல மேல்நாட்டு அறிஞர்கள் பலரும் சர்வாதிகார சமூகத்தின் கொடுமையை நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில் நைன்ரீன் எயிட்ாி போர் எழுதப்பட்டது.

இது எப்படி ஜோர்ஜ் ஓர்வெல்லால் முடிந்தது ?

தனது உணர்வுகளை மற்றய மானிடர்களின் உணர்வுகளோடு இணைத்தபோதுதான் இந்த புரிதல் ஏற்பட்டது.

இவரது பர்மிய நாட்கள்(Burmese Days) என்ற நூல் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தையும் அதன் அதிகார வர்க்கத்தையும் விமர்சிக்கிறது.

சிறுவயதில் நான் வாசித்த கம்யூனிசத்துக்கு எதிரான கட்டுரைகளில் விலங்குப்பண்ணை பற்றிய குறிப்புகள்; மேற்கோள்கள் இருந்தன. சோசலிச சமூக அமைப்பின் மீது ஏற்பட்ட மயக்கத்தாலும் வழமையான கம்யூனிச எதிர்ப்பு நூல் என்ற நினைப்பாலும் பல வருடங்களாக வாசிக்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வந்தேன்.

ஆங்கில வகுப்பில் பாடப்புத்தகமாக எனது மகள் வீட்டுக்கு கொண்டுவந்தபோது ஒதுக்கிவைக்க முடியாமல் வாசிக்க ஆரம்பித்தேன். கையில் எடுத்ததும் கீழே வைக்காமல் தொடர்ச்சியாக படித்து முடித்தேன். இலங்கை அரசியலில் அவதானியாகவும் மிருகவைத்தியராகவும் இருந்ததாலோ பாத்திரங்களோடு என்னால் ஒன்றாக முடிந்தது.

நெப்போலியன், சிறோபோல், பொக்சர் என்ற பாத்திரங்கள் என்மனதில் நிழல்படமாக பதிந்தன. புத்தகத்தை பலமுறை வாசித்துவிட்டு திரைப்படத்தையும் பார்த்தேன். எக்காலத்திலும் எந்த நாட்டின் சமூக சூழ்நிலைக்கும் பொருந்தும் பாத்திர படைப்புகள்.

பண்ணை மிருகங்கள, புரட்சி மூலம் பண்ணை விவசாயிடம் இருந்து பண்ணையை கைப்பற்றி எல்லா மிருகங்களையும் சமமாக நடத்த விரும்புகின்றன. நடைமுறையில் அதிகாரம் வந்ததும் மனிதர்கள்போல் விலங்குகளும் நடக்கின்றன.

என்ன எங்கள் கதைபோல் இருக்கிறதா ?

“எல்லா மிருகங்களும் சமனானவை”; என்ற வாக்கியம் பின்பு “எல்லா மிருகங்களதும் சமனானவை ஆனால் சில மிருகங்கள் மேன்மையானது” என்ற வாக்கியமாக மாறுகிறது. ஆட்சிமாற்றம், புரட்சி, விடுதலை என்ற கோசங்கள் எல்லாம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வேடங்களே என்பதை அழகாகவும் நளினமாகவும் ஜோர்ஜ் ஓவலைப் போல் எவரும் சொல்லவில்லை.

(Eric Arthur Blair) எாிக் ஆதர் பிளையர் என்ற இயற்பெயர் உள்ள ஜோச் ஓர் வெல் 1903ம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார். இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு பின் சென்று குடியேறியது. இந்திய காலனித்துவ அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் அதிகாாியாக பர்மாவில் சேவை செய்தார். பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கொள்கையில் பால் ஈர்க்கப்பட்டு ஸ்பானிய போாில் பங்குபற்றயபோது குண்டு பாய்ந்து காயமடைந்தார். நாற்பத்து ஏழு வருடங்கள் மட்டும் வாழ்ந்த இவரது தடயங்கள் இலக்கிய உலகில் ஆழமானது.

விலங்குப்பண்ணையில் ஏற்பட்ட பிடிப்பால் இவரது சகல நாவல்களையும் படித்து முடித்தேன். இவரது மற்றய நூல் நைன்ரீர் எய்ாிபோர் உலகப்பிரசித்திபெற்றது.

ஜோர்ச் ஓர்வலின் நூற்றாண்டு நினைவை ஒட்டி உதயத்தில் பிரசுரமான விலங்குப்பண்ணை தற்பொழுது புத்தகமாக உருமாறி உள்ளது. இதைவிட e Book ஆக உதயம்.நெற் (www.uthayam.net) மின்னிணையத்தளத்தில் உள்ளது.

uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்