சித்ரா சிவகுமார்
மதியத்தில் யாரையேனும் சந்தித்தால் இந்த வார்த்தையைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம். இதை மதிய வணக்கமாகவும் கொள்ளலாம். நல்ல நாளாக இருக்கட்டும் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஜப்பானிய வரலாறும் பல நாடுகளைப் போன்றே நீண்ட நெடிய வரலாறு கொண்டது. அதைப் பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்ளலாமா?
ஜப்பானில் முதன்முதலில் சைபீரியாவைச் சேர்ந்தவர்கள் குடியேறினார்கள் என்பது வரலாறு. பிறகு தான் சீனர்களும் கொரிய நாட்டவர்களுமஇ; தென்மேற்கு ஜப்பானில் குடியேறிஇ பிறகு வடக்கு பக்கமாக நகர்ந்துஇ அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்தனர்.
ஆரம்ப காலத்தில்இ குடும்பங்கள் சில சேர்ந்துஇ சிறு சிறு வகுப்புகளாக மாறிஇ குடியேறி வாழும் நிலங்களைக் கைப்பற்றஇ ஒரு குழு மற்றொரு குழுவுடன் சண்டையிட்டு வந்தது. கி. பி. 300 ஆம் ஆண்டில்இ யாமாதோ வகுப்பினர் முழு பலம் பெற்றுஇ அதிகார வர்க்கமாக மாறியது. இந்த வகுப்பினர்இ தாங்கள் சூரியக் கடவுளான அமெதெராசு வழி வந்ததாகக் கூறிக் கொண்டனர். அதன் தலைவரை ‘பேரரசர்” என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இன்று வரையிலும்இ அவ்வகுப்பினரின் தலைக்குடும்பத்தினர் தாம் ஜப்பானில் அரச குடும்பத்தினராக மதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆறாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து தூதுவர்கள் ஜப்பானுக்கு வந்தனர். அவர்கள் தான் சீனக் கருத்துக்களையும் நாகரிக முறைகளையும் மதம் மற்றும் தத்துவங்களையும் கொண்டு வந்தனர்.
ஜப்பானியத் தலைநகரமாக ஹெய்யன் (தற்போதைய கியோதோ) 794ல் அறிவிக்கப்பட்டது. இந்த ஹெய்யன் காலத்தில் தான் அரசியல் பலம் ‡புஜிவாரா வகுப்பினரிடம் இருந்தது. பிறகு ‡புஜிவாரா வகுப்பினர் டைய்ரா வகுப்பினராலும் அவர்கள் மினாமோடோ வகுப்பினராலும் தோற்கடிக்கப் பட்டனர். பேரரசர் கியோதோ நகரில் இருந்தாலும் மினாமோடோ வகுப்பினர் தங்கள் முழு பலத்தையும் கம்மக்குரா நகரில் ஒருமுகப்படுத்தினர். மினாமோடோ யோரிடோடோஇ பிறகு ஷோகுன் என்று அழைக்கப்படும் படைத்தலைவனாக மாறி ஜப்பானின் பலம் மிக்க வீரனாக மாறினான். சண்டைகள் எப்போதுமே நடந்து கொண்டே இருந்தன.
இறுதியில் பதினாறாம் நூற்றாண்டில்இ ஜப்பான்இ ஷோகுனாக இருந்த தொகுகவா இயேயாசு என்பவரால்இ ஒன்றாக இணைக்கப்பட்டு முழு நாடாக மாறியது. அந்த மனிதர் வெளி நாட்டு உறவுகள் ஜப்பானுக்குக் கேடு விளைவிக்கும் என்று திடமாக நம்பினார். அதனால் 1637 முதல் வெளிநாட்டவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். ஜப்பானியர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு ஜப்பான் முழுமையாக மற்ற நாடுகளின் தொடர்பே இல்லாமல் இருந்தது. தன்னை முழுமையாக தனிமைப் படுத்திக் கொண்டது.
இந்த ஜப்பானின் தனிமைப் பயணம் 1854லில் அமெரிக்கக் கப்பல்கள் அதன் கரைகளைத் தொட்ட போது நிறுத்தப்பட்டது. ஷோகுன் அமெரிக்காவுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ள வற்புறுத்தப் பட்டனர். அதன் பிறகு பிரிட்டன்இ ரஷ்யா மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் ஜப்பான் வணிகம் செய்ய ஆரம்பித்தது.
1854 முதல் ஜப்பானியக் கொடியாக ‘நிஷ்ஷோகி” அல்லது ‘ஹனோமாரு” என்று அழைக்கப்படும் வெள்ளை நிற பின்னணியில் இருக்கும் சிவப்பு வட்டம் ஏற்கப் பட்டது. இந்தச் சிவப்பு வட்டம் சூரியனைக் குறிக்கும்.
1868ல் தொகுகவா ஷோகுன் பதவி பறிக்கப்பட்டு ஜப்பானை மறுபடியும் மன்னர் ஆள ஆரம்பித்தார். பேரரசர் மெய்ஜி தலைமையில் நவீன ஜப்பான் உருவானது. தொகுகவா வகுப்பினர் என்பது அறவே ஒழிக்கப்பட்டது.
பேரரசர் மெய்ஜி ஆட்சியின் போது ஜப்பானில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்றுஇ ஜப்பானிய நாணயமாக ‘யென்” உருவாக்கப்பட்டது. யென் என்பதற்கு வட்டம் என்று பொருள்.
1870 – வெள்ளி 1 யென் நாணயம் இன்றைய செப்பு 10 யென் நாணயம்
இதோ ஹிரோபூமி என்பவரால் 1889 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசியல் சட்டம் வரையறுக்கப்பட்டது. ஜப்பானிய பாராளுமன்றம் டையட் என்று அழைக்கப்படுகிறது. இம்மன்றத்தில் பிரதிநிதிகளின் மன்றமும்; மக்கள் மன்றமும் உண்டு.
ஜப்பானிய மாணவர்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று படிக்க ஆரம்பித்தனர். வெளிநாட்டு வல்லுநர்கள் ஜப்பானுக்கு வரவழைக்கப்பட்டு மேற்கத்திய தொழில் நுட்பங்கள் கற்றுத் தரப்பட்டன. ஜப்பானில் ரயில் பாதைகள்இ தொலை தொடர்புச் சாதனங்கள்இ சட்ட விதி முறைகள்இ பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. நவீன கப்பல் படையும் சேனையும் அமைக்கப்பட்டன.
1900 ஆம் ஆண்டுஇ ஆசியாவிலேயே மிகவும் முன்னேறிய நாடாக ஜப்பான் மாறியது. 1894-95ல் ஜப்பான் சீனாவை வென்றது. 1905ல் ரஷ்யாவைப் போரிட்டு வென்றது. 1910ல் கொரியாவைக் கைப்பற்றியது. 1937ல் மீண்டும் சீனாவுடன் மோதியது. சில ஆண்டுகளிலேயே கிழக்கு ஆசியப் பகுதிகள் பலவற்றையும் கைப்பற்றியது.
1941இ டிசம்பர் 7ஆம் நாள்இ ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றது. ஹவாய் தீவில் இருந்த அமெரிக்கக் கப்பல் படைத்தளமான முத்துத் துறைமுகம் (Pநயசட ர்யசடிழரச) மேல் குண்டு வீசி தன் பலத்தைக் காட்டியது.
மூன்றரை வருடங்கள் பசிப்பிக் கடல் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடந்தது. ஜப்பானில் பல முக்கிய நகரங்கள் குண்டு வீசப்பட்ட நெருப்பில் கருகின. ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஹிரோஷிமா மேல் ‘லிட்டில் பாய்” (டுவைவடந டீழல) என்ற குண்டு வீசப்பட்டு இலட்சக்கணக்கானோர் மாண்டனர். அமெரிக்கா மேலும் மூன்று தினங்களில் நாகசாகி நகரின் மேல் ‘‡பேட் மேன்” (குயவ ஆயn) என்ற குண்டை வீசி ஜப்பானியர்களை நிலைகுலைய வைத்தனர்.
ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. அமெரிக்கா ஜப்பானில் ஒரு படைதளத்தை அமைத்துஇ தன் சேனையைத் தங்க வைத்தது. 1952 ஆம் ஆண்டு வரை இருந்த அமெரிக்கப் படை ஜப்பானில் புதிய சுயாட்சி முறையை அறிமுகப்படுத்தியது.
மக்களை மட்டுமின்றி நிலம்இ வீடுகள்இ தொழிற்சாலைகள் இழந்த ஜப்பான் மற்ற நாடுகள் கொடுத்த ஊக்கத்தினாலும்இ உதவியினாலும் வெகு வேகமாக முன்னேற ஆரம்பித்தது.
1960இல் ஜப்பானின் வர்த்தகம் சற்றே உயர ஆரம்பித்தது. 1990இல் அது குறைந்த போதும் உலகத்தின் பெருஞ்சக்திகளில் ஒன்றாக ஜப்பான் இன்றளவிலும் உயர்ந்து நிற்கிறது.
தோல்விகளையெல்லாம் வெற்றிப் படிகளாக மாற்றியது. முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லுக்குச் சான்றாக நிற்கிறது ஜப்பான். வீழ்ச்சியே ஏற்பட்டாலும் தோல்விகளையும் இழப்புகளையும் கண்டு சோராது போராட்டமே வாழ்க்கையெனக் கொண்டு அல்லும் பகலும் பாடுபட்ட இந்த நிலைக்கு ஜப்பானியர்கள் உயர்ந்துள்ளார்கள். இன்றைய ஜப்பான் பற்பல அழிவுகளைக் கடந்தே ஜகம் போற்றும் ஜப்பானாக மாறியுள்ளது.
ஆனால் இன்றைய ஜப்பானின் நிலை சில சமயம் கவலைக்கிடமாகவே உள்ளது. உலகத்திலேயே முதியோர் அதிகமாக இருக்கும் நாடாக இளைஞர்கள் குடும்பச் சுமைகளை ஏற்க விரும்பாமல் குழந்தை வேண்டாம் என்று வாழ வாலிப வயதினர் தங்கள் முன்னோர் பட்ட பாட்டை மனதிற் கொள்ளாமல் கிடைக்கும் வசதிகளை மட்டுமே அனுபவிக்க விரும்பி உழைக்க எண்ணம் இல்லாமல் தறிகெட்டுப் போகும் நிலை உள்ளது.
ஜப்பான் என்றுமே நிலையான புகழோடு இருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் இன்னும் உழைத்த வண்ணம் இருக்கும் நிலை இருக்கும் வரை இதை எவராலும் தாழ்த்த முடியாது.
chitra@netvigator.com
- மும்பைத் தமிழர்களின் அரசியல்…
- படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த
- வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)
- உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு
- பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”
- வாஸந்தி கட்டுரைகள்
- மொழி
- அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று
- கனவு வெளியேறும் தருணம்
- தைவான் நாடோடிக் கதைகள் (3)
- பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்
- கணையாழி விழா 2007 (18.11.2007)
- இன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்
- கதை சொல்லுதல் என்னும் உத்தி
- அடையாளங்களை விட்டுச்செல்லுதல்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்
- ஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு
- பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு
- நேற்றிருந்தோம்
- தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:
- ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
- ஒட்டுப் பீடியில் எரியும் உலகம்
- பஞ்ச் டயலாக்
- கடிதம்
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்
- லா.ச.ரா.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)
- பாரதி
- அக்கினிப் பூக்கள் … !-3
- தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !
- தாய் மண்
- அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
- மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்
- ஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்
- ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?
- விசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை!
- கடமை
- அது ஒரு விழாக்காலம்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1
- மாத்தா ஹரி அத்தியாயம் -39