சித்ரா சிவகுமார்
7. இததாகிமஸ்
ஜப்பானியர்கள் எப்போதும் உணவு உண்ணத் தயாராக அமர்ந்ததும் இதைக் கூறி விட்டே உணவு உண்ண ஆரம்பிப்பார்கள்.
ஜப்பானியர்களின் முக்கிய உணவு அரிசி. அவர்களது காலை உணவு பெரும்பாலும் மிசோ ரசம்இ சாதமஇ; முட்டைஇ காய்ந்த மீன் மற்றும் காய்கறி ஊறுகாய்இ ஜப்பானிய பச்சை டீ கொண்டது.
அரிசி மிகவும் முக்கிய உணவு என்பதால் காலை உணவு அசகோஹன் (காலை சோறு) மதிய உணவு (ஹிருகோஹன்) மாலை உணவு பான்கோஹன் (மாலை சோறு) என்றும் அழைக்கப்படுகிறது.
அவர்கள் உணவு மிகவும் சுகாதாரமானது. காய்கறிகளும் மாமிசமும் மீன்களும் கடல் தழைகளும் சம பங்கில் உண்பதால் அவர்களின் உணவு உடலுக்கு வலுவைச் சேர்க்கக் கூடியது. அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ இதுவே முக்கிய காரணமும் ஆகிறது.
மேற்கத்திய பழக்கமான ரொட்டிஇ முட்டைஇ காபி என்ற காலை உணவுப் பழக்கம் இப்போது எளிமை கருதி உண்ணப்பட்டு வருகின்றன.
பல வகையான உணவுகள் பச்சையாகவோ அல்லது மிகவும் கொஞ்சமே சமைக்கப்பட்டோ உண்ணப்படுகின்றன. சுவைக்காக வாசனை திரவியங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன.
அவர்கள் அதிகமாக அரிசிஇ மீன்இ காய்கறிகளை உண்கிறார்கள். மிகவும் சுத்தமான மீன்களை அவர்கள் பச்சையாகவே உண்பார்கள்.
மதிய உணவினை பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் கடைகளில் சென்று உண்கின்றனர். நூடுல்ஸ்இ குழம்புச் சாதம்இ சூஷி உண்பர். சூஷி என்பது மிகவும் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட பச்சை மீன். அதைச் சாதத்தோடு கடல் தழைகளோடு முட்டையுடன் உண்பர். சாதம்இ காய்கறிஇ மாமிசம்இ மீன் கொண்ட பொட்டலங்கள் மதிய உணவு நேரத்தில் விற்கப்படும். மாணவர்கள் பயணிகள் வேலைக்குச் செல்பவர்கள் இவற்றை வாங்கி உண்பதும் உண்டு. தற்போது மேற்கத்திய உணவு வகைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.
சூஷி
இரவு உணவு மிகவும் முழுமையான ஒன்று. பல வகையான உணவு வகைகள் பரிமாறப்படும். முப்பது வகைகள் வரை பரிமாறப்படும். சசிமி வெட்டப்பட்ட பச்சை மீன்இ கடல் தழைகள்இ தோ‡பூஇ தெம்பூராஇ நன்கு வாட்டப்பட்ட கடல் உணவுஇ காய்கறிகள் என்று அவை பல தரப்படும்.
சசிமி தெம்பூரா
அவர்கள் மாமிசத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமாக கடல் வாழ் உணவுகளை உண்கின்றனர். குளிர் காலங்களில் காய்கறிகளும் ரசமும் மாமிசங்களும் மேசையில் வைக்கப்படும். மாமிசத்தை சூடான தட்டைக் கல்லில் இட்டு சுட்டு பிறகு சாஸ் என்னும் ஒரு வகை குழம்பில் தொட்டு உண்பர். இந்த மாமிச உணவினை சுகியாகி சாபு சாபு என்றும் அழைப்பர்.
ஜப்பானியர்கள் அதிகமாக வெளியில் சென்று உண்பார்கள். வீட்டில் உண்பது என்பது சுவை கருதி மட்டுமே.
அவர்கள் உணவு மேசை நாம் பயன்படுத்துவது போல் இல்லாமல் உயரம் குறைந்த ஒன்று. அவர்கள் தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு உண்பர்.
உணவினை சாப்ஸ்டிக் என்று கூறப்படும் இரண்டு குச்சிகளைக் கொண்டே உண்பர்.
சாப்ஸ்டிக் சாப்ஸ்டிக் பயன்படுத்தப்படும் முறை
ஜப்பானில் ஒவ்வொரு பகுதியில் உணவுப் பழக்கங்கள் மாறுபடும். நகோயா நகரில் நூடுல்ஸ் சிறந்தது. கியோதோ நகரில் ஜப்பானியர்களின் பாரம்பரிய சமையல் வகைகளை அதிகமாகக் காணலாம்.
நான் ஜப்பான் செல்லும் முன்னர் ஜப்பானியர்கள் பாம்புஇ குரங்குகளை அதிகம் விரும்பி உண்பார்கள் என்று புத்தகங்களில் படித்தேன். உணவு விடுதிகளில் உயிரோடு அவற்றைத் தொங்க விட்டு இருப்பார்கள். எது வேண்டுமோ அதைச் சொன்னால் உடனே கொன்று சமைத்துத் தருவார்கள் என்று எழுதியிருந்தார்கள். நான் முக்கிய நகரங்களான டோக்கியோ யோகோஹமா ஓசகா கியோதோ நகரங்கள் என்று எல்லா நகரங்களையும் பார்த்திருக்கிறேன். நான் இருந்த வரையில் அத்தகைய உணவு விடுதிகளைக் காணவில்லை. அப்படிப்பட்ட உணவு விடுதிகள் முக்கிய நகரங்களில் முக்கியப் பகுதிகளில் இருக்கவில்லை. மிகவும் சிறிய தீவுகளிலோ அல்லது கிராமங்களிலோ அப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
உணவினை உண்டு முடித்த பின்பு ‘கோசிசோசமா” என்று கூறுவர். ‘உணவிற்கு நன்றி” என்று பொருள்.
ழூழூழூழூழூழூ
8. அரிங்கதோ கோசைமஸ்
நன்றி. ஜப்பானிய மொழியில் இது அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. அரிங்தோ வார்த்தையை மட்டுமே கூட பயன்படுத்தலாம்.
இதை உடலை வளைத்து கைகளை வயிற்றின் மேல் வைத்து குனிந்து கூறுவது ஜப்பானியர்களின் வழக்கம்.
ஜப்பானிய மக்கள் கலைப் பிரியர்கள். எவ்வளவு தான் வேலை வேலை என்று பறந்தாலும் கலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
உடைகள்இ மர வேலைப்பாடுகள்இ காகித பொம்மைகள்இ வாட்கள்இ மூங்கில் பொருட்கள்இ பட்டங்கள்இ முகமூடிகள்இ இசைக் கருவிகள் என்று பல்வேறு பொருட்களை அழகிய தனித்துவம் மிக்க வேலைப்பாட்டுடன் செய்ய வல்லவர்கள் ஜப்பானியர்கள்.
அவர்களது கலை நயமிக்க கிமோனோ உடையில் செய்யும் வேலைப்பாடுகளுக்காகவே அந்த உடைகள் மிகவும் அதிக விலைமிக்கவையாக இருக்கின்றன.
வர்ண ஓவியங்கள் ஓவ்வொரு வீட்டையும் அலங்கரிக்கும். ஓவியங்கள் பட்டுத் துணிகளிலும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட காகிதங்களிலும் தீட்டப்படுகின்றன. அவர்களது ஓவியங்கள் பெரும்பாலும் இயற்கை பற்றியும் வாழ்க்கை முறை பற்றி விவரிக்கும் படியும் இருக்கும். ஜப்பானில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய பல ஓவியங்கள் இன்றும் பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன.
ஜப்பானிய மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் தனித்துவம் கொண்டவை. அவற்றில் நோஇ புன்ராக்குஇ கபூகி மிகவும் குறிப்பித்தக்கவை.
மிகப் பழமையான நோ என்ற கலை மேடை நாடக வடிவம் கொண்டது. இது ஷின்டோ மதம் மற்றும் புத்த மதக் கொள்கைகளைப் பரப்பும் வகையில் நீதி போதிக்கும் கதைகளைக் கொண்டது. மேடை மிகவும் எளிமையானது. நடிகர்கள் முகமூடிகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு மேடையில் மிகவும் மெதுவாக ஆனால் நாகரிகமாக நடை பயில்வர்.
தலைஇ கைகளின் நுண்ணிய அசைவுகளின் மூலம் பாத்திரம் அழுவது மகிழ்வது கோபப்படுவது போன்ற உணர்வுகள் காட்டப்படும். அவர்கள் பேசும் வசனங்கள் மிகப் பழைய ஜப்பானிய மொழிச் சொற்களைக் கொண்டவை. அவற்றை தற்போது உள்ள தலைமுறையினர் புரிந்து கொள்வது மிகக் கடினம். நடிகர்களின் அசைவுகள் மூலம் மட்டுமே நாடகள் புரிந்து கொள்ளப்படுவதாக பலரும் கூறுவர்.
ஜப்பானின் மற்றொரு மேடை நாடகக் கலை புன்ராக்கு என்பது. இது 1684ல் ஓசகாவில் பொம்மலாட்ட வடிவமாகத் தோன்றியது. பிறகு ஓசகாவைச் சேர்ந்த உயேமேரு புன்ராக்கன் என்பவரின் பெயர் கொண்டு பிரசித்தி பெற்றது.
இது இசையுடனும் கதையுடனும் செய்யப்படும் பொம்மலாட்டமாகும். பொம்மைகள் நான்கு அடி உயரம் வரையிலும் இருக்கும். நிஜ வடிவம் போல் அமைக்கப்பட்டு இருக்கும். பொம்மைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வல்லவை. அவற்றின் கண்கள் கண் இமைகள் வாய் நகர வல்லவை. பொம்மலாட்டக்காரர்கள் அவற்றை ஏணியில் ஏறவும் வைப்பர். கதவு தாழ்பாளை திறக்கவும் வைக்க வல்லவர்கள்.
இக்கலையின் முக்கிய அம்சம் என்னவென்றால் கதை முக்கிய விஷயங்களை வாழ்க்கைப் போராட்டங்களை அலசுவதாக இருக்கும்.
கபூகி என்ற மற்றொரு வகை நாடகமும் உண்டு. இது ஈடோ காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்று. கபூகி என்பதற்கு பாட்டும் நடனமும் என்பது பொருள். இதன் மேடை சூழல வல்லது. மேலும் இரகசிய அறைகளும் கதவுகளும் கொண்டது. பார்வையாளர்கள் மத்தியில் செல்ல பாதையும் கொண்டது.
கபூகி நிகழ்ச்சியில் மிகவும் அழகிய உடைகள்இ பாட்டுஇ நடனம் பலவிதமான வேகமான அசைவுகளைக் கொண்டது. இந்தப் கதைகள் மிகவும் வித்தியாசமானவை. பெண்கள் ஆண்களாக மாறுவர்.
ஆரம்பத்தில் பெண்ணால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலை இருபாலாராலும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் இது ஆண்களால் மட்டுமே பங்கேற்கப்படும் நிகழ்ச்சியாக ஆனது. ஆணே பெண் வேடமிட்டு நடிப்பர்.
உலகிலேயே மிகவும் பிரபலமான கபூகி அரங்கம் டோக்கியோ நகரில் கின்சா என்னும் இடத்தில் இருக்கும் அரங்கமேயாகும்.
அடுத்த உலகப் புகழ் பெற்ற ஜப்பானியக் கலை இகேபானா என்பது. இது ஜப்பானின் பூ அலங்காரக் கலை.
இது நிறக் கலவைக்காகவும் எளிய வடிவம் நயம் மற்றும் நேர்த்திக்காகவும் மிகவும் உலகப் புகழ் பெற்ற கலை வடிவமாகும். பெண்களுக்கு மிகவும் பிடித்த கலை என்று கூடச் சொல்லலாம். ஜப்பானின் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இருக்கின்றன. இதை 15 இலட்சம் பேர்கள் வரையிலும் கற்றுள்ளார்களாம்.
இன்று வரையிலும் கலை வடிவமாகவே போற்றப்படும் மற்றொரு வித்தியாசமான கலை ஜப்பானின டீ சடங்கு நிகழ்ச்சி. இந்தக் கலை புனிதத்துவம் கருதி பலராலும் விரும்பி நடத்தப்பட்டு சருகிறது. இந்தச் சடங்கு சனோயூ என்று அழைக்கப்படுகிறது. இது புத்த மதத்தினரால் தோற்றவிக்கப்பட்ட சடங்கு. அதனால் பலர் புனிதத்துவமான இந்தச் சடங்கைச் செய்ய தங்கள் வாழ்க்கையையே அர்பணித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் அரை நாள் வரை நடந்து வந்தச் சடங்கு காலப்போக்கில் நேரமின்மை கருதி நாற்பத்தி ஐந்து நிமிடங்களே நடத்தப்படுகிறது. விருந்தினர் முதலில் அறைக்குள் நுழைந்து மண்டியிட்டு அமர வேண்டும். பிறகு டீ தரப்படும் பாத்திரங்களையும் உண்ணப் பயன்படும் மலர்களையும் சோதிக்க வேண்டும். பிறகு விருந்தினர்களுக்கு இனிப்பு தரப்பட்டதும் டீ தயாரிக்கும் முறையைக் காண அனுமதிக்கப்படும். பொறுமையாக டீயைத் தயாரிப்பவரைக் காணக் காண விருந்தினருக்கு மன அமைதி ஏற்படும்.
இப்போது கூறப்பட்ட கலைகள் அனைத்துமே வெகு ஆண்டுகளாக பின்பற்றப் பட்டு மிகச் சிலராலேயே ரசித்துப் பார்க்கும் கலைகளாக இருக்கின்றன.
ஜப்பானிய இசைக் கருவிகளும் சற்றே வித்தியாசமானவை. பதின்மூன்று தந்திகளைக் கொண்ட கெதோஇ மூன்று தந்திகளைக் கொண்ட ஷமிசென் என்று கூறப்படும் கிடார் ஆகும்;.
ஜப்பானில் வடிவமைக்கப்படும் பியானோக்கள் உலகத் தரம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. ஜப்பானிய இசையில் இன்று மேற்கத்திய பாணி அதிகமாக கலந்து வருகிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் பழமையான இசை வடிவங்களும் இன்னும் இருக்கவேச் செய்கின்றன.
இன்று மற்ற நாடுகளைக் போன்று ஜப்பானியர்களும் படங்கள்இ தொலைக்காட்சித் தொடர்களை எடுத்து மக்களுக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளைத் தருகின்றனர். பல தொடர்கள் உலக அரங்கிலும் பெயர் பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான இயந்திர மனிதன் (ரோபோ) தொடர் மிகவும் பிரபலமானது.
நான் பார்த்த வரையில்இ பல விதங்களில் ஜப்பான் மிகுந்த கலை அம்சம் கொண்ட நாடு என்று நான் எண்ணுவதுண்டு.
ழூழூழூழூழூழூ
11. சயனோரா
விடை பெற்றுக் கொள்கிறேன் என்று இதற்குப் பொருள். இதைப் பெரும்பாலும் திரும்பவும் சந்திக்க சந்தர்பமே இல்லாதவர் பிரிந்து செல்லும் போதோ அல்லது வெளி நாடு செல்லும் போதோ பயன்படுத்துவர். நான் உங்களை மீண்டும் சந்திக்கவே விரும்புகின்றேன். ஆனாலும் இந்தப் புத்தகத்தைப் பொறுத்த வரையில் விடை பெறும் நேரம் வந்து விட்டது.
நானும் இது வரை ஜப்பானைப் பற்றி பல விஷயங்களை உங்கள் முன் வைத்தேன்.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கும் முயற்சி திருவினையாக்கும் என்ற குறளுக்கும் மிகவும் குறிப்படத்தக்க முன் உதாரணமாக இருப்பது ஜப்பானும் ஜப்பானியரும் தான். எவ்வளவு தான் கஷ்டங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற ஒரே எண்ணத்தில் ஒவ்வொரு ஜப்பானியரும் உழைத்ததனால் தான் இன்றைய நிலைக்கு அவர்களால் உயர முடிந்தது.
ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகள் நிறையவே உண்டு. பணிவு தூய்மை கண்ணியம் நம்பிக்கை தரம் என்ற சிறந்த ஒழுக்க முறைகள் இன்று நாம் பெரும்பாலான ஜப்பானியர்களிடம் காணலாம். சிலர் தவறுகள் செய்தாலும் நாம் nhரும்பான்மையினரை எடுத்துக் கொண்டால் பண்பானவர்கள் ஜப்பானியர்கள் என்றே சொல்லலாம்.
அவர்கள் அனைவரும் செயல் வீரர்கள். கடின உமைப்பாளிகள் மிகவும் அமைதியாக இருந்து காரியம் சாதிக்க வல்லவர்கள். நான் பழகிய மனிதர்கள் அனைவருமே பண்பானவர்கள்; அன்பு மிகக் கொண்டவர்கள். ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால் ஜப்பானிய நண்பர்களைப் பெறுவது மிகவும் எளிது. மொழி தெரியாமல் இருந்தால் பழகுவது சற்றே கடினம் தான்.
என்னுடைய சிறு வயதுக் கனவு ஜப்பான் செல்வது. அதை அடைய எனக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. இருந்த போதும் கனவு மெய்ப்பட நான் பலவிதமான முயற்சிகளை மேற் கொண்டு இறுதியில் எப்படியோ வெற்றியும் பெற்றேன். அதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இருவர். என் கல்லூரிப் பேராசிரியை பாபை அவர்களுக்கும் யுடீமு-யுழுவுளு ஜப்பானிய அமைப்பின் தலைவரான திரு. ரெங்கநாதன் அவர்களுக்கும் நான் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர்களது ஆதரவும் ஊக்கமும் தான் இன்று உங்கள் கையில் என் புத்தகம் இருக்கக் காரணம்.
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதை நாம் அனைவரும் மனதில் கொண்டு பாடுபட வேண்டும். கனவுகள் காணுங்கள். அதே சமயம் அதை மெய்ப்பிக்க செயல் படவும் செய்யுங்கள். வெற்றி நம் பக்கமே.
ழூழூழூழூழூழூ
- ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி ? (கட்டுரை: 13)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் !
- தாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு !
- வாணவேடிக்கைகளூம், உள்ளிடுங்கிய அறைகளும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………..(10) த.ஜெயகாந்தன்
- சம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)
- திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
- கவிதைகள்
- ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.
- ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்
- காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)
- பங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு
- மகாத்மா காந்தியின் தவறுகள்
- தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு
- கவிதையின் அரசியல்– தேவதேவன்
- எண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்
- கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!
- வடக்கு வாசல் பக்தி இசைவிழா
- நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!
- கத்திரிக்காயும் பங்கும்..
- மொழியாக்கம்
- அப்பா வீடு
- ஜெகத் ஜால ஜப்பான்
- நினைவுகளின் தடத்தில் – (4)
- அரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்
- மாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47
- மீள்வு
- கவிதைகள்
- கீறல்பட்ட முகங்கள்
- மலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்!
- அம்மா
- சுகார்டோ