ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue


முக்கியமான மேற்கத்திய தத்துவவியலாளர்களிலேயே, மிகவும் புரிந்துகொள்ள முடியாதவர் என்று ஹெகலைத்தான் சொல்வார்கள்.

அவருக்கு முன்னாள் இருந்த இம்மானுவல் காண்ட் அவர்களை ஆழமாக விமர்சித்த ஹெகல், கார்ல் மார்க்சுக்கு முன்னோடி. மார்க்ஸின் மீதி ஹெகலின் பாதிப்பினால், ஹெகலின் சிந்தனை, 19ஆம், 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றை மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தது.

தற்போது ஜெர்மனியாக இருக்கும் பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். அவரது காலத்தில் இது பல்வேறு சுதந்திர தேசங்களாகப் பிரிவு பட்டிருந்தது. ‘இந்த யுகத்தின் மாபெரும் கொண்டாட்டம் ‘ என்று இவர் அழைத்த பிரஞ்சுப் புரட்சி இவரது இளமைக்காலத்தின் போது நிகழ்ந்தது. இவர் பலகாலம், தனி ஆசிரியராகவும் பிறகு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவர் புகழ் பெற்றபிறகு, இவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.கவர் இறந்த போது பெர்லின் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பேராசிரியராக இருந்தார். அன்று பெர்லின் பல்கலைக்கழகமே, புருஷ்ய மன்னராட்சியினால் ஆதரவளிக்கப்பட்டு, ஜெர்மானிய தேசங்களின் அறிவுத்தலைநகரமாக இருந்தது.

ஹெகல் பல நீண்ட அடர்த்தியான புத்தகங்களை எழுதினார். இவரது முக்கியமான புத்தகங்கள், ‘ஃபினாமனோலஜி ஆஃப் மைண்ட் ‘, ‘காரணகாரியத்தின் அறிவியல் ‘ ‘சரியான (வழியின்) தத்துவம் ‘ (The Phenomenology of Mind, The Science of Logic, and The Philosophy of Right.)ஆகியவை.

தத்துவ அறிவியலின் கலைக்களஞ்சியம் என்ற இவரது புத்தகம் இவரது சிந்தனை தத்துவத்தின் சுருக்கமான வெளிப்பாடு. இவரது பல சொற்பொழிவுகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவை வரலாற்றின் தத்துவம், மதத் தத்துவத்தின் மீதான உரைகள், தத்துவ வரலாற்றின் மீதான உரைகள் (Philosophy of History, Lectures on Aesthetics, Lectures on the Philosophy of Religion, and Lectures on the History of Philosophy ) ஆகியவை.

இவரது புத்தகங்களைப் படிப்பதில் வரும் சிரமம்., இவரது சிந்தனைக்குப் பழக்கமில்லாதவர்களுக்கு எந்தவிதச் சலுகையும் இல்லாத கடின நடை என்பதாலும், இவர் ஒரு முழுமையான உலகப்பார்வை கொண்டிருப்பதாலும் ஏற்படுகிறது. மேலும் இவரது நடை வாசகருக்குப் படிக்கக் கஷ்டமானது. நீண்ட வாக்கியங்களைப் புரிந்து கொள்வது மேம்போக்கான முறையில் படிப்பவருக்கு எரிச்சல் தரக்கூடியது. இதனால் பலர் இவரை ஏமாற்றுக்காரர் என்றும், இவரது மூடத்தனத்தை வேண்டுமென்றே கஷ்டமான வார்த்தைகளால் மூடிமறைத்து பெரிய ஆள் போலக்காட்டிக்கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இருப்பினும் இவரைக் கவனமாகப் பலமுறை படிக்கும் போது இவரது புத்தகங்களின் பொருள் தெளிவாகும். இவரது சிந்தனை முழுமையையையும் ஒப்புக் கொண்டு பின்பற்றுபவர்கள், இன்றைய நிலையில் மிகச் சிலரே. எனினும், பல பொருளாதார, தத்துவ, சமூக அரசியல் பிரசினைகளின் மீது அசலான பார்வையை அளித்தவர் ஹெகல்.

‘தத்துவத்தின் வரலாறு பற்றிய உரைகள் ‘ ஹெகல் சிந்தனைக்குச் சரியான நுழைவாயில் ஆகும். வரலாறு எப்படி மனித இயல்பை நெறிப்படுத்துகிறது என்ற பார்வை – மார்க்ஸால் மிகப் புகழப் பட்ட விதமாக – ஹெகல் உலகச் சிந்தனை மரபிற்கு அளித்த மிக முக்கிய பங்களிப்பு ஆகும். ஒரு தத்துவவாதி உலக வரலாற்றுச் சுருக்கத்தை ஏன் எழுத வேண்டும் என்று கேள்வி எழலாம்.ஹெகலைப் பொறுத்தவரையில் உலக வரலாறு என்பது, தத்துவவாதி புரிந்து கொண்டு , அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு கச்சாப் பொருள். வரலாறு ஓர் அறிவுபூர்வமான போக்கைக் கொண்டிருக்கிறது என்பதும், அதை ஆய்வதன் மூலமாக நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள இன்றைய உலகையும் புரிந்து கொள்ளலாம் என்பது ஹெகலின் பார்வை. வரலாறு அர்த்தமுள்ளது என்ற இந்தப் பார்வை உலகம் ஒரு நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது என்ற மதக் கோட்பாட்டை வேறு விதமாய்ப் பின்னியதெனத் தோற்றம் கொள்கிறது. சற்றே குறுகிய அர்த்தத்தில் வரலாறு செல்லும் திசையை நாம் அறிய முடிய்ம் என்றும், வரலாறு நாம் வரவேற்கத்தக்க, அறியக்கூடிய ஒரு குறிக்கோளை நோக்கி நகர்கிறது என்பதாகவும் புரிந்துகொள்ளலாம்.

வரலாற்றின் திசைவழி பற்றிய ஹெகலின் பார்வையை ‘வரலாற்றின் தத்துவத்தி ‘ற்கு முன்னுரையில் வரும் ஒரு புகழ்பெற்ற வாக்கியத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம் : ‘உலக வரலாறு என்பது சுதந்திரம் பற்றிய பிரக்ஞையின் வரலாறே தவிர வேறில்லை. ‘ ( ‘The history of the world is none other than the progress of the consciousness of freedom. ‘) இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாய்க் காட்டும் உதாரணங்கள் தான் இந்த நூல் முழுதிலும். சீனா, இந்தியா , பெர்சியா போன்ற நாடுகளிலிருந்து அவர் தொடங்குகிறார். இங்கெல்லாம் ஒரே ஒருவன் – அரசன் ஒருவன் தான் சுதந்திரமானவன். இந்த கொடுங்கோலர்களின் கீழ் இருந்த பிரஜைகள் அரசியல் சுதந்திரமற்றவர்கள் என்பது மட்டுமல்ல, எது சரி எது தவறு என்பது பற்றி சொந்தமாக ஒரு அபிப்பிராயத்தைத் தாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற பிரக்ஞை கூட இல்லாதவர்கள் என்கிறார் ஹெகல். கிரேக்கத்தில் தான் தனிமனித சிந்தனை என்ற கருத்துருவாக்கம் நிகழ்ந்தது. ஆனால் ஹெகல் பார்வையில் கிரேக்கர்களும் கூட நகர-நாட்டின் பழக்கங்களும், சம்பிரதாயங்களும் மேலாண்மை செலுத்த, தம்மைத் தனிமனிதர்களாய்ப் பார்க்கவில்லை. சாக்ரடாஸின் விமர்சனப் பார்வையில் தனிமனிதச் சிந்தனையின் பொறி உண்டு என்றாலும், புரொடெஸ்டண்ட் மதம் கொண்டுவந்த சீர்திருத்தம்தான் தனிமனிதன் தன் உய்வைத் தானே பெறமுடியும் என்றும், தனிமனித மனசாட்சியை அதன் இடத்தில் பொருத்தி, தனியுரிமை கொண்டதாய்ப் பார்க்கத் தொடங்கியது.

சீர்திருத்த காலம் தொடங்கி எழுந்த வரலாறு, உலகை தனிமனித சுதந்திரம் பற்றிய புதிதாய்க் கண்டடைந்த கோட்பாட்டின் படி எப்படி உருவாக்குவது என்ற வகையில் அமைந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சியில் உச்சமெய்திய , விழிப்புணர்வுக் காலம் வெறும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் எழுந்த அமைப்புகளை நீக்கி , அறிவு பூர்வமான வகையில் தனிமனிதர்களின் சுதந்திரத் தேர்வில் அமைக்கப்பெற்ற நிறுவனங்களை உருவாக்க முயன்றது. இதுவே தினசரி அரசியல் மற்றும் சமூக வாழ்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாய் அவர்களின் கருத்து அமைந்தது. ஹெகலைப் பொறுத்தவரை, இந்த முயற்சியின் அடிப்படை ‘இதயம் பெற்ற மகத்தான சூர்யோதயம் ‘. புரிதலை முதன்மைப் படுத்தி யதார்த்தம் கட்டமைக்கப்படவேண்டும் என்ற உணர்வு. இருந்தும் ஃபிரெஞ்சுப் புரட்சியாளர்கள் அறிவினை, இயந்திரத்தனமாய்ப் புரிந்துகொண்டு, உருவமற்றதாய் அறிவினைக் கருதி, அன்று இருந்த சமுதாயமும் அதன் உறுப்பினர்களும், எந்தப் பாரம்பரியத்தில் உருவானவர்கள் என்பதை உணர மறுத்தார்கள். அதனால் தான் விழிப்புணர்வு ஒன்றே போல் எங்கும் அர்த்தமெனக் கொண்டு, கில்லடின் (தலைசீவும் இயந்திரம்- மொ பெ) வரையில் கொடூரத் தீவிரம் பெற்றது. ஆனால் இப்போது எது தேவை என்று உணர்ந்த நாம், முழுமையான அறிவுபூர்வ உலகை- அதனால் உண்மையான சுதந்திரச் சமூகத்தை – உருவாக்கத் தயாராய் இருக்கிறோம் என்று ஹெகல் அறிவித்தார்.

ஹெகலின் சுதந்திரம் பற்றிய புரிதல் அவருடைய சிந்தனையின் மையக் கருத்தாகும். தாரளவாதச் சிந்தனையாளர்களில் முக்கியமான ஜான் ஸ்டூவர்ட் மில்லின் சுதந்திரம் பற்றிய புரிதல்களுடன் அதிகப் பரிச்சயம் உள்ள நவீன வாசகர்கள், ஹெகலின் கருத்துகள் குறித்துக் குழப்பமுறமும் வாய்ப்பு உண்டு. தாராளவாதக் கோட்பாட்டின் கீழ் சுதந்திரம் என்பது, நான் தனித்து விடப்பட வேண்டும், என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது, என் விருப்பப்படி என் தேர்வுகளை நான் அமைத்துக் கொள்ளலாம். (சுதந்திரம், நிர்ணயத் தன்னிச்சை, விடுதலை, அரசியல் சார்பின்மை). உதாரணமாக பொருளாதார நிபுணர்கள் சுதந்திரம் என்ற சொல்லைக் கிட்டத்தட்ட இப்படி உபயோகிக்கிறார்கள் – தனக்குப் பிடித்தமான பொருளை வாங்க நுகர்வோருக்கு எந்தத் தடையும் இல்லை என்ற பட்சத்தில். ஹெகல் இந்தப் பார்வையை மிகவும் மேம்போக்கான பார்வை என்று கருதுகிறார். இந்தப் பார்வை, மேலுக்குத் தெரியும் விபரத்திற்குக் கீழே சென்று, தனி மனிதர்கள் ஏன் இந்தத் தேர்வுகளை மேற்கொண்டார்கள் என்று ஆய்வதில்லை. பல சமயங்களில் இப்படிப்பட்ட தேர்வுகள், நம்மைக் கட்டுப்படுத்தும் வெளி சக்திகளால் கட்டுப்படுத்தப் படுகிறது எனக் கண்டார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பேயே, நவீன நுகர்வோர் கலாசாரத்தில் எப்படி ‘தேவைகள் ‘ உருவாக்கப் பட்டு ‘நிவர்த்திக்கப் படுகிறது ‘ என்று எழும் விமர்சனம் ஒத்ததாய் அவர் பார்வை இருந்தது. ‘சொகுசு ‘களின் தேவைகள் நமக்குள் எழாமல் எப்படி, அந்தத் தேவைகளை உருவாக்கி லாபம் ஈட்டுவோரால் பரப்பப் படுகிறது என்பது பற்றிச் சொன்னார்.

இப்படிப்பட்ட விடைகளுக்கு, வரலாற்றை நம் விருப்பங்களையும், நம் இயற்கையையுமே வடிவமைக்கும் ஒரு இயங்கும் முறையாக ஹெகல் அறிந்துகொண்டதுதான் அடிப்படை. ஆகவே, நம் விருப்பங்களை மற்றவர்களது இடையூறுகளின்றி தன்னந்தனியே உருவாக்கிக்கொள்வது என்பது சுதந்திரமல்ல. நம் காலத்தின் வரலாற்று ரீதியான சக்திகளால் நம்மை நாமே கட்டிக்கொள்வதுதான் அது. உண்மையான சுதந்திரமென்பது, இப்படிப்பட்ட வரலாற்று ரீதியான சக்திகள் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்காமல், நாம் வரலாற்று ரீதியான சக்திகளை கட்டுப்படுத்துவதுதான் அது. இது எப்படி நடக்க முடியும் ? ஒன்றுக்கொன்று முரணான எண்ணங்களையும் கொள்கைகளையும் கொண்ட தனித்தனி மனிதர்களாக நம்மை நாமே பார்த்துக்கொண்டு, மற்றவர்களை நம்மிலிருந்து வேறுபட்டவர்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் வரைக்கும் நாம் நம் சுதந்திரத்தை நாமே கட்டுப்படுத்திக்கொள்கிறோம். தாராளவாத பாரம்பரியத்தின் நோக்குப்படி, இப்படித்தான் உலகம் இருக்கிறது; இதை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. எல்லா மனிதர்களுக்கும் காரணகாரியம் பார்க்கும் பொதுவான அறிவு இருப்பதன் காரணமாக, இந்தப் பிரச்னை ஹெகலுக்குத் தீர்ந்துவிடுகிறது. ஆகவே, ஒரு சமூகம், அறிவுப்பூர்வமாகக் கட்டப்படும்போது, ஒவ்வொரு மனிதனும் அதனை ஒப்புக்கொள்ள முடியும்; அது தனக்கு அந்நியமானதாக அல்ல; அவன் தனது அறிவுப்பூர்வமான சுதந்திர எண்ணத்தால்; விருப்பத்தால். நமது கடமையும், நம் தனிமனித விருப்பமும் ஒன்றிணைகின்றன. ஏனெனில் நம் கடமை அறிவின் அடிப்படையில் உருவானது. நம் உண்மையான ஆர்வம், நம்மை ஒரு அறிவுப்பூர்வமான உயிராக நம் இயற்கையை உணர்வது.

நாம் அறிவுபூர்வமாய் செயல்படும்போதுதான் உண்மையில் சுதந்திரமாய் இருக்கிறோம் என்ற கருத்தில் ஹெகல் காண்ட்-இன் கருத்துடன் உடன்படுகிறார். நம் கடமையும் அறிவுக்குப் பொருந்தவேண்டும் என்ற கருத்திலும் காண்ட்-இன் கருத்துடன் உடன்படுகிறார். ஆனால் தூய அறிவினால் பெறப்படும் ஒழுக்கம் என்ற கருத்துடன் உடன் படுவதில்லை. அதனில் உள்ளடக்கம் இல்லை என்று விமர்சிக்கிறார். காண்ட்-இன் பார்வையில் மனிதர்கள் கடமைக்கும், தம் ஈடுபாட்டுக்கும் இடையே உள்ள முரண்பாட்டில் உழல்பவர்கள். தம் விருப்பங்களை அவர்கள் அடக்கித் தான் ஆகவேண்டும். நாம் வாழும் காலகட்டத்தின் சூழலுக்குத் தக்க , நாம் சமுதாய உயிரியாய் இருப்பதால், இயல்பாய் ஏற்றுக் கொண்ட கடமை உணர்வுகளுடன் கூட , காண்ட்-இன் தூய அறிவொழுக்கமும் இணைய வேண்டும் என்பது ஹெகலின் கருத்தாய் இருந்தது. ஹெகல் வேண்டிய ஒருங்கிணைவு (synthesis) ஸ்தூலமான ஒழுக்க இயல்பையும், அறிவுபூர்வமான மனத்தையும் இணைத்தது. இந்த ஒருங்கிணைவு அடையப் பெற்றால், தனிமனிதத் திருப்திகொண்ட மனிதர்கள், சமூக முழுமைக்கும் தம் பங்களிப்பைத் தரவல்லவர்களாய் இருப்பார்கள். அகவயமாகவும் நாம் சுதந்திரமாய் இருப்போம் : நாம் விரும்பியதைச் செய்ய முடியும் என்பதால். புறவயமாகவும் சுதந்திரமாய் இருப்போம் ஏனென்றால் நாம் வரலாற்றை உருவாக்க முடியும். வரலாறு நம்மை இழுத்துச் செல்லாது. இதுவே உண்மையான அறிவுப்பூர்வமான நிலை; இது தனிமனித சுதந்திரத்தையும், சமூக நெறிகளையும் ஒன்றுக்கொன்று சமமாக்கி இணைக்கிறது.

‘சரியான வழியின் தத்துவம் ‘ (The Philosophy of Right) நூலில், அறிவுபூர்வமான சமூகத்தைப் பற்றி சொல்லும்போது, அன்றிருந்த ப்ரூஸிய மன்னராட்சியை ஒத்த ஒன்றாய் அதனைக் குறிக்கிறார் – இதனால் ஷோபனாவர் (Schopenhauer) ஹெகல் தன்னை விற்றுக்கொண்டுவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார். ஹெகலின் மரணத்திற்குப் பிறகு , இளம் ஹெகலியர்கள் (மார்க்ஸ் இதன் உறுப்பினராய் சிலகாலம் இருந்ததுண்டு ) ‘சரியான வழியின் தத்துவம் ‘ நூலில் ஹெகல் தன் தத்துவத்தின் சாராம்சத்திற்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று கருதினார்கள். ஹெகலின் உண்மையான கருத்துகளுக்கு விசுவாசமான ஒரு கருத்துருவத்தை தாம் உருவாக்க முனைந்தார்கள். இந்தக் குழுவினரில் தான் மதம் பற்றிய விமர்சனத்தை அளித்த ப்ரூனோ பாயர், ( Bruno Bauer) லுட்விக் ஃபாரன்பாக் (Ludwig Feuerbach) ஆகியோ இருந்தனர். மக்ஸ் ஸ்டிர்னர் தனிமனித அராஜகம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். மார்க்ஸ்-இன் முற்காலத்துப் படைப்புகளான ‘ பொருளாதார தத்துவக் குறிப்புகள் ‘ (1844) ‘ஜெர்மன் கருத்தியல் ‘ இப்படி எழுந்தவையே.

சமீப காலத்தில் கார்ல் பொப்பர் ஹெகலை இன்றைய சர்வாதிகாரத்தின் தத்துவ முன்னோடியாய்க் காண்கிறார். பொப்பரின் வாதம் இப்படிச் செல்கிறது : அறிவுபூர்வமான அரசு என்ற கருத்தாக்கத்தினைத் தொடர்ந்து, அறிவுபூர்வமற்ற தேர்வுகள் உண்மையில் சுதந்திரத் தேர்வு என்பதை மறுக்கிற ஹெகலின் கருத்து, சர்வாதிகாரிகள் தம்முடைய கொடுங்கோன்மையை நியாயப் படுத்த , பிரஜைகளை சுதந்திரமய் இருக்கக் கட்டாயப் படுத்த வேண்டும் என்பதாய் வளைத்துக் கொள்ள இடம் கொடுத்தது. இப்படிப்பட்ட புரிதல் தவறு என்றாலும், ஹெகலின் கருத்து இப்படிப்பட்ட தவறான புரிதலுக்கு இடமளிக்கிறது. ஹெகல் சட்டபூர்வமான மன்னராட்சி, சட்டத்திற்கு இணங்கின அரசாட்சி, ஜ்ஊரிகளின் முன் வழக்காடுவது, (அவர்காலத்தின் தரங்களை முன்னிறுத்தினால்) வெளிப்பாட்டுச் சுதந்திரம் இவற்றை ஆதரித்தார். ஹிட்லர், ஸ்டாலின் அமைத்த அரசுகளை அவர் அறிவு பூர்வமான அரசாகவும், அதன் கீழ் இருந்த மக்களை சுதந்திரமானவர்கள் என்றும் கருதியிருக்கவே மாட்டார்.

இருந்தும் ஹெகலின் தத்துவத்தின் உண்மையான பிரசினையை கார்ல் பொப்பர் தொட்டு விடுகிறார். மனிதர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்க முடியும் என்பதில் ஹெகலுக்கு அபார நம்பிக்கை. அதனால் அறிவுபூர்வமான, ஒரேதரத்திய சமுதாயத்தை அமைக்க முடியும் என்று நம்பினார். அவருடைய அருவத் தத்துவத்தில் , அவர் ‘Geist ‘ -இல் கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை அவருக்கு சாத்தியமாயிற்று. Geist என்ற ஜெர்மன் வார்த்தையை , மனம் அல்லது ஆன்மா என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். ஆன்மா என்று அர்த்தப் படுத்திக் கொள்ளும்போது மதம் சார்ந்த சொல்லாடல் ஆகிறது. ‘மனம் ‘ என்கையில், பெளதீக நிலைக்கு எதிராக, மூளை அல்லது உணர்வு சம்பந்தப்பட்ட சொல்லாகிறது. இந்த ஜெர்மன் வார்த்தை இப்படி இரு விதமாகவும் அர்த்தம் கொள்வதால், ஹெகல் ஒரு கூட்டுமனம் வரலாற்றின் ஊடாகச் செயல்பட்டு வந்தபடியாகவும், தனிமனிதர்கள் அந்தக் கூட்டுமனத்தின் அங்கங்களாகவும் காண்கிறார். ஹெகல் இதனால், வரலாற்றைப் பயில்வது என்பது Geist-இன் இயல்பை அறிவதாகக் கொள்கிறார். அறிவுபூர்வ நிலை என்பது இந்த Geist-இன் ஸ்தூல வெளிப்பாடாய்க் காண்கிறார்.

ஹெகலின் மாபெரும் படைப்பு : ‘The Phenomonology of Mind ‘ ( ‘Mind என்பது இங்கு Geist-க்கு இணையாய் பயன் படுத்தப் படுகிறது.) மார்க்ஸ் இந்தப் படைப்பை ‘ஹெகலின் தத்துவத்தின் ரகசியம் என்றும் , பிறப்பிடம் என்றும் குறிப்பிடுகிறார். ஹெகல் இந்தப் படைப்பில் , இதுவரையில் நிகழ்ந்த மனித அறிவு வளர்ச்சி என்பது, Geist தன்னைத் தானே அறிந்து கொள்ளும் தர்க்க ரீதியான முயற்சி தான் என்கிறார். இந்த வளர்ச்சி, தருக்கவியலின் சம்பிரதாயமான தருக்கமல்ல, மாறாக ஹெகலுக்கே உரித்தான இயங்கியல் தருக்கம். இயங்கியல் தர்க்கத்தில், நாம் ஒரு நிலைபாட்டில் தொடங்குகிறோம் – உதாரணமாக் கிரேக்கத்தின் சம்பிரதாய ஒழுக்கவியல். பிறகு இந்தநிலைபாடு, அதன் அழிவுக்குத் தன்னுள்ளேயே விதைகளைக் கொண்டுள்ளதெனக் காண்கிறோம்- உள் முரண்பாடு கொண்டு: உதாரணமாக சாக்ரடாஸைக் கேள்விக்குள்ளாக்கும்போது, சம்பிரதாய ஒழுக்கவியல் சிதைந்து போய், சீர்திருத்தக் (Reformation) காலத்தின் போது , தனிமனித மனசாட்சி மட்டுமே ஒழுக்கவியலின் அடிப்படையாகக் காண்கிறோம். ஆனால், இதுவும் கூட ஒருதலைப்பட்சமானதே, அதனால் நிலைத்திருக்க இயலாதது, இதனால் ஒரு மூன்றாவது நிலையை நோக்கி நகர வேண்டும் – அதாவது அறிவுபூர்வமான சமுதாயம் நோக்கி. இந்த மூன்றாம் நிலை முதல் இரண்டு நிலைகளின் நேர்மறை (positive) அம்சங்களைக் கொண்டு விளங்கும்.

இந்த இயங்கியல் சிலவேளை, கருதுகோளிலிருந்து,(Thesis) எதிர்க்கருதுகோள் (Anti-thesis) பின்பு இவ்விரண்டும் இணைந்த கருதுகோள் (Synthesis) நோக்கி நகரும் இயக்கமாய் அறியப்படும். மேலே தந்த உதாரணத்தில் கிரேக்க ஒழுக்கவியல் கருதுகோள் எனில், புரொடஸ்டண்ட் தனிமனித மனசாட்சி சார்ந்த ஒழுக்கவியல் எதிர்க் கருதுகோள். அறிவுபூர்வமான சமுதாயம் என்பது இணைந்த கருதுகோள். ஹெகலின் வரலாற்றுத் தத்துவத்தில் இந்த இறுதி நிலை முடிவான இணைந்த கருதுகோள் ஆகும். ஆனால் மற்ற சில வேளைகளில், இவ்வாறு உருவான இணைந்த கருதுகோள் (Synthesis) அடுத்த புதிய இயங்கியலுக்கு ஆரம்ப கருதுகோளாக ஆகும். தன்னுடைய ‘காரணகாரியங்களின் அறிவியல் ‘ புத்தகத்தில், இதே முறையைப் பின்பற்றி நாம் சிந்திக்கும் அருவமான கருத்தாங்களை ஆராய்கிறார். இங்கே ஹெகல், இருத்தலின் அடிப்படையோடு தொடங்கி, அந்த அடிப்படை இருத்தல் எந்த விதமான உள்ளடக்கத்துடனும் இல்லாமல் இருப்பதால், அது ஒரு இருத்தலே அல்ல என்று வாதிடுகிறார். ஆகவே, இது ஒன்றுமில்லாதது. இது இருத்தலின் எதிர் கருதுகோள். இருத்தலும், இல்லாததும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ந்து விலகிச் சென்று கொண்டிருப்பவை. இவைகளை ஒன்றாகச் சேர்க்க ‘உருவாதல் ‘ becoming என்ற இணைந்த கருதுகோள் வேண்டும். இயங்கியல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்து பல படிகளில், கலப்பற்ற ஆதர்சவாதத்தின் (absolute idealism) தேவைப் பற்றி விளக்க முடிகிறது என்று ஹெகல் வாதிடுகிறார். அதாவது அடிப்படையில் மிக மிக உண்மையானது என்பது கலப்பற்ற கருத்துருவம் (absolute idea) மட்டுமே, அதாவது geist என்னும் மனம். அதை அறிவதே உண்மையை அறிவது.

கலப்பற்ற ஆதர்சவாதம் ( absolute idealism) விசித்திரமெனத் தோன்றலாம், ஆனால் ஹெகல் மட்டுமே அதை முன்னிறுத்தியவரல்ல. காண்ட் இவருக்கு முன்பே வாதிட்டார் : ‘ மனம் என்பதே அறியப்பட்ட பிரபஞ்சம் தான். நாம் நம்முடைய ஆக்கத்தின் சட்டகத்தினால் தான் பொருட்களை அறிய முடியும் – அதாவது காலம், இடம், பொருள் கொண்டு . ‘ இந்தப் பகுப்புகளைத் தாண்டியும் ‘தனக்குள் முழுமை பெற்ற பொருள் (thing-in-itself) ‘ ஒன்று இருக்கமுடியும் , ஆனால் அதை அறிவதற்கில்லை என்றார் அவர். ‘தனக்குள் முழுமை பெற்ற பொருள் ‘ என்பதை மறுத்துவிட்டு ஹெகல், அறிய முடிந்தது பற்றி மட்டுமே பேசமுடியும் என்று சொல்லி, முன்பு யோஹான் ஃபிக்ஸ்ட் (Johann Fichte) என்பவர் காண்ட் மீது வைத்த விமர்சனத்தைத் தொடருகிறார்.

Both The Phenomenology of Mind and The Science of Logic, then, have the same process as their subject, the process of Mind coming to know itself as ultimate reality. In the Phenomenology this process is presented by an attempt to show the logical necessity inherent in the historical development of human consciousness. In the Logic it is shown as a pure dialectical necessity, as (Hegel tells us) showing ‘God as he is in his eternal essence, before the creation of nature and of a finite mind ‘. The Logic is, therefore, by far the more abstract and difficult work. The Phenomenology is, by comparison (but only by comparison), a gripping account of how the finite minds of human beings progress to a point at which they can see that the world beyond them is not alien or hostile to them, but a part of themselves. This is so, because Mind alone is all that is real, and each finite mind is a part of Mind.

The Phenomenology of Mind -ம் சரி ‘தத்துவத்தின் விஞ்ஞானமும் ‘ ( அல்லது காரணகாரியத்தின் அறிவியல் The science of Logic)சரி, இரண்டுமே, geist என்ற அகில மனத்தை தன்னைத்தானே ‘முழுமையான அறியவேண்டிய பொருளாக ‘ அறிந்துகொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டையே கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியான மனித மனத்தின் வளர்ச்சியின் உச்சம் இந்த முறையை அறிந்து கொள்வதே என்று ஹெகல் தன் புத்தகத்தில் கூறுகிறார். காரணகாரிய அறிவு என்பது, ‘இயற்கை உருவாவதற்கும், தனி மனித மனம் உருவாவதற்கும் முன்னரான, ஆதாரமான நிரந்தரமான பொருளாக கடவுளை ‘ காட்டுவதே என்று ஹெகல் கூறுகிறார். ஆகவே, இந்த காரண காரிய அறிவு என்பதே அருவமானதும் கடினமானதுமான வேலை. இவரின் Phenomenology என்பது, எவ்வாறு தனிமனித மனங்கள் கொண்ட தனி மனிதர்கள் தாங்கள் முன்னேறி, தங்களைத் தாண்டி இருக்கும் உலகம், தனக்கு அந்நியமானதாகவும், விரோதமானதாகவும் இல்லை என்பதை உணர்வதும், அது தனக்குள்ளே ஒரு பகுதியாக இருப்பதை உணர்வதையுமே விவரிக்கிறது. ஏனெனில், அகில மனம் மட்டுமே உண்மை, தனிமனித மனங்கள் அந்த அகில மனத்தின் பகுதிதான்.

Phenomenology-இன் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு பொருள் புரிந்து கொள்வது முழுமை பெற்றபின்பு, அதைப் புரிந்து கொள்ளும் முறைமை பற்றி ஆராய முற்படுகிறது. அனைத்து வரலாற்றின் குறிக்கோள், geist என்ற மனம் என்பது மட்டுமே அறிய வேண்டிய ஒரே பொருள் என்று அறிவது. எப்போது இந்த புரிதல் முதன் முதலில் நடக்கிறது ? ஹெகலைப் பொறுத்தமட்டில், ஹெகலில் கடைசிப்பக்கங்களே geist மனம் அறிந்து கொள்ளப்பட்டுவிட்டதன் உச்சம். தனித்தனி மனங்கள் உருவானதிலிருந்து தொடர்ந்த முறை, அவரது புத்தகங்களில் முடிவு பெறுகிறது.

In the light of Hegel ‘s belief that all finite minds share in a greater underlying reality, we can appreciate why he should have believed in the possibility of a form of society that transcended all conflicts between the individual and the collective, and was truly free while at the same time in no sense anarchic. We can also see why this belief should have made it possible for Hegel ‘s ideas to lead some of his successors, Marx among them, to a similarly misplaced optimism about the possibility of avoiding such conflicts. For while Marx claimed to have rejected the ‘mysticism ‘ in which Hegel enveloped his system, Marx never freed himself from the conviction that history is tending toward a final destination in which there will be complete harmony between the interests of the individual and the common interests of the community. That is why he believed that communism would be a condition in which everyone freely advanced the common interests of all.

எல்லா தனிமனித மனங்களும் அடிப்படையில் ஒரு அகில மனத்தை பங்கிட்டுக்கொள்கின்றன என்ற ஹெகலின் நம்பிக்கை காரணமாக அவர், தனிமனிதர்களும், சமூகமும் இவர்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தாண்டி, சுதந்திர விருப்பத்தின் பேரில் முரண்பாடுகளற்ற சமூகமாக ஆவதற்கான சாத்தியத்தையும் அவர் நம்பினார். ஏன் இந்த நம்பிக்கை அவரது சீடர்களான மார்க்ஸ் போன்றோருக்கும் வந்து, இப்படிப்பட்ட முரண்பாடுகளை தவிர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கைக்கும் இட்டுச் சென்றது. ஹெகலிடம் இருக்கும் மாயாவாதத்தை மார்க்ஸ் மறுதலித்தாலும், வரலாறு தவிர்க்க முடியாமல் ஒரு இறுதி குறிக்கோளை நோக்கிச் செல்கிறது என்றும், அங்கு தனிமனிதனின் ஆர்வங்களுக்கும் சமூகத்தின் ஆர்வங்களுக்கும் இடையே முரண்பாடற்ற உன்னத உறவு நிலவும் என்ற ஹெகலின் நம்பிக்கையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை. அதனாலேயே, அவர் எல்லோரும், எல்லோருக்குமான பொது ஆர்வங்களையும் நன்மைகளையும் முன்னெடுத்துச் செல்லும் நிலையே கம்யூனிஸம் என்று நம்பினார்.

**

Bibliography G. W. F. Hegel, Hegel ‘s Phenomenology of Spirit, tr. A. V. Miller (Oxford, 1977).

G. W. F. Hegel, Hegel ‘s Philosophy of Right, tr. T. M. Knox (Oxford, 1967).

G. W. F. Hegel, Hegel ‘s Science of Logic, tr. A. V. Miller (London, 1969).

G. W. F. Hegel, Lectures on the Philosophy of History, tr. J. Sibree (New York, 1956).

Michael Inwood, A Hegel Dictionary (Oxford, 1992).

Michael Inwood, Hegel (London, 1983).

Richard Norman, Hegel ‘s Phenomenology: A Philosophical Introduction (Brighton, 1976).

Peter Singer, Hegel (Oxford, 1983).

Robert Solomon, In the Spirit of Hegel (New York, 1983).

Charles Taylor, Hegel (Cambridge, 1979).

The Oxford Companion to Philosophy, © Oxford University Press 1995

Series Navigation

செய்தி

செய்தி