சொல்புதிது’ இலக்கியவிழா

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue



‘சொல்புதிது’ என்ற அமைப்பின் ஆதரவுடன் ‘இலக்கிய ஞாயிறு’ ஒன்று பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் கடந்த 19-9-2010 இனிதாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கேற்ற திருமதி பூங்குழலிபெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா ஆரம்பமானது. தொடக்கவிழாவிற்கு திரு அலன் ஆனந்தன் தலைமைதாங்க திரு பொன்னம்பலம் வரவேற்றார். பாரீஸிலிருந்த பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள்: திரு இலங்கைவேந்தன், திரு ஓஷ் ராமலிங்கம், திரு பாரிஸ் பார்த்தசாரதி, திரு அண்ணாமலை பாஸ்க்கர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கவிச்சித்தர் கணகபிலனார் ‘சொல்புதிது’ என்ற தலைப்பில் கவியுரை வழங்கினார். காலை நிகழ்வாக கவிஞர் மனோரமா பிஸ்வாஸ் அவர்கள் ஒரியா மொழி கவிதைத் தொகுப்பின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. தொகுதியை வெளியிட்டவர் ஸ்ட்ற்றாஸ்பூர் துணைமேயர். நிகழ்ச்சியில் கவிஞர்கள் திரு சவியே தெபெல், திரு பிரான்சிஸ் மனே, திருமதி பிரான்சுவாஸ்மனே, ஸ்ட்ராஸ்பூர் பல்கலைகழக பேராசிரியர் திரு பூவாச்சி ஜெசெப், இந்தியச் சங்கத்தின் தலைவர் திரு.குப்தா கலந்துகொண்டு கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினர்.

பிற்பகல் நிகழ்வு திரு.பாக்கியராஜ் குவினரின் தமிழிசைப் பாடலுடன் தொடங்கியது. இந்தியாவிலிருந்து வந்திருந்த நவீன ஓவியர் திரு.ஏ.வி.இளங்கோ தமது ஓவியங்களில் திராவிடக் கலைகளின் தாக்கம் குறித்து ஓவியகங்களுடாக விளக்கினார். தொடர்ந்து ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்ற தலைப்பில் திரு தலிஞ்சான் முருகையன், திருமதி லூசியா லெபோ, திரு பாலகிருஷ்ணன், திரு நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கவிஞரும் கலைவிமர்சகருமான விருந்தினர் திரு இந்திரன் தமிழில் அழகியல் குறித்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பேராசியர் பெஞ்சமின் தலைமையில் சிலப்பதிகார பொருளினை அடிப்படையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் ‘கோவலன் தலை சிறந்தவனே’ என்ற அணியில் திரு கோவிந்தசாமி செயராமன், திரு கியோம் துய்மோன், திரு மதிவாணன் ஆகியோரும்; ‘கோவலன் நிலை இழிந்தவவனே’, என்ற அணிசார்ந்து திருமதி பூங்குழலி பெருமாள், திருமதி லூசியா லெபோ, திருமதி உஷா நடராசன் ஆகியோர் பேசினர்.திரு லூர்துநாதன் நன்றிகூற விழா இனிதே முடிந்தது.

———————————————-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு