சென்னை இலக்கிய நிகழ்வுகள் -`எழுத்தாளர் மா. அரங்கநாதனின் படைப்புலகம்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

லதா ராமகிருஷ்ணன்


ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். `பொருளின் பொருள் கவிதை` என்ற கட்டுரை நூல், வீடுபேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள், பறளியாற்று மாந்தர் என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி, தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் `மூன்றில்` என்ற சிற்றிதழின் நிறுவனர் – ஆசிரியர் மற்றும் `மூன்றில்` என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்தனை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17.4.04 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமரந்த்தா, வெளி ரெங்கராஷன், லதா ராமகிருஷ்ணன் மா.அரங்கநாதனின் படைப்புத்திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது.

கூட்டத்தில் மா.அரங்கநாதனின், படைப்புலகம் பற்றியும், அவருடைய `மூன்றில்` சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பு குறித்தும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மூன்றில் ஏறத்தாழ 20 இதழ்களுக்கு மேல் வெளியாகியது. பலதரப்பட்ட இலக்கிய போக்குகளுக்கும் அது இடமளித்தது. அதன் முதல் சில இதழ்களுக்கு திரு. க.நா.ச ஆசிரியராக இயங்கினார். `மூன்றில்` சார்பில் நடத்தப்பட்ட மூன்று நாள் இலக்கியக் கருத்தரங்கம் `திவீக்ஷீst ஷீயீ வீts ரிவீஸீபீ` என்று சொன்னால் மிகையாகாது. மேலும் மூன்றில் என்பது வெறும் இலக்கிய இதழாக மட்டும் செயல்படாமல், ஒரு சிறுபத்திரிகை இயக்கமாகவும் செயல்பட்டது. மூன்றில் பதிப்பகம் மூலம் நல்ல பல புத்தகங்கள் வெளியாகின. மறைந்த எழுத்தாளர் கோபிக்கிருஷ்ணனின் `சமூகப்பணி-அ-சமூகப்பணி-எதிர்-சமூகப்பணி` மற்றும் `உள்ளேயிருந்து சில குரல்கள் முதலிய புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் இயங்கிய மூன்றில் அலுவலகம் இலக்கியவாதிகள் இளைப்பாறும், உத்வேகம் பெறும் இடமாக இருந்தது என்னால் மிகையாகாது என்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் நெகிழ்வோடு நினைவுகூர்ந்தார்கள்.

ரவி சுப்ரமணியம், சா.கந்தசாமி, பாரதிராமன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, எம்.ஜி.சுரேஷ், திருநாவுக்கரசு, ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், சிபிச் செல்வன், காவியா ஜண்முக சுந்தரம் முதலிய பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். திரு. அரங்கநாதன் 17வயதுப் பையனாக சென்னையில் காலடியெடுத்து வைத்து கன்னிமரா நூலகமே கதியாகக் கிடந்து அறிவைப் பெருக்கிக் கொண்ட அந்த நாள் ஞாபகங்களை ஆழமாக எடுத்துரைத்தார். அவரோடு மூன்றில் நடத்தத் துணையாக நின்ற அவர் மகன் மகாதேவன் விலகிய பார்வையில் தந்தையை ஒரு படைப்பாளியாகப் பார்த்து கருத்துக்களை முன் வைத்த விதம் குறிப்பிடத்தக்கது.

-தகவல லதா ராமகிருஷ்ணன்

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்