செங்கல்லா கனக்குதடி…

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பனசை நடராஜன்


செல்லம்மா, சிணுங்கலா
சிரிச்சுப் பேச நீ அழைச்சா
மெல்லிசையால என்னிடம்
மெதுவாக சொல்லிவிடும்!
‘சுள் ‘ளுன்னு கோபத்தோட
சூடாகி நீ கத்தினா
பொல்லாப்பு வேணாம்னு
‘பொசுக் ‘குன்னு ஆப் ஆகும்!
சொல்லாம என்னை பார்க்க- நீ
தூரத்தில் வரும்போதே
துள்ளலிசை அலாரத்தால் என்
தூக்கத்தைக் கலைத்து விடும்!
வெள்ளமா வந்து விழும்
வேண்டாத ‘எஸ் எம் எஸ் ‘ ஐ
தள்ளி விட்டு, நீ அனுப்பும்
வெல்லக்கட்டி சொல்லை மட்டும்
சல்லடைபோல் சலித்தெடுத்து
உள்ளுக்குள்ள சேர்த்து வைக்கும்!
மல்லிகையே மரிக்கொழுந்தே
பல்லக்கேன்னு எல்லாம்- பொய்
சொல்லி சொல்லி அலுத்துப் போய்
சும்மா விளையாட்டுக்கு- நான்
வில்லங்கமாக் கேலிப்பேச..,
விளங்கிக்காம என்கிட்ட
மல்லுக்கு நின்னுகிட்டு- நீ
மாசக்கணக்காப் பேசததால
செங்கல்லா கனக்குதடி-என்
செல்போன்!!!
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
(feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்