சுவர்களின் கவிதைகள்.

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

ரமேஷ்.


ஓயாமல் சுவர்களுடன்
பேசிக் கொண்டிருக்கிறேன்
தனிமையைத் தவிர்க்கவும்
விசும்பல்களைக் கேட்காதிருக்கவும்.

* * *
ஜன்னலில் தெறித்து வழியும்
ரத்தத் துளிகளுக்காய்
ததும்பித் ததும்பி
துடித்து தவித்து
கனக்கும் ஒரு முகம்…
‘வெற்றி! ‘-
பல் காட்டிக் கெக்கலிக்கும்
முகங்களோடு முகம் புதைத்து
நகைக்கும் மறுகணம்.

* * *

Series Navigation

ரமேஷ்

ரமேஷ்