சு.ராவுக்கு கனடாவில் ‘இயல் ‘ விருது

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue


கனடாவைச் சார்ந்த ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் ( University of Toronto ) அங்கமாகிய Centre for South Asian Studies, கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் இணைந்து, தமிழகத்தின் முக்கிய படைப்பாளியாகிய திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு இந்த வருடம் விருது கொடுத்து கெளரவிக்கிறது. இந்த விழா மேற்படி பல்கலைக் கழகத்தில் விரைவில் நடைபெற இருக்கிறது.

பல்கலைக் கழக தலைமைப் பீடம் இந்த விழாவில் திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு ‘ இயல் ‘ விருதும், பணமுடிப்பு $1500 ம் வழங்கும். இது அவர் தன் வாழ்நாளில் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய சேவைக்காக தரப்படுகிறது. திரு சுந்தர ராமசாமி, மேற்படி மையம் நடாத்தும் மேன்மையான படைப்பாளிகள் பேச்சுத்தொடாில், ஒரு சிறப்புரை வழங்கி இந்த விருதினை பெறுவார்.

திரு சு.ராவின் படைப்புகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக தரத்தில் பேசப்படுபவை. அவருடைய இலக்கியப் பட்டியலில் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே: சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல்களும், காகங்கள் சிறுகதைத் தொகுப்பும், ஒரு கவிதைத் தொகுப்பும், செம்மீன், தோட்டியின் மகன் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், மற்றும் காற்றில் கலந்த பேரோசை, விாிவும் ஆழமும் தேடி, ந. பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனித நேயமும், தமிழகத்தில் கல்வி: வே.வசந்த தேவியுடன் ஓர் உரையாடல் போன்ற படைப்புகளும் அடங்கும்.

இந்த விருதில் இன்னொரு விசேஷமான அம்சம் உண்டு; ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றி வரும் திரு சுந்தர ராமசாமிக்கு இந்த மாதத்துடன் 70 வது பிராயம் நிறைவுபெறுகிறது. இந்த விருது இப்படியான ஒரு நல்ல தருணத்தில் கிடைப்பது மிகவும் பொருத்தமானதே. இது அவருக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் மாியாதை ஆகும்.

விழாவில் கலந்து கொள்ள கனடா, அமொிக்கா உட்பட பல நாடுகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

-செய்தி – அப்பாத்துரை முத்துலிங்கம்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு