ருத்ரா
மி்ன்னணு யுகம்
சில மி்ன் மி்னிப்பூச்சிகளை
தந்தது.
சிட்டுக்குருவியே
நீ அல்லவா
இந்த தமி்ழ்க்கூட்டில்
அதை அடைத்துவைத்து
விஞ்ஞான வெளிச்சத்தின்
இலக்கிய வெள்ளத்தை
பாயவிட்டாய்.
தேர்தல் காலத்து
எலிப்பொறியாய் இருந்த
ஒரு எந்திரத்தை
ஜன நாயகத்தின்
கணிப்பொறியாக்கி
வாக்குச்சீட்டுகளுக்கு
வாய் திறந்தாய்.
தமி்ழ் நாவல்கள்
உன் எழுத்துகளில்
புதிய உடை தரித்தது.
பாவாடை தாவணிகள்
சுடிதார்களில்
பூத்திருக்கலாம்.
காதல் என்பது
கத்தரிக்காய் தான் என்றாலும்
அதை
ஈடன் தோட்டத்திலிருந்து
பறித்து தந்தவன் நீ.
அது
சைத்தான் வேலையா
கடவுள் வேலையா
என்பதையும்
வினோதமாக சொன்னவன் நீ
டி.என்.ஏ யும் ஆர்.என்.ஏ யும்
செய்த அந்த ரசாயனக்கூட்டணிக்கு
கலித்தொகையும் குறுந்தொகையும் கூட
கூட்டாக குறும்பு செய்தன
என்று கரும்புத்தமி்ழ் நீ
பிழிந்து தந்ததையும்
நாங்கள் நன்கு சுவைத்திருக்கிறோம்.
துப்பறியும் துப்பாக்கிகளோடு
ஒரு ஆல்ப்ரட் ஹிச்காக்காக
வலம் வந்த நீ
அப்புறம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாய்
பரிணமி்த்துக்கொண்டாயே!
அப்புறம்
விஞ்ஞான விந்தைகள்
எத்தனை எத்தனை
நீ காட்டியிருக்கிறாய்.
.
ராமாயணமும் மகாபாரதமும்
நமக்கு
கதை சொல்லிக்கொண்டிருக்கட்டும்.
ஆட்சேபணையில்லை.
அதற்காக
இத்தனை ராமர் கோயில்களை
வைத்துக்கொண்டு என்ன செய்ய.
ஹப்பில் டெலஸ்கோப் கூடங்களாக
அவை ஆகட்டுமே.
அப்போது கிருஷ்ணனின் விஸ்வரூபத்துக்குள்
யுனிவெர்ஸ் எக்ஸ்பேன்ஷன் எனும்
ப்ரைடுமேன் பிரபஞ்சவிரிவுகளின்
காஸ்மாலஜிகல் மாடல்கள் எல்லாம்
கண்ணுக்கு தெரியும்.
இப்படியெல்லாம் நீ சிந்தித்திருக்கலாம்.
அதனால் தான்
அனுமான் தாண்டிய
வானத்தையும்
தாண்டிய அற்புதங்களை
நீ காட்டியிருக்கிறாய்.
ப்ளாக் ஹோல்
வோர்ம் ஹோல்
சிங்குலரிடி
பிக்-பேங்க்..பிக்-க்ரஞ்ச்
ஒயிட் ட்வார்ப்
சூப்பர் நோவா
ஸ்ட்ரிங் தியரி
நம் இந்திய விஞ்ஞானி
சந்திர சேகர் கண்டுபிடித்த
சந்திரசேகர் லிமி்ட்
என்றெல்லாம்
நீ விளக்கியதை கேட்டால்
அந்த ஆங்கிலம் கூட
எச்சில் ஊற நின்று
கேட்டுக்கொண்டிருக்கும்.
தமி்ழை தமி்ழ்மயம் ஆக்குவதற்கு முன்
அதை விஞ்ஞானமயம் ஆக்கிய
தமி்ழன் அல்லவா நீ.
ஸ்டீபன் ஹாக்கிங்
என்றொரு
நாற்காலி-மேதை.
பல விதங்களில்
ஊனப்பட்டு முடங்கிய போதும்
இந்த பிரபஞ்சத்தையே
தன் கவச-குண்டலமாக்கி
தன்னையே
இரத்த-சதையால் ஆக்கிய
ஒரு கம்பியூட்டர் ஆக்கி
இந்த விஞ்ஞான உலகை
வியக்க வைப்பவர் அவர்.
அசைக்கமுடியாத தன் உடலுக்குள்
தன் மூளையால்
இந்த உலகத்தை
அசைத்துக்கொண்டிருப்பவர் அவர்.
சுஜாதா அவர்களே.
நீங்களும் அருவமாய்
இந்த இயற்பியல் தமி்ழின்
இதய நாற்காலியில் உட்கார்ந்து
எழுதிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.
மரணத்தின் விஞ்ஞானத்தை
நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
அந்த எமனுக்கும்
உங்கள் கருட புராணத்தை
கொஞ்சம் உங்கள் பாணியில்
புருடா விட்டுக்கொண்டிருப்பீர்கள்.
அப்புறம் அவனும் கூட
“அப்பல்லோ” பக்கம் வந்திருக்க மாட்டான்.
போதுமடா சாமி்.
இந்த எருமை மாட்டு உத்யோகம்
என்று உங்கள் தயவில்
ஒரு கம்பியூட்டர் “சாட்-கிளப்” வைக்க
கிளம்பியிருப்பானே.
உங்கள் ஆனந்தவிகடனின்
ஒரு பிரதியை
நம் ஆயுளையே எடுக்கும் அவனுக்கு
ஆயுள் சந்தாவாக அனுப்பியிருக்கலாம்.
இப்படியெல்லாம் சொல்லிப்பார்த்து
ஒரு கனமான சோகத்தை
ஒரு சுஜாதா ஜோக்கில்
கரைத்துப்பார்க்க முயல்கிறோம்.
முடியவில்லை.
கண்ணீர்…கண்ணீர்…கண்ணீர் தான்.
ஞானிக்கு
அது தண்ணீர்.
விஞ்ஞானிக்கு
அது ஹெச்- 2- ஓ
சுஜாதாவுக்கு
அது
தமி்ழ் எழுத்துக்களின்
அமுதத்துளிகள்.
epsivan@gmail.com
- சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
- சுஜாதா – தமிழ் சூரியன்
- மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்
- Last Kilo byte – 8 முடிந்துபோன கடைசிப்பக்கம் – இளையதலைமுறையின் அஞ்சலி
- சம்பந்தமில்லை என்றாலும்-ச் ரீவைஷ்ணவம் – -ராமச்வாமி ராமானுஜ தாசர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 1
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்
- கவிதை
- இது பகடி செய்யும் காலம்
- ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல
- தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 9 புல்லாங்குழல் ஊதுவோன் !
- மெழுகுவர்த்தி
- தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
- ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!
- வராண்டா பையன்
- தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
- கவிதை
- ஏமன் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட குர்ஆன் ஏடுகள்!
- திப்பு சுல்தான், காந்திஜி, பாரதி
- மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும் சிற்றிதழ்-மலேசியா
- வெளிச்சம்
- “கட்சி கொடிகளும் மரங்களும்”
- பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்…………14 அ.ச.ஞானசம்பந்தன்
- குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை
- மீ ட் சி
- மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
- பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? (கட்டுரை: 19)
- வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்
- தும்பைப்பூ மேனியன்
- கறுப்பு தேசம்
- சுஜாதா
- சிலுவைகள் தயார்…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1