பாண்டித்துரை
அப்பாடா அந்தா இந்தானு ஒருவழியா சிவாஜி வர போகுது
சிவாஜியை முதல்நாளே பார்த்துப்புடனும் என்று எல்லோரும் ரெடியாகிட்டாங்க. தமில்நாட்டுல ஒரு டிக்கெட் விலை ருபாய் 1500.00 அதுவும் இன்றைய நிலவரப்படி வித்து தீர்ந்துவிட்டதாம். தமிழகத்தில் இருக்கும் என் நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்.
சரி அங்கதான் இந்த கொடுமைனா இங்க சிங்கப+ரிலும் அதே கொடுமைங்க . கோடி கோடியா கொட்டி படம் எடுக்குற ஹாலிவுட் படத்துக்கு எல்லாம் இங்க ஏத்துறது கிடையாதுங்க. 5வெள்ளி முதல் பத்து வெள்ளி வரை இந்த படத்துக்கு இங்கே கூடுதல் கட்டணம்.
சரி அப்படி இந்த படத்தை ருபாய் 1500.00 – 2000.00 குடுத்து பார்கிறதுல அப்படி என்னங்க கிடைக்க போகுது.
பாபானு ஒரு படம் வந்திச்சு என்ன ஆச்சு படம் ஓடலைனு விநியோகிஸ்தருக்கு பணத்தை திருப்பி கொடுத்தாங்க. ஆன ரசிகர் சோ என்று எடுத்து நடத்தினவங்களுக்கு என்ன குடுத்தாங்க படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு போனவங்களுக்கு ?
சந்திரமுகினு ஒரு படம் வந்திச்சு அதுல யாருக்கு லாபம் சிவாஜி குடும்பத்துக்கா ? இல்லங்க சிவாஜி குடும்பத்த வச்சு படம் எடுத்தா அரசியல் வில்லங்கம் எதும் வராதுனுங்க . பாவம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ராமாவரம் தோட்டத்தை வித்துதான் படம் எடுத்தார். தோட்டத்தை வாங்குன ஏஜென்டுக்கு கூரைய பிச்சிகிட்டு கொட்டும்ல அப்படி பத்து கூரையை பிச்சிகிட்டு கொட்டுச்சாம். வாங்குனவர் நல்ல மனுசன் என்றால் ராம்குமார் ஒருபடிமேலங்க . தோட்டத்தை வாங்கின ஏஜென்ட் உங்களாலதான் எனக்கு இந்த அளவு லாபம்னு ஒரு 5சதவிதம் குடுத்திருக்கிறார். ராம்குமார் மறுத்துட்டார். ஏனக்கு வரணும் என்று இருந்தது வந்துவிட்டது இது உங்க பணம் என்று சொல்லிவிட்டார்.
இயக்குனர் சங்கர் ஒரு கணக்கு சொல்லுறார் என்னனா தமிழ் சினிமா எவ்வளவு சம்பாதித்து குடுக்கும் என்று தெரியுமாம். அதான் 2கோடியில் படத்தை தாயாரித்து விட்டு 50கோடியில் படத்தை இயக்குகிறார்.
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்
இந்த படம் தயாரிக்கிறதுக்கு முன்னாடியே வித்துப்போச்சாம.; எல்லா ஏகNபுhக உரிமையையும் யாரு வாங்கியிருக்கா தெரியுமா ? (நாங்க சம்பாதிக்கதான் இங்க வந்திருக்கிறோம்)அதாங்க நின்னா பேப்பர்ல நீயுசு நடந்தா நீயுசு . அப்ப இது கூடவா தெரியாமயா இருக்கும்.
சமூகத்துக்கு எவ்வளவு பயனை சொன்ன பாபா திரைப்படத்தை இப்ப மத்திய மந்திரியா இருக்கும் ப.சிதம்பரம்; காரைக்குடியில் துவக்கிவைத்தது தெரியும்ல. பாருங்க உலகமே போற்றும் நிதி மேதையோட அரசியல் கணக்கை.
மருதநாயம்னு ஒரு படம் ஆரம்பிச்ச நிலையிலேயிருக்கு எல்லோரும் மறந்திருக்கலாம். இந்திபடமான மங்கள்பாண்டே மருதநாயகத்தை முந்திக்கொண்டது. இல்லைனா யாரு முதன் முதலா சுதங்திர முழக்கம் விட்டது என்று தெரிந்திருச்கும். இந்த படத்தை தாயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் ரெடியா இல்லை. சரி நீங்க படத்தை எடுங்க நாங்க வாங்கிகிறேனு சிவாஜி திரைப்படத்தை வாங்கிய நிறுவனம் சொல்லுமா. அப்படியே இந்த படம் வெளிவந்தாலும் வரணும் வரும் எத்தனைபேர் ருபாய் 1500 கொடுத்து பார்க்கவும் மறுபடியும் மறுபடியும் 10 முதல் 15 தடவை பார்க்கவும் ரெடியாகிகிட்டு இருப்பாங்க சொல்லுங்க .
அன்பேசிவம் படத்துக்கு என்ன ஆச்சுனு தெரியும்ல!
தல தலனு ருபாய் 1500 கொடுத்து அந்த விசில் சத்தத்துல என்ன புரிய போகுது . 5 நாள் இல்ல பத்து நாள் கழித்து போய் பார்த்தா என்ன . காலம் தாழ்த்தி சிவாஜி படத்தை பார்த்தா பிரிட்டிஸ்காரன் என்ன தடையா பண்ண போறான்?
சரி ருபாய் 1500 கொடுத்து பார்கனும்னு முடிவு பண்ணிட்டா 50ருபாய்கு டிக்கெட்டை வாங்கிகிட்டு மிச்ச பணத்து எத்தனையோ ஆதரவற்ற அமைப்பு இருக்கே அதுக்கு உதவலாமே அத விடுங்க சினிமாவிலே எத்ததை பேர் சின்னா பின்ன பட்டுபோய் இருக்காங்க அவங்களுக்காவது?
சரி சிவாஜியில யாருக்கு லாபம்க. ஒரு சிலருக்கு தான் அந்த ஒருத்தர் யாருனு எல்லாருக்குமே நல்லா தெரியும். மணியடிக்கிற உங்களுக்கு என்ன கிடைக்க போகுதுங்க.
சிவாஜி வாயில ஜிலேபி
இல்ல இல்ல
சிவாஜிய பார்தவங்க வாயில அல்வா!
சரிப்பா படத்தோட கதாநாயகன் என்ன பண்ண போறாரு. வேற என்ன மறுபடியும் பணபெட்டியோட இமையமலைதான் போக போறாரு.
சரி என்ன முடிவு பண்ணயிருக்கிங்க ஆதரவுவற்ற இல்லமா ருபாய் 1500க்கு டிக்கெட்டா ?
அய்யா ரசிகப்பெருமக்களே : தயவுசெய்து சில அருமையான தமிழ்படங்கள் வந்திருக்கு 10தடவை வேண்டாம் ஒரு தடைவ அதுவும் நல்ல தியேட்டரில் போய் பாருங்க (பருத்திவீரன் – மொழி – குப்பி பச்சைக்கிளி முத்துச்சரம்னு ….)
எமுத்து: பாண்டித்துரை
pandiidurai@yahoo.com
- காதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!
- 7 th FILCA International Film Festival
- தமிழரைத் தேடி – 2
- தங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்
- அற்றைத் திங்கள்
- சுழல்
- கோடை விடுமுறை (சிறுவர் பாடல் )
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.
- தனியறை: 1
- கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்
- கவிதைகள்
- சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!
- தமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்
- அந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே!பாவமும் நானே!!
- சிவாஜி – சிறப்புப் பார்வை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16
- கடிதம்
- ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு
- இலை போட்டாச்சு ! 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு
- பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்
- அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்
- அலைகளின் விளிம்பில்
- ஹைக்கூ
- அருள்வாக்கு
- இரவில் காணமுடியாத காகம்
- பெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்
- கவிதைகள்
- மலையாளக் குடிவார மசோதா – பெரியார்
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 7
- மடியில் நெருப்பு – 35