சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

கோமதி நடராஜன்


‘குழந்தை வளர்ப்பு ‘என்பது அற்புதமான ஒரு கலை.நம்மில் பலர்,அக்கலையில் கைதேர்ந்தவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.குழந்தை வளர்ப்பில்,உடல் வளர்ச்சி மனவளர்ச்சி என்ற இரு பெரும் பகுதிகளில்,முன்னதைப் புத்தக அறிவில் திட்டமிட்டுச் செயலாற்றிவிடலாம்.மனவளர்ச்சி என்று பார்க்கும் பொழுது,கடல் அலைகள் போல்கணக்கில் அடங்கா பிரச்சனைகள்,சமாளிப்புகள் என்று நம்மைத் திணற வைக்கும்.சில அனுபவப் பாடங்களைப் பார்க்கலாமா ?

#தாயின் வயிற்றில் பத்து மாதம் கருவாக வளர்ந்து,ஜனித்த குழந்தை,உடலளவில்தான் வளர்ந்திருக்குமே தவிர,மனத்தளவில் அது செதுக்கப் படவேண்டிய ஒரு கல்,சித்திரம் தீட்டப் படவேண்டிய ஒரு வெண் திரை.ஒரு நல்ல சிற்பியின் மனோபாவத்துடன் குழந்தையை உருவாக்க முயலவேண்டும்.கை தேர்ந்த ஒரு ஓவியனின் சிரத்தையுடனும்,பொறுமையுடனும் செயலாற்றவேண்டும்.

# ஒரு கையில் பாசத்தை சுத்தியலாகவும்,மறுகையில் பொறுமையை உளியாகவும் ஏந்திச் செதுக்கத் துவங்குவோம்.நாட்டின் எதிர்காலச் சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகள் நாம்.கவனமாகச் செதுக்குவோம்.

# உங்கள் மடியில் விழுந்த சிசுவின் கண்களைப் பாருங்கள்.இவன் முரடன்,இவன் முட்டாள்,என்றா காட்டுகின்றன ?இறைவன் நம் கையில் தந்ததுவெறும் பச்சை மண்.அது சிற்பமாவதும் சீரழிவதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

#பெற்றோர்கள் இருவரும் சீரான இரு தண்டவாளங்களைப் போல் இணைகோடுகளாக இருந்தால்தான்,தண்டவாளங்களை நம்பி ரயில்களான குழந்தைகளும்,வாழ்க்கையில் தடம் புரளாமல்,வெற்றியை நோக்கிச் செல்லமுடியும்.

# காமத்திலும் கோபத்திலும் மனிதன் மிருகங்களைவிடக் கேவலமாகத் தொிவான்.

கணவன் மனைவி தங்கள் பிணக்குகளைக் குழந்தைகள் அறியாமல்,நாங்கு சுவருக்குள்

வைத்துக் கொள்வது நல்லது.நம்முள் உறங்கும் மிருகத்தைக் குழந்தைகளுக்குக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன ?

#குழந்தைகள் மனதில் ஒரு நல்ல குணம் பதிய வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால்,அதைச் சொல்லிக் காட்டுவதைவிடச் செயலில் காட்டுவதே சிறந்தவழி.முன்னதை விடப் பின்னதுக்குத்தான் சக்தி அதிகம்.பிஞ்சுக் கால்கள் என்றுமே தனக்கு முன்னேத் தொியும் காலடிச் சுவடுகளைப் பின்பற்றித்தான் நடை போடும்.முதலில் நாம் செல்லும் பாதை சீரானதாக இருக்கட்டும்.

#குழந்தைகள் உங்கள் அடிமைகள் என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை அடக்க முயலாதீர்கள்.அவர்களுக்காக இறைவனால் படைக்கப் பட்டப் பாதுகாப்பாளர்கள்தான் நீங்கள்,நீங்களே படைத்தவனாகிவிடமுடியாது.

#அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மறுக்க முடியாத உண்மையைக் குழந்தைகள் தாங்களாகவே உணர வேண்டுமே தவிர ,நாமாக ஓதிக்கொண்டிருக்கக் கூடாது.குழந்தைகளுக்கு நல்ல நண்பனாக ஆலோசனைகள் வழங்குங்கள்,அதிகாாியைப் போல் ஆணை இடாதீர்கள்.

#குழந்தைகளோடு குழந்தையாய்,ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஒரு நல்ல தோழனாய்,தோழியாய் அவர்கள் வயதுக்கு ஏற்ற மனநிலையோடு செலவழியுங்கள்.அந்தக்கு குறைந்த நேரத்தில் அவர்கள் மனதில் இடம் பிடிக்க முயலுங்கள்.அவர்களோடு எத்தனை மணிநேரம் செலவழிக்கிறீர்கள் என்பதைவிட எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதுதான் யோசிக்கப்

த வீட்டுக் குழந்தைகளோடு உங்கள் செல்வங்களை ஒப்பிடும்முன்,அடுத்த வீட்டுப் பெற்றோருடன் ,உங்களை ஒப்பிட்டு உங்கள் குழந்தை கேள்வி எழுப்பினால்,அதற்கான பதிலைத் தயாராய் வைத்துக் கொண்டு அணுகுங்கள்.அந்தப் பிஞ்சு மூளைக்குள்,ஆயிரம் கேள்விகள் அலைகளாய் அடித்துக் கொண்டுதான் இருக்கும்,ஆனால் வாய் மூடி இருப்பதன் காரணம்,தன் சந்தேகத்தைத் தீர்துக்கொள்ள அவனுக்கு நாம் உாிமையைத் தந்ததில்லை.குழந்தையின் பாிதாபமான் மெளனத்தை நாம் நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாமா ?

#குழந்தைகளிடம் அன்பு காட்டுவதி பாரபட்சம் வேண்டாம்.பணத்திப் பகிர்ந்தால் பாதியாகும்,அன்பைப் பங்கிட்டால் ஊற்று நீராகப் பெருகுமே தவிர வற்றி விடாது.குழந்தைகளிடையே அன்பு கண்டிப்பு இவைகளில் பாரபட்சம் காட்டினால்,அவர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமையை முளையிலேயேக் கிள்ளி எறியும் மோசமானத் தோட்டக்காரர் நீங்கள். தயவுசெய்துக் களைகளை மட்டும் எடுங்கள்,குடும்பம் என்றத் தோட்டத்தில் பூத்துக் குலுங்க வேண்டிய மலர்ச் செடிகளையும் சேர்த்துப் பிடுங்காதீர்கள்.

# பிறவி எடுப்பது அவரவர்கள் தேர்ந்தெடுத்து வருவதில்லை.குழந்தைகளில் ஆண் பெண் என்று பேதம் பார்க்காதீர்கள்.இறைவன் நமக்கு உவந்து அளித்தக் குழந்தைச் செலவங்களைப் பேதமின்ற்ப் பேணி வளர்ப்போம்.

# அலுவலகத்தின் வேலைக் களைப்பை ,வெறுப்பை ,மேலதிகாாிகளிடம் காட்ட முடியாமல் அடக்கிவைத்தக் கோபத்தை வீட்டுக்குள் கொண்டுவராதீர்கள்.நீங்கள் சுமக்க வேண்டிய சுமைகளை அந்தப் பிஞ்சுகளின் தலையில் இடியாக இறக்காதீர்கள்.வாசலி மிதியடிகளைக் கழற்றிவைக்கும் போதே,அவைகளோடு,அலுவலகப் பரபரபையும் சேர்த்துக் கழற்றிவையுங்கள்.அலுவலகத்தில் நீங்கள் இல்லையென்றால்,அதை இட்டு நிரப்ப ஆயிரம் பேர் காத்திருக்கின்றரை¢,ஆனால் இல்லத்தில் உங்கள் இடத்தை நீங்கள்தான் நிரப்ப வேண்டும் அதை அழகாக நிரப்புங்கள்.

***

மங்கையர் மலர் மே 1995 இதழில் வெளியான கட்டுரை

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்