சிற்பி!

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

கோட்டை பிரபு


மனதில் ஒளிர்ந்ததை
நினைவில் ஒழுங்கிடுவாய்!

சலனமற்ற நீரோடையின்
ஓட்டத்தை ஒத்தே உன் தழுவல்கள்,

விரல்களின் விருந்தாளியின்
உன்னதத்தை உணர்ந்திட்டாய்,

ஆத்திகத்தின் ஆணிவேரை
அவதரிக்கச் செய்திட்டாய்,

உன்னால் மட்டும் முடிகிறது
ஒழுங்கற்றதை ஓவியமாக்க,

மனவிழியில் சிற்பத்தின் சிற்பம்
நிலைத்திருக்க,
தேவையற்றன சிதறடிப்பாய்,

கணநேர வேண்டுதலில்
ஓயாத எண்ண அலைகள்,
சில நொடியும் பிசகாத
சிந்தையினை கொணர்ந்திட்டாய்!

கடுந்தவம் செய்திட்டும்
கண்டிராத உண்மைதனை-உன்
கலை நயத்தில் எமை மறந்து
கண்டுணர்ந்தேன் உண்மையிலே!!


kottaiprabhu@yahoo.com

Series Navigation

கோட்டை பிரபு

கோட்டை பிரபு