சின்ன கவிதைகள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

ஆனந்தன்


*****************

கண்ணாடி

இரேழு உலகம் தேடி
உன் அழகுக்கு நிகரான
ஒன்றைக் கண்டேன்
அழகே…!

*****************

அன்பே…
அன்னையின் தாலாட்டுக்குப் பிறகு
மயங்கியது
உன் கால் கொலுசொலியில் தான்!

*****************

கரும்பு மட்டும் அல்ல
அதைக் கடிக்கும்
உன் உதடும் கூட
சுவைதான்..!

*****************

நான்
மது அருந்துவதில்லை
உன் கண்களை கண்ட பிறகு!

*****************

உன்னைக் கண்டது முதல்
உன்னில் தேடுவது
இடையை மட்டும் தான்!

*****************

என் வாழ்வில்
எங்கும் சிக்காத நான்,
உன் கூந்தலில் மட்டும்
சிக்கியதேன் ?

*****************

வகுப்பில் முதல்
மாணவனான நான்,
உன் காதுகளின்
கேள்விக்கு மட்டும்
பதில் தெரியாமல்
முழிப்பதேன் ?

*****************

இந்த பூமிக்கு
ஒர் நிலவு – என்று
சொன்னவன்
உன் முகத்தை
பார்ததில்லை போலும்!

*****************

கிளிக்கு மூக்கு
மட்டும் தான் அழகு!
மூக்கின் மேல் இருக்கும்
மச்சம் கூட
அழகு உனக்கு!

*****************
தலையில் மட்டும்
முல்லை போதாதா…
வாயிலும் ஏதற்கு ?

*****************
வெட்கப்படு பெண்ணே!
இந்த பூமியும் ஏங்குகிறது
காலில் நீ கோலம்
போடுவாய் என்று!

*****************

பூக்கள் நடத்துகின்றது
ஒர் போராட்டம்
நீ
பூங்கா பக்கம் வரவேண்டாம் என்று!

*****************

உனைப் பார்க்க
கண்கள் கோடி போதும்!
உன்னோடு பேச
கவிதைகள் ஆயிரம் போதும்!
உனை புரிந்துக் கொள்ள
யுகங்கள் எத்தனை வேண்டும் ?

*****************

உன் மேல் விழுந்த
பூவிற்குக் கூட காதல்
உன் மென்மை கண்டு!

*****************

உன் அழகின் விலை
உயிர் என்றாலும் தருவேன்
கண்ணை அல்லவா கேட்கிறாய்!

k_anandan@yahoo.com

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்