புஷ்பா கிறிஸ்ாி
(அண்மையில் அனாதையான என் மைத்துனி மகளின் குரலாய்)
அன்று சொன்னது நீ
என் சிறகினுள் உன்னைக்
காப்பேன் என்று
இன்று போனதும் நீ
என்னைத் தனியாக்கி உன்
வாழ்வு மரணித்ததும் ஏனோ ?
தனித்து நிற்பதோ நான்
போகவழி தொியவும் இல்லை
அனாதையானதும் நான்
பாதை காட்டிச் செல்ல
யார் வருவாரோ ?
யாரோ பெற்ற பெண்ணுக்கு
நீயோ அனுதாபம் சொன்னாய்
இன்று நீ பெற்ற பெண்ணுக்கு
அனுதாபம் சொல்ல யாருமில்லை
என்னைத் தனிவழி விட்டுச் சென்ற தாயே
உன்னை விட்டு விட்டு நான் தனியே
பெண்ணாய் நீ பிறந்தது நீ செய்த பாவம்
பெண்ணாய் நான் பிறந்ததும் என் பாவம்
தமையன் ஒருவன் இல்லைத் தாயே
தமக்கை ஒருத்தி இல்லைத் தாயே
தம்பி கூட இலலை எனக்கு
தங்கையும் இல்லை ஆற்றுவதற்கு
நானோ அனாதையாய் நீயில்லா இப்புவியில்
நீயோ அனாதாயாய் நானில்லா வான்பரப்பில்
என்னைத் தாலாட்டி நீ சொன்ன
எண்ணங்களெல்லாம் என் நினைவில்
வண்ணக் கனவுகளாய் வந்து போகுதம்மா
எண்ணி எண்ணி அழுகிறேன் என் அம்மா
என்னைத் தவிக்க விட்டுப் போன தாயே
உன்னை எண்ணி நான் இன்கே தனியே
என்னையும் அழைத்து விடு உன்னோடு கூட
மண்ணையும் மறந்து வந்திடுவேன் மேலே
***
www.pushpa_christy@yahoo.com
- உருவமற்ற நான்.
- எங்களின் கதை
- மணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை
- எனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்
- Lutesong and Lament :Tamil Writing from Srilanka புத்தக விமர்சனம் : புதிய புற நானூறு, அக நானூறு
- பார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை
- இடியாப்பம்
- சீயம்
- கோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்
- அமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி
- அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)
- வரம்
- ரமேஷின் மூன்று கவிதைகள்
- நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)
- அந்த நாளும் அண்டாதோ ?
- மகிழ்ச்சி என்பது ஒருமை..
- மன்னனாய் என் வாழ்க்கை..
- சின்னப் புறா ஒன்று
- தொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி
- ரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி
- இந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.
- உரிமை கொண்டாடுகிற ஆளுமை
- Carnage in Gujarat
- வாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…
- அகதி மண்
- புலம் பெயர்ந்த காட்சிகள்