சிந்தி நகைச்சுவை

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

**


இந்திரன் ஒருமுறை எல்லா இந்திய சமூகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தான்.

ஒருவர் பின் ஒருவராக எல்லா சமூகத்தலைவர்கள் முறை வரும்போதும், இந்திரன் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் சொன்னான்.

சிந்தி சமூகத்தலைவரின் முறை வரும்போது மட்டும், இந்திரன் எழுந்திருக்காமல், ‘ம்ம்.. சரி சரி… போய் அமருங்கள் ‘ என்று சொன்னான்.

அங்கிருப்பவர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். இந்திரன், ஆதிவாசிகள், தலித்துகள், இன்னும் எல்லா சமூகத்தினரையும் கவுரவப்படுத்திவிட்டு சிந்தியை மட்டும் இப்படி அவமானப்படுத்துகிறானே.. என்று.

கேட்டே விட்டார்கள்.

அதற்கு இந்திரன் சொன்னான் ‘ நான் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்லியிருந்தால், அவர் அதற்குள் என்னுடைய இருக்கையில் உட்கார்ந்துவிடுவார் ‘

– எதியோப்பியாவிலிருது க்யான்ஷாம்தாஸ் சஜானி அனுப்பிய நகைச்சுவை

**

ஒரு பிச்சைக்காரன் ஒரு பணக்கார சிந்தியிடம் பிச்சைக் கேட்டான்.

‘பகவான் பெயரில் எனக்கு ஒரே ஒரு ரூபாய் தாருங்கள் அய்யா ‘

சிந்தி: ஏன் ரூபாய் கேட்கிறாய். வா என்னோடு கிளப்பில் போய் ஆட்டம் போடலாம்

பிச்சைக்காரன்: எனக்கு ஏதற்கய்யா கிளப்பில் ஆட்டம் போடவேண்டும் ? ஒரு ரூபாய் கொடுத்தால் போதுமானது.

சிந்தி: சரி வா என்னோடு மதுக்கடைக்கு. போய் நன்றாகக் குடிக்கலாம்

பிச்சைக்காரன்: எனக்கு மதுப்பழக்கம் இல்லை. ஒரு ரூபாய் கொடுத்தால் போதுமானதய்யா

சிந்தி: அப்படியென்றால் என்னோடு நிச்சயம் என் வீட்டுக்கு வரவேண்டும். இந்த காரியம் எல்லாம் செய்யாதவன் கதி என்ன ஆகிறது என்று என் மனைவிக்குக் காட்ட வேண்டும்.

**

சிந்தி: டாக்டர், நான் மது, மாது பாட்டு கூத்து எல்லாம் விட்டுவிட்டால் நிறைய நாட்கள் வாழ்வேனா ?

டாக்டர்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வாழ்வது அதேகாலம்தான். ஆனால் ரொம்பநாள் வாழ்வது போல தோன்றும் அவ்வளவுதான்.

**

டாக்டர்: உடம்பில் 1000க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கின்றன என்று தெரியுமா உனக்கு ?

சிந்தி: ஷ்… என் நாய் வெளியே இருக்கிறது. அதற்கு கேட்டுவிடப்போகிறது.

**

ஒரு சிந்தி ஒரு விலைமாது வீட்டுக்குச் சென்றான். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டான்.

அவள் 200 டாலராகும் என்று சொன்னாள்.

‘எவ்வாறு சிந்தி முறையில் செய்யவேண்டும் என்று தெரியுமா ‘ என்று கேட்டான் சிந்தி.

எனக்குத் தெரியாதே என்று சொன்னாள்.

அவன் உடனே எழுந்து வெளியேற முனைந்தான்.

அவளோ ‘இதோ பார். நீதான் என் முதல் கஸ்டமர் இன்று. முதல் போணியை வெளியே அனுப்பவேண்டாம் என்று பார்க்கிறேன். சிந்தி முறை என்ன என்று சொல்லித்தா. நான் பாதிவிலைக்கு உன்னிடம் இருக்கிறேன் ‘ என்றாள்.

‘அன்பே. அதுதான் சிந்தி முறை ‘ என்றான் சிந்தி.

***

**

Series Navigation

நகைச்சுவை

நகைச்சுவை