விக்கிரமாதித்தன்
நினைத்துக் கொண்டால்
வருகிறது
நினைத்துக் கொண்டால்
நின்று விடுகிறது
காற்றும் சிறு தூறலும்
கலந்த சாரல்
சாரலே சாரலே
மலைக்கு அந்தப் பக்கமிருந்து
வருகிறாய் தெரிகிறது
சுற்றிச் சூழ நனைத்து
சீதளமாக்குகிறாய் புரிகிறது
நீ
மழை போல மண் குளிர்வித்து
அருவிகள் நிறைத்து
ஆறுகள் பெருக்கி
பச்சைவிடச் செய்து
என்னவெல்லாம் நிகழ்த்துகிறாய்
தேடி
வருகிறார்கள் உன்னை
சாரல் கட்டி விட்டதென்று
சந்தோஷப் படுகிறார்கள்
நனையும் பொழுது
சிலிர்த்துக் கொள்கிறார்கள்
சாரலுக்கும் தமிழுக்கும்
சத்தியமாய் சம்பந்தமுண்டு
கவிதைக்கும் சாரலுக்கும்
கனகாலமாய் சொந்தமுண்டு
சாரலென்றால் குளிர்
குளிர்
மனசுக்குப் பக்கத்தில்
ஒரு சாரலில் நனைந்தால்
ஒரு வருஷம்
ஆயுசு கூடும் போல
நிறையச் சாரல்களில்
நனைந்தவன் நான்
சாரல் காலத்தில் தான்
என் முடிவும் இருக்க வேண்டும்
****
- சாரல்
- அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு
- இந்திரா கோஸ்வாமியின் எழுத்துலகும் இந்திய ஞானபீட விருதும்
- வாங்கீ பாத் (கத்திரிக்காய் சாதம்)
- ரவை சீடை
- தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்
- பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1
- கொட்டிவிட்ட காதல்….
- கவிதைகள்
- வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை
- பி ஆர் விஜய் கவிதைகள்
- தினந்தோறும்
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (2)
- தமிழ் மதம் என்று உண்டா ?
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 (சிவாஜி கணேசன், கருணாநிதி கைது, முஷாரஃப், ஏர்வாடி)
- பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1
- ‘தாயிற் சிறந்ததொரு…. ‘
- கிராமத்துப் பாதை