ஜோஸப் வெர்ரெஞியா
சாதாரண கடைகளில் விற்கும் விலை மலிவான தொலை நோக்கி மூலமாக தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி சுழலும் ஒரு கிரகத்தை வானவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கிரகங்களை தேடுவதில் ஒரு புது யுகத்தை இது உருவாக்கியிருக்கிறது ‘ என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஜியோஃப் மார்ஸி தெரிவித்திருக்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன்னால், 30 அடி விட்டமுள்ள பெரிய கண்ணாடிகள் கொண்டு ஒரு நட்சத்திரத்தின் மிகச்சிறிய நகர்வை கண்டறிந்து அதன் மூலம் அதனைச் சுற்றி சுழலும் கிரகத்தை வானவியலாளர்கள் அனுமாணித்தார்கள்.
ஆனால், இன்று, 4 இஞ்ச் விட்டமுள்ள சாதாரண லென்ஸ் கொண்ட தொலைநோக்கிகள் மூலமாக புதிய உலகங்களை இன்று கண்டறிகிறார்கள். இதனை தனிப்பட்ட முறையில் வடிவமைத்துச் செய்திருந்தாலும், இதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சாதாரணக் கடைகளில் வாங்கப்பட்ட உபகரணங்களே.
வீட்டுக்குப்பின்னால் தோட்டத்தில் இருந்து கொண்டு வானத்தைப்பார்க்கும் அமெச்சூர் வானவியலாளர்கள் வெகு விரைவிலேயே புதிய புதிய உலகங்களைக் காண ஆரம்பித்துவிடுவார்கள் என்று இவர் கருதுகிறார். என்ன, ஏராளமான நேரமும், கண் விழித்திருக்க நிறைய காப்பியும் இருந்தால் போதும். சென்ற முன்பனிக்காலத்தில் கெண்டகி மாநிலத்தில் இருக்கும் ஒரு அமெச்சூர் வானவியலாளர் தன்னுடைய வீட்டுக்குப்பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தொலை நோக்கி மூலமாக புதிய நெபுலாவைக் கண்டறிந்தார். இந்த நெபுலா இதுவரை பெரிய வானவியல் ஆராய்ச்சி மையங்களால் கண்டறியப்படாமல் இருந்தது என்பதும் உண்மை.
‘இதையெல்லாம் செய்ய பெரிய தொலை நோக்கி வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல ‘ என்று ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் மையத்தில் இருக்கும் கிலியோமா டோரஸ் தெரிவித்தார்.
புதிய உலகத்தை கண்டறிய உலகெங்கும் உழைத்த 12 வானவியலாளர்களில் ஒருவர் இவர். இது பற்றிய விவரங்கள் அஸ்ட்ரோபிஸிகல் ஜர்னல் லெட்டர்ஸ் இதழில் வந்திருக்கிறது.
‘இதனை ஆராயத் தேவையான மென்பொருளை வடிவமைக்க தீவிரமாக உழைத்தோம். இதனை கடைகளில் வாங்கவியலாது. ஆனால், வன்பொருள் மிகவும் எளிமையானதுதான். ‘
இந்த சிறிய தொலைநோக்கி வெற்றி மிகவும் முக்கியமானது என்று கிரகங்களைத் தேடுபவர்கள் கருதுகிறார்கள். இது தேடலை விலைமலிவானதாக ஆக்கும். மிகவும் அதிகமான கிரகங்களை கண்டறியவும் இது உதவும்.
‘இதனை செய்ய கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் தொலைநோக்கி வேண்டும். ‘ என்று டெக்ஸாஸ் வானவியலாளர் வில்லியம் கோக்ரன் கூறுகிறார். இவர் ஹாபி எபெர்லி வானவியல்கூடத்தில் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளார்.
நம் சூரியக்குடும்பத்துக்கு வெளியே இருக்கும் நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் கிரகங்களைக் கண்டறிவது மிகவும் உற்சாகமான போட்டியாக வானவியலில் இருக்கிறது. இதுவரை 123 கிரகங்கள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கு சம்பந்தமின்றி, ஐரோப்பிய வானவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இதுவரை உபயோகப்படுத்தி வந்த முறைகள் மூலம் ஒரு புதிய கிரகத்தைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்கள். இதன் சிறப்பு இது நாம் வாழும் பூமி போன்ற ஒரு கிரகம் என்பதே. இது அல்டேர் நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை (50 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது) சுற்றி வரும் பூமி போன்ற கிரகத்தை கண்டறிந்துள்ளதை தெரிவிக்கிறது.
ஆனால் இந்த ‘சிறிய தொலைநோக்கி மூலம் கண்டறிந்த கிரகம் ‘ செய்தியே ஆராய்ச்சியாளர்களை மிகவும் பேச வைத்திருக்கிறது.
இந்த புதிய கிரகம் லைரா நட்சத்திரக்கூட்டத்தில் பூமியிலிருந்து 500 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது. (exoplanet அல்லது அயல்கிரகம் என்பது நம் சூரியனைத் தவிர வேறொரு நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழலும் ஒரு கிரகம்)
இந்த சிறிய தொலைநோக்கி கடையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி அமைத்து உருவாக்கியது. இது கலிபோர்னியாவின் பலோமார் மலையில் அமைக்கப்பட்டது. மற்றொன்று கானரி தீவு ஆப்பிரிக்காவில் அமைக்கப்பட்டது. இந்த கருவிகள் 12000 பிரகாசமான நட்சத்திரங்களை 3 வருடங்களாக தொடர்ந்து ஆராய்ந்து வந்தது.
இந்த தொலைநோக்கி ஒரு நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன்னுடைய பிரகாசம் குறைவதை தேடியது. இது ஒரு கிரகம் அந்த நட்சத்திரத்தின் முன்னால் செல்வதைக் குறிக்கிறது. இந்த முறையே பலமுறை கிரகங்களை கண்டறிய உதவியது. ஆனால் இந்த முறை சாதாரண தொலைநோக்கியில் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
இந்த முறையை ஒப்பிடவேண்டுமென்றால், சென்னையில் ஒரு டார்ச் லைட் முன்னால் ஒரு கொசு பறப்பதை பெங்களூரில் இருந்து கொண்டு பார்த்து கண்டுபிடிப்பது போன்றது.
‘நம்மால் முடிந்ததெல்லாம், அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை ஆராய்வதுதான். ‘ என்று டிமோதி பிரவுண் கூறுகிறார். ‘500 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்திலிருந்து எதையும் நாம் கண்டறியமுடியும் என்பதே ஆச்சரியமான விஷயம்தான் ‘ என்றும் இவர் கூறுகிறார்.
ஹவாயில் நிறுவப்பட்டிருக்கும் கெக் தொலைநோக்கி மூலமாக இந்த கண்டுபிடிப்பை உறுதிசெய்தார்கள். இது ஒரு நட்சத்திரத்தின் இடத்தில் அதனைச் சுற்றி வரும் கிரகத்தின் புவியீர்ப்பு விசையால் ஏற்படுத்தப்படும் சிறிய மாறுதலை கண்டறிந்து கிரகத்தை அறிகிறது.
இந்த கிரகம் TrES-1 (pronounced Trace One) என்று அழைக்கப்படுகிறது. இது நம் வியாழன் அளவுக்குப் பெரிய வாயு கிரகம். அதன் சூரியனிலிருந்து சுமார் 4 மில்லியன் மைல் தூரத்தில் இருக்கிறது. நம் பூமி நம் சூரியனிடமிருந்து 93மில்லியன் மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த கிரகம் தனது சூரியனை 72 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
Harvard-Smithsonian Center for Astrophysics:
http://cfa-www.harvard.edu/press/pr0427.html
- அடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்
- 29. புகலிடம்
- கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை
- சாதாரண தொலைநோக்கி தொலைதூர நட்சத்திரத்தின் கிரகத்தைக் காண்கிறது
- 7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே!!
- நீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di
- பூச்சிகளின் மொழிகள்
- அழியாவரம் பெற்ற ஸ்டாலினிசமும் எஸ் வி ராஜதுரையும்
- கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை
- ஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை
- எய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்
- தமிழ்நாட்டு கட்சிகளை, அமைப்புகளை பிளக்கும் உளவுத்துறை
- போலி மதசார்பற்ற வாதிகளும் , தேசிய கொடியும்
- உள்ளக சுயநிர்ணய உரிமை
- பயணம்
- யோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச் செல்வன் = பாராட்டுகள்
- துணையாக நிற்கும் வரிகள் -கொங்குதேர் வாழ்க்கை- சிவக்குமார்- நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்-14
- அன்புள்ள சோனியாகாந்திக்கு
- திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.
- விஜயகாந்த் – ரஜினி ஒரு ஒப்பீடு…!!!
- பாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்
- காடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்
- தமிழ்பற்று டமாஸ்…
- சொன்னார்கள் ஏப்ரல் 27 2004
- ஆட்டோகிராஃப் 15- ‘எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் ‘
- அயல் பிரிதிபலிப்புகள்
- சொல்லிச் சென்றவள்!
- வேலைக் கிடைத்தும் அல்லல் பட்ட கதை
- ஓயுமா அலை…
- ஒருபக்கச்சிறுகதை – நட்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 34
- இருக்கச் சொல்கிறீர்கள்
- எகினம்
- கிராமத்துப் பார்வைகள்
- சொல்லுக சொல்லில்…
- வென்றிலன் என்ற போதும்…
- பெரியபுராணம் – 6
- என்ன நடந்தது ?
- தவறாக ஒரு அடையாளம் (திண்ணை வாசகர்கள் கதையை எப்படி முடிக்க விரும்புவார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை)
- ஏய் குருவி – கவிக்கட்டு 21
- அநாதை
- எப்போதாவது…
- ஆழி
- வேண்டும் – வேண்டாம்
- அன்றும்…இன்றும்
- ஏழையின் வேண்டுதல்
- அப்பா
- இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது
- பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)
- உடைபடும் குரங்கு
- வெளி….
- ரவி சுப்பிரமணியன் கவிதைகள்