சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

கி. உமாமகேஸ்வரி


நாடே துக்கத்துடன் டிவி முன் குவிந்திருந்த வேளையில் சன் டிவியில் தோன்றி கவிதாஞ்சலி செலுத்தி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளை ரசித்திருப்பவர்களில் நீங்கள்கூட ஒருவராக இருக்கலாம். என்னமா எழுதியிருக்கார் என்று சிலாகித்துக் கொண்டவராகவோ, வரிகளில் இருந்த நயத்தையும் மொழியழகையும் எண்ணி அந்தக் கறுப்பு[ நேரத்திலும் மனதிற்குள் பாராட்டியவராக இருக்கலாம்.

கவிஞரேஸ துக்கத்திலிருப்பவர்களுக்கு கவிதை எதற்குடூ உங்கள் கவிதையினை ரசித்தவர்களெல்லாம் டிவி முன்பு மின்விசிறியின் சுகமான காற்றையும், வீட்டுக் கூரையின் இதமான பாதுகாப்பையும் குடும்பத்தோடு ரசித்தபடி கடற்கரையைவிட்டுத் தள்ளிப் பாதுகாப்பாக இருந்த மக்கள்தான். உங்கள் கவிதையினை ரசித்துத் துளி கண்ணீரைப் பரிசாகத் தந்து உச்சுக் கொட்டியவர்கள்தான். உப்புக்காற்றையே சுவாசித்து உங்கள் நாக்குக்கு ருசியாக கடலிலிருந்து செல்வத்தை அள்ளித்தந்த மீனவ மக்களுக்கு இவ்வளவு களேபரத்தின் நடுவிலும் உங்கள் கவிதை என்னவிதமாய் உதவி செய்துவிட்டதுடூ

கவிதையில் நீங்கள் உணர்ச்சிகளைப் பதிவு செய்து ‘ஏன் கடலே இப்படிச் செய்துவிட்டாய்’ என்று நீங்கள் புலம்பித் தவிப்பதில் பயன்தான் என்னடூ

இப்போது அவர்களுக்குத் தேவை புலம்பல்கள் அல்ல. வாழ்வதற்கான நம்பிக்கை.

தமிழக அரசு அவர்களுக்கு மறுவாழ்வுக்கான தேவைகளைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறது. அவர்களின் பிள்ளைகளைத் தத்தெடுத்துக் கொண்டு படிக்கவைக்கக் கூட உத்தரவாதம் இருக்கிறது. தமிழகத்திலிருந்தும், இந்திய மாநிலங்களிலிருந்தும், உலகெங்கிலிருந்தும் கூட நிவாரண உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும். ஆனாலும் கூட வாழ்க்கையில் அந்த நொந்துபோன இதயங்களுக்கு பிடிப்பற்றுப் போகக்கூடும்.

அவர்களுக்கு எழுத்தாளராக இருந்து நீங்கள் கொடுக்கக்கூடியது வாழ்க்கையில் நம்பிக்கை. உறவுகளை இழந்து சொந்த மண்ணில் அனாதைகளாக அவர்கள் இன்று நிற்கும் அவலத்தை மறந்து வாழ்க்கையை அவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்குத் தேவையான நம்பிக்கை.

உங்கள் எழுத்தை அவர்களை தைரியப்படுத்துவதற்கும், நம்பிக்கையூட்டுவதற்கும் பயன்படுத்துங்கள்.

வெறுமனே பேப்பரில் கவிதை எழுதி சன் டிவியில் வாசிப்பது உள்மறைலான விளம்பர உத்தியாக மற்றவர்களுக்குத் தோன்றிவிடக்கூடும்.

– கி. உமாமகேஸ்வரி

umakmohan@yahoo.com

Series Navigation

கி. உமாமகேஸ்வரி

கி. உமாமகேஸ்வரி