சன்னல்

This entry is part [part not set] of 8 in the series 20000709_Issue

– ருத்ரா


1

சரேலென்று

முகம் காட்டி

முகம் மறைத்தாய்.

ஒரு ஓவியத்தை

தொலைத்து விட்ட

தூாிகைகளாய்

இந்த

சன்னல் கம்பிகள்!

2

யாரோ

வந்து விட்டார்கள் என்று

படாரென்று

கதவு சாத்தினாய்.

நீ

அறைந்து சாத்தியது

என்

‘ஆாிக்கிள் ‘ ‘வெண்ட்ாிக்கிள் ‘

அறைக்கதவுகள் அல்லவா!

3

சன்னல் வழியே

ஒரு சமுத்திரம்…

அறையெல்லாம்

பாய்ந்தது.

நன்றாய் நனைந்து விட்டேன்.

துவட்டிக்கொள்ளும்

என் இதயத் ‘துண்டு ‘

உன்னிடம் அல்லவா

இருக்கிறது.

4

‘அங்கே என்னடா

உற்றுப்

பார்த்துக்கொண்டிருக்கிறாய் ‘

அப்பா கேட்டார்.

‘ஓ இது தானா அது ‘

என்று

இந்த சன்னலில்

ஊர்ந்து கொண்டிருந்த

கம்பளிப்பூச்சியை

அப்புறப்படுத்தினார்.

நல்லவேளை

எதிர் சன்னலில்

எனக்காக

துடித்துக்கொண்டிருந்த

பட்டாம்பூச்சியை

அவர் பார்க்கவில்லை.

5

இந்த சன்னலின்

நான்கு பக்கங்களின்

‘பெருக்குத் தொகை ‘

‘கூட்டுதொகை ‘

எல்லாம்

அந்தப்பக்கத்தின்

‘கலித்தொகைக்கு ‘ச்சமம்.

காதலின்

‘பித்தக் ‘கோரஸ் தேற்றம் இது.

இந்த

சதுர ஜியோமிதியில்

மிதி பட்டுக் கிடக்கும்

என் கனவுக் ‘கணக்குகளின் தீர்வு ‘

எப்போது ?

6

தங்க நிலவே!

கம்பிகள் வழியே

பிதுங்கி வந்து

நேற்று

இந்த அறைக்குள்

ஈயம் பூசி

இளித்து விட்டுப்போன

அந்த வெண்ணிலவின்

சுவடுகளை

சுத்தம் செய்து விட்டு போ

உன் தாிசனத்தால்!

7

வேடந்தாங்கல் பறவையே!

வேடம் தாங்கியது போதும்

பார்க்காதது போல் பார்த்த

கூாிய

உன் விழி அம்பு பட்டு

இந்த வேடன்

துடித்துக் கொண்டிருப்பதை

நீ இன்னும் பார்க்க வில்லையா ?

8

ஒரு ‘கிரெளஞ்சமே ‘

இன்னொரு

‘கிரெளஞ்சத்தை ‘

வதம் செய்யும்

புதிய ‘கிரெளஞ்ச வதம் ‘ இது.

சன்னல் கம்பிகளையே

(அ)சோக வனமாக்கி

இந்த ராமனை

சிறைப்படுத்திய

ஒரு சீதையைப்பற்றி

இன்று

ஒரு புதிய இராமாயணம்

எழுதியிருப்பான் வால்மீகி.

9

ஒரு முறை

பார்த்து விட்டுப் போய் விடு.

அப்புறம்

எனக்கு இது

கம்பிகளில் மிடைந்த

இரும்புக்கோட்டம் அல்ல.

கணு கணுவாய்….உன்

கண் முளைத்து இனிக்கும்

கரும்புத்தோட்டம் அது.

10

திறந்து திறந்து மூடி

மூடி மூடி திறந்து

நீ

சொர்க்கவாசல் காட்டும்

அந்த சன்னல் கதவுகளின்

கீல்களுக்கு எண்ணெய் போட

என் இதயம்

அங்கே இரத்தம் பாய்ச்சும்.

11

திடாரென்று ஒரு நாள்

அங்கே

கம்பி இல்லை கதவு இல்லை

சன்னலும் இல்லை.

சுவர் எழுப்பியிருந்தார்கள்.

உயிரோடு சமாதியா

நம் காதலுக்கு ?

உன் அப்பன் எனும்

அந்த ‘அக்பன் ‘

இவ்வளவு கொடுமைக்காரனா ?

12

கொத்தனாாின் கருணையில்

சிமிண்ட் பூச்சின்

அந்த சின்ன விாிசல்

எனக்கு ஒரு வானவில்.

அந்த வெடிப்பின் கீற்றில்

நம்பிக்கையின் மின்னல் கீற்று.

மேலே பார்த்தேன்.

ரோஜாப்பூவாய்

உன்னை செருகிக்கொண்டு

அந்த ‘மொட்டை ‘ மாடி

உன் ‘கருங்கூந்தலின் ‘

ஈரம் உலர்த்திக்கொண்டிருந்தது.

 

 

  Thinnai 2000 July 09

திண்ணை

Series Navigation

ருத்ரா

ருத்ரா

சன்னல்

This entry is part [part not set] of 7 in the series 20000507_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்.


துயில் நீங்கி

கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறம்தள்ளி

சோம்பல் முறித்தபடி எழுந்து

சன்னல் திரை தன்னை ஒதுக்கி விட்டேன்

இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நாள்.

புராணத்துப் பாற்கடலில்

சூரியனின்

பொற்தோணி வந்தது போல்

வெண்பனி போர்த்த உலகில் பகல் விடியும்.

வெள்ளிப் பைன் மரங்கள்.

இலையுதிர்த்த வெள்ளிப் பேச் மரங்கள்.

வெள்ளி வெள்ளிப் புல்வெளிகள்.

என்ன இது

பொன்னாலே இன்காக்கள் *

பூங்கா அமைத்ததுபோல்

வெள்ளியினால் வைக்கிங்கள்**

காடே அமைத்தனரோ.

காடுகளின் ஊடே குதூகலமாய்

பனிமேல் சறுக்கி ஓடுகின்ற காதலர்கள்.

பின் ஓடிச் செல்லும் நாய்கூட மகிழ்ச்சியுடன்.

நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு.

போர் என்ற ஓநாயின்

பிடி உதறித் தப்பிய நான்

அதிட்டத்தால்

வாட்டும் குளிர் நாளில் கூட

வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின்

நாடு வந்தேன்.

வெண்பனியின் மீது சூரியன் விளையாடும்

நாட்கள் எனக்கு உவகை தருகிறது.

என் மைந்தன் என்னோடிருந்தால் இவ்வேளை

நானும் அவனும் இந்த

வெள்ளி வெள்ளிக் காடுகளுள்

விளையாடக் கூடுமன்றோ.

“சூரியனைப் பிடித்துத் தா” என்று அவன் கேட்டால்

வெண்பனியில் சூரியனை வனைந்து நான் தாரேனோ.

“ஏனப்பா இலங்கையில் வெண்பனி இல்லை” என்பானேல்

முன்னர் இருந்ததென்றும்

கொதிக்கின்ற சூரியனார் அதன்மீது காதலுற்று

அள்ளி அணைக்க அது உருகிப் போனதென்றும்

பின்னர் துருவத்தை வந்து அது சேர்ந்த தென்றும்

அதனாலே சூரியனார் துருவம் வரும்போது

வெப்பத்தை நம் நாட்டில் விட்டு விட்டு வருவதென்றும்

கட்டி ஒரு நல்ல கதை சொல்ல மாட்டேனோ ?

கருவில் இருந்தென் காதல் மனையாளின்

வயிற்றில் உதைத்த பயல்

நினைவில் இருந்தென் நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்.

நமக்கிடையே

ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கிறது

விசா என்ற பெயரில்.

வெண்பனி மீது

இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.

*இன்கா : தென் அமரிக்க தொல்குடிகள்- பொன்னால் செயற்க்கைப் பூந்தோட்டம்

அமைத்தவர்கள்.

** வைக்கிங்: நேர்வீஜியத் (ஸ்கண்டிநேவிய) தொல்குடிகள் (1990 )

இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையின் நோர்வீஜிய மொழியாக்கம் வெளிவந்தபோது எனது மனைவிக்கும் மகனுக்கும்

நோர்வே வர விசா அனுமதி வளங்கப்பட்டது.

 

 

 

Thinnai 2000 May 07
திண்ணை

Series Navigationசித்ராதேவி >>