“சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

நா.முத்து நிலவன்


மைசூர்-செம்மொழி தமிழ் உயராய்வு மையமும்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாக்கள், (சங்க இலக்கியங்களை வெளிஉலகம் அறியச்செய்த உ.வே.சாமிநாதர் பிறந்த
பிப்ரவரி 19ஐ உள்ளடக்கிய) பிப்ரவரி 16 முதல் 24 வரை தமிழ் நாடெங்கும் 100 இடங்களில் நடத்தப் படுகின்றன. (என்னைப் போல் த.மு.எ.ச.தலைவர்கள் பேரா.அருணன், பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன், துணைப் பொதுச்செயலர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வெங்கடேசன், மற்றும் செம்மொழி உயர் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் இராமசாமி அய்யா, இசைஆய்வர் பேரா.அரிமளம் சு.பத்ம நாபன் முதலானோரை உள்ளிட்ட அறிஞர் குழுவினர் தமிழகத்தின் 100க்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது)

இதில், நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் (மட்டும்) பின்வருமாறு :
08-02-2008 – கரூர், – ஆயத்தக் கூட்டம் :
16-02-2008 – சென்னை, – தொடக்க விழா (அறிஞர் வா.செ.கு.அவர்களுடன்…)
18-02-2008 – ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்,(எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுடன்)
19-02-2008 – தருமபுரி, (இரண்டு கல்லூரி+ பேரா.மாதையன் அவர்களுடன்…)
20-02-2008 – திருச்சி, (‘பழங்காசு’ சு.சீனிவாசன் அவர்களுடன்…)
21-02-2008 – திருப்பத்தூர், (தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருடன்…)
22-02-2008 – எரிச்சி (சாலை ஓரத்தில் மேடையிட்டு பொதுமக்கள் மத்தியில்…)
23-02-2008 – காலை நாகப்பட்டினம் (M.L.A, அனைத்துத் தமிழ் அமைப்புகளுடன்…)
– மாலையில் அறந்தாங்கி (கவிஞர் ஜீவியுடன்…)
25-02-2008 – திருச்சி- மகளிர் கல்லூரியில் (பேரா.செல்வகுமாருடன்…)
வரும் 29-02-2008 – புதுக்கோட்டை
(மதுக்கூர் இராமலிங்கம், கவிஞர் தங்கம் மூர்த்தியுடன்…)

மேற்காணும் விழாக்களில், பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், திரு.வி.க., வையாபுரிப் பிள்ளை முதலான தமிழ் அறிஞர்களின் படங்களோடும்,
திருவள்ளுவர்- பாரதியார்- அவ்வையார்- வள்ளலார் வேடமிட்ட குழந்தைகளோடும், சங்க இலக்கிய நூல்களின் அட்டைப் படங்களை பெரிது படுத்திய அட்டைகளோடும் ‘தமிழ்-ஊர்வலம்’ சென்றோம்.
”சங்க இலக்கியம் கற்போம், நம் சொந்த மரபைக் காப்போம்” எனும் முழக்கங்களோடு, வீடு வீடு வீடாகவும் கல்லூரி, பள்ளிகளிலும் நுழைந்து –
“சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் -மற்றும்- உ.வே.சா.வின் தமிழ்ப்பணிகள்” எனும்
16 பக்க சிற்றேட்டை இலவசமாக வழங்கி வந்தோம்.( ஊருக்கு 1,000 பிரதிகள்வீதம் தமிழ் நாடு முழுவதும் ஒரு லட்சம் பிரதிகள் இவ்வாறு வழங்கப் பட்டன)
கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே சங்க இலக்கியம் பற்றிய கட்டுரை, பேச்சு,
ஓவிய, இசைப்போட்டிகளும் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப் பட்டன.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தமிழறிஞர்களோடு, மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர்களும் ஆங்காங்கே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பேச்சாளர்களில் ஒருவர், ‘சங்க இலக்கியத்தின் இன்றைய பயன்பாடு’ குறித்தும் மற்றொருவர், ‘உ.வே.சா.அவர்களின் தமிழ்ப்பதிப்புப் பணிகள்’ குறித்தும் பேசிவந்தனர். வெற்று கோஷங்களும், ஆரவார அலங்கார மேடைப்பேச்சுகளுமாகப் பழகியிருந்த
தமிழ்மக்களுக்கு இ·தொரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும்!
கரும்பு தின்னக் கூலி கொடுத்த செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையத்தினர்க்கு நன்றி கூற நற்றமிழ்ச்சொற்களைத் தேடி, சங்க இலக்கியத்தை மீண்டும் படிப்போம்!
(விரைவில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுவிற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் கலந்துகொண்ட தமிழறிஞர்களின் அனுபவங்களைக் கேட்டு மீண்டும் இதுகுறித்து விரிவாக எழுதுவேன்)
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
மாநிலத் துணைப்பொதுச் செயலாளர், த.மு.எ.ச.,
புதுக்கோட்டை-622 004, தமிழ்நாடு, இந்தியா.
26-02-2008
செல்பேசி: +91 94431 93293,
மின்னஞ்சல் :

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்