சங்கப் பாடம்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

நா.முத்து நிலவன்.


தி.மு.க.தலைவருக்காகப்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

ம.தி.மு.க.தலைவருக்காகப்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

மார்க்சிஸ்ட் வாலிபர்கள்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

பொக்குவரத்துத் தொழிலாளர்கள்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

பொதுத்துறை ஊழியர்கள் ஊழியர்கள்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

தொழிலாளிகள் போராடினார்கள்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

விவசாயிகள் போராடினார்கள்

போராடினார்கள்,

நான் மெளனமாயிருந்தேன்.

இப்போது நான் போராடுகிறேன்,

எனக்காகக் குரல்கொடுக்க

யாருமே இல்லை.

(உலகத் தொழிற்சங்கக் கவிதையை

உள்நாட்டில் தழுவியது)

————————————-

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்