கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

பிரக்ஞை ரவிசங்கர்


மிக நன்றாக ஒரு வரலாற்றுச் சிக்கலை விரித்துள்ள கட்டுரை, அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது ஒரு விதத்தில் எனக்குப் பிடிக்கிறது.

இந்த முறை, நிறைய வாசகர்களை உள்ளிழுக்கலாம். ஆனால் எதையும் எல்லா ஊடகங்களிலும், பெரும் உருப்பெருக்கம் வழியே மட்டுமே பார்த்து, பொதுப் பின்னணி, தற்காலம், தொலைக்காலம் ஆகியனவற்றின் சரியான கலப்புடன் கூடிய வரலாற்றுப் பார்வை
என்று நல்ல சமனம் அற்றே எதையும் பார்க்கப் பழகி உள்ள தமிழர்களுக்கு இந்த வகை அடக்கி வாசித்தல் வழியே உள்ளடக்கம் போய்ச் சேருமா என்று தயக்கமாக இருக்கிறது.

வாசகர்களின் அறிவுத் தேட்டை பற்றி எனக்கு சமீபத்தில் எழுந்துள்ள அவநம்பிக்கை இதில் இறங்குகிறது என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரம் தமிழில் வெளி வந்துள்ள டஜன் சிறு பத்திரிகைகளும், அவற்றின் ஓரளவு ஆழ அகலத்துடன் உள்ள எழுத்துகளும் எனக்கு சிறிதாவது நம்பிக்கை தராமல் இல்லை.
வார்ப்புகளை நம்பிய அறிவுத் தேட்டையுடன் உள்ள இந்த வாசகர்கள் இக்கட்டுரையின் மென்மையான குரலை உதாசீனம் செய்யாமல் புரிந்து கொள்ள முயல்வார்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டி இருக்கிறது. திண்ணைக்கு மறுவினை செய்து எத்தனை கடிதங்கள் வருகின்றன, இக்கட்டுரையை எத்தனை பத்திரிகைகள் கவனித்து எதுவும் எழுதுகின்றன என்று பார்க்கிறேன்.
இது ஒரு நல்ல துவக்கம். இதை இந்த ஆசிரியர் தொடர்ந்து யூரோப்பியர் தம்மிடையே வெகு காலமாக இருந்த இனப்பிரச்சினைகள், மொழிக்குழுப் பிரச்சினைகள், மதப்பிரச்சினைகள் ஆகியனவற்றை எப்படி காலனிய ஆதிக்க காலத்தில் இந்தியாவுக்கும்
கொணர்ந்து அந்தத் தீக்கங்கை ஊதி ஊதிப் பற்ற வைத்ததோடு இன்றும் அதற்கு விசிறி போட்டு வளர்க்கிறார் என்பதைச் சுட்டி ஒரு கட்டுரை எழுதினால் உபயோகமாக இருக்கும்.
பிரக்ஞை ரவிசங்கர்

Series Navigation

பிரக்ஞை ரவிசங்கர்

பிரக்ஞை ரவிசங்கர்