மட்டன் கைமா –200கிராம்
கடலை பருப்பு –50கிராம்
இஞ்சி –25கிராம்
வெங்காயம் –1(நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு –10பல்
ஏலக்காய் –1
பட்டை –1துண்டு
சிவப்பு மிளகாய் –6
முழு தனியா –1ஸ்பூன்
உப்பு –தேவையான அளவு
எண்ணெய் –2ஸ்பூன்
முட்டை –1
எண்ணெய் –பொரிப்பதற்கு தேவையான அளவு
கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மட்டன் கைமாவை போட்டு லேசாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கடலைபருப்பு, இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது, சிவப்பு மிளகாய், ஏலக்காய், பட்டை, முழு தனியா, வெங்காயம் இவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் அது மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி மூடி வைத்து நன்கு வேகவைக்க வேண்டும்.
அவை நன்கு வெந்து நீர் வற்றி பொலபொலவென்று ஆனவுடன் இறக்கி சூடாக இருக்கும்போதே மிக்ஸியில் லேசான கொரகொரப்புடன் அரைக்கவேண்டும். அவ்வாறு அரைத்ததை சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டி அதன் மத்தியில் ஒரு முந்திரிப்பருப்பை வைக்க வேண்டும்.
அந்த முந்திரிப் பருப்பு விழாமல் இருக்க அடித்த முட்டையில் பருப்பை நனைத்து அதில் ஒட்ட வேண்டும். பின் அந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
- நெடில்
- இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு
- குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1
- பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும்
- பானகம்
- கைமா வடை
- டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (Digital Rights Management) ((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் ந
- டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு
- கடவுளே…கடவுளே…
- நான் பண்ணாத சப்ளை
- பி. ராமன் எழுதிய மலையாள கவிதைகள்
- சிந்தாமணி கொட்லகெரெயின் கன்னடக் கவிதைகள்
- அவமானத்துடன் ஓர் அாிவாள்…..
- டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 2
- (பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம்) மக்கள் விருப்பத்தை எதிர்த்து…
- இந்த வாரம் இப்படி பிப்ரவரி 4, 2001
- வரிகள்