கேரட் அல்வா

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue


தேவையான பொருட்கள்

1 கிலோ கேரட் நசுக்கியது

3 கோப்பை பால் பவுடர்

2 கோப்பை சர்க்கரை

8-10 பச்சை ஏலக்காய்

10 சிறுதுண்டுகளாக நறுக்கிய பிஸ்தா பருப்புக்கள்

10 சிறுதுண்டுகளாக நறுக்கிய பாதாம் பருப்புக்கள்

2 தேக்கரண்டி வால்நட்

1/4 கோப்பை நெய்

செய்முறை

காரட் தூளை ஒரு பாத்திரத்தில் சூடாக்கி அது தண்ணீர் காயும்வரைக்கும் வதக்கவும். நெய்யை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி அதில் ஏலக்காய் பால்பவுடர் கேரட்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். இதனை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்தால் பழுப்பு நிறம் வரும். அப்போது சர்க்கரை மற்றும் பருப்புத்துண்டுகளை போடவும். ஒரு நீண்ட தட்டில் நெய் போட்டு தடவி அதில் இதனை ஊற்றவும். இதன் மீது சிறிதளவு பருப்புத்தூளை தூவலாம். இதனை சதுரங்களாக வெட்டிக்கொள்ளலாம்.

Series Navigation