கூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

வினோத்


ம்ஹீம்…. பி.கே.எஸ் சொன்னார் என்று கருணாநிதி தலைமையில் கூட்டணி ஆட்சி நினைத்துப் பார்த்தேன். பின் வருவன தான் ஞாபகம் வந்தது.

கருணாநிதி முதல்வர்… அது பழகிப் போன சமாச்சாரம் தான்..

என்ன செய்வார்..

கோட்டைக்குப் போனவுடன் முதலில் போடும் கையெழுத்து… எதுவாக இருக்கும்… ?

– வேறேன்ன உலக முக்கியத்துவம் வாய்ந்த , தமிழரகளின் வாழ்வில் செளந்தர்யம் வரச்செய்யும் ‘கண்ணகி ‘ சிலையை மீண்டும் மெரினாவில் வைப்பது தான்.

சரி, வை.கோ என்னத் துறை கேட்பார்.. ?

– உள்துறை தான்.. அப்பத்தான் அவரின் இதயபூர்வ நண்பர்களுக்கு உதவ முடியும். MP ஆக இருந்து தமிழகம் தாண்டி முழக்கமிட்டவர் தமிழகத்திற்குள் குழப்ப முடியும். அமைதி பூங்கா தமிழகம் ‘ஆயுதப் பூங்கா ‘ தமிழகமாக வழி செய்வார்.

திருமாவளவன்… ?

– போலீஸ்துறை கேட்பார்.

அப்பத்தானே தனது அடிப்பிடிகள் செய்யும் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு காவல் கிடைக்கும் என்று.

காடுவெட்டி…. ?

– அய்யய்யோ.. இந்த PKSக்கு தமிழர்கள் மேல் என்னக் கோவமோ… இந்த மாதிரி மனிதர்களை மந்திரிகளாக நினைத்துப் பார்க்கச் சொல்லி பயமுறுத்துகிறார்….

ராம்தாஸ்…:

– வனத்துறை… அங்குதான் நிறைய மரம் உள்ளது. வெட்ட அல்ல வளர்க்க…

இதற்கிடையில், நரிக்கூட்டமிடை மாட்டிய நிலையில் நல்ல மனிதர்கள் நல்லக்கண்ணுவையும் நினைக்கச் சொல்கிறார்…

ஐயா, PKS அவர்களே… இந்த மாதிரி எங்களைப் பயமுறுத்தாதீர்கள்

— வினோத்—

vinod_29_2004@yahoo.com

Series Navigation

வினோத்

வினோத்