குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

ஹெச்.ஜி.ரசூல்



தமிழ்நாடு இலக்கியப் பெருமன்ற குமரிக்கிளையும் நாகர்கோயில் திருச்சிலுவை மகளிர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து 18- 12- 2008 அன்று குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும் என்ற பொருளிலொரு சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி முதல்வர் அருட்சகோ.முனைவர் ரொசாலி முன்னிலைவகிக்க முனைவர் வ.ஜெயசீலி வரவேற்புரையை நிகழ்த்தினார். ஹெச்.ஜி.ரசூல் நிகழ்வை நெறிப்படுத்தி தலைமையுரை வழங்கும் போது கோட்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றை மீளாய்வுச் செய்கையில் மகாராஜாக்கள்,ஆதிக்கச் சாதிகளுடன் மட்டுமே குமரியை நாஞ்சிலாக வடிவமைக்கும் கருத்தாக்கத்திற்கு மாற்றாக பன்மைத்தன்மை அடிப்படையில் அணுகவேன்டும் என்றார். சமணம்,கத்தோலிக்க கிறிஸ்தவம், சீர்திருத்தக் கிறிஸ்தவம்,அடித்தளமுஸ்லிம்கள் தலித்கள் பழங்குடிகள் கலாச்சாரங்களின் வரலாற்றினோடுஅணுகும் முறையியலை முன்வைத்தார்.

வரலாற்றை மேலிருந்து எழுதுதலுக்கு மாற்றாக கீழிருந்து வாய்மொழிக்கதைகளினூடே உளவியல் பகுப்பாய்வு முறையை ஆலன்டான்டிஸ் சிந்தனைகளின் வழியாக அணுகவும் நுண்வரலாறுகள் குறித்த கவனிப்பையும் கூறினார். ஆய்வாளர் ஆர். பிரேம்குமார் கிறிஸ்தவ வரலாறும் அடித்தளமக்களெழுச்சியும் என்றபொருளில் உரையாற்றினார்.புனித தோமா,16-ம் நூற்றாண்டின் புனித பிரான்சிஸ் சேவியர்,19 -ம் நூற்றாண்டின் ரிங்கல் தெளெபே,மீட்பாதிரி பின்னணியில் தோள்சீலைப் போராட்டம், தீன்டாமை வரிக்கொடுமைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை விவரித்தார். ஆய்வாளர் அனந்தசுப்பிரமணியன் நமது பெருமிதங்களுக்குள் பூசி மெழுகப்பட்ட உயிப்பலிகளை ஞாபகப்படுத்தினார்.குமரிமண்ணின் சமணப் பின்னணியை எடுத்துக் கூறிஜைனக் கோவில்கள் வைதீகக் கோவில்களாக மாற்றப்பட்ட வரலாற்றை எடுத்துரைத்தார். குறும்பட இயக்குனர் எஸ்.ஜே.சிவசங்கர் தலித்வரலாற்றோடு தொடர்புடைய வேதமாணிக்கத்தையும், அயோத்திதாசரின் தமிழ் பெளத்தத்தையும்,குமரிப் பழங்குடிகளான கானிக்காரர்களின் வாழ்வியல் சடங்குலகத்தையும் விளக்கினார். ஆய்வாளர் சாகுல்ஹமீது அஞ்சுவன்னங்களின் வழியும், கேரள மாப்பிள்ளை முஸ்லிம்களின் பண்பாட்டு வரலாற்றையும் விளக்கிக் கூறினார்.நெறியாளர் ரசூல் வரலாற்றிற்கும் படைப்பிலக்கியத்திற்குமான ரகசியத் தொடர்பையும் புனைவாக்கம் குறித்தும் குறிபுபுகளைக் கூறி நிறைவுரை ஆற்றினார்.

நிகழ்வுக்கு தமிழ்துறைத் தலைவர் ஜஸ்டின் பியூலா நன்றி கூறினார்.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்