கவியோகி வேதம்
**************
மலையா ? குனிவதுவா ?மண்டையைக் குடையுதய்யா!!
தலைப்புமிகக் கிண்டல்தான்! ‘-என்றாநீர் சாற்றுகின்றீர் ?
..
ஆம்,ஆம்! உற்று,ந ீர் அழகாகப் பாருங்கள்!
வாமனன்போல், அந்(த)அனும விஸ்வ ரூபன்போல்,
..
மரங்கள்,செடிகொடிகள் வளர்ந்தடர்ந்த மலையைநீர்
சரிவில்நின்று, பார்த்துவிட்டால் சட்டெனப் புரிந்துகொள்வீர்;
..
கவியின் ‘கண் ‘ உமக்குண்டா ? கட்டாயம் ரசிப்பீர்நீர்!
புவிநோக்கி மலைகுனியும்! புலனெங்கும் புல்லரிக்கும்!
..
எத்தனைப் பேரழகன்! எத்தனைப் பேரறிஞன்!
எத்தனைப் பெரும்வீரன்! இவ் ‘இராமன் ‘ ? இவனின்முன்
..
எதிர்த்துநின்று எவரேனும் இவ்வுலகில் ஜயித்தாரா ?
மதியிழந்தே கைகேயி ‘மன்னன் ‘இனி நீயில்லை;
..
காட்டுக்குப் போவென்று கட்டளைதான்;தந்தைசொன்னார்!
மாட்டு,மர வுரி ‘என்றே மனம்நையச் சொன்னபோது,
.
அந்த ‘ராம ‘ ‘மாமலை ‘தான், அழகாய்க் குனியலையா ?
வந்ததா சினம்மலைக்கு ? திமிரோடு நிமிர்ந்ததுவா ?
..
உயர்ந்தாலும், பெரும்மலைகள் உயர்ந்தோர்முன் குனிந்ததுண்டே!
அயராத ‘திமிர் ‘மலையும் அனுமன்முன் பணிந்ததுண்டே!
. …*****…
எவ்வளவு பேரழகு ? எவ்வளவு திண்கற்பு!
‘சிவ் ‘வென்று ‘ஓர் ‘சொல்லால் இலங்கையைச் சுட்டிடாமல்,
..
பவ்வியமாய்ச் சீதை-மலை ‘அசோக ‘த்தில் அமரலையா ?
செவ்வையுற அனுமனுமே சேவைபல செய்தபின்னே,
..
அந்தபெரும் ‘சீதை-மலை ‘ அனுமனை நோக்கிநின்று,
‘இந்தஉயர் தொண்டினுக்கே என்ன-கைம் மாறுசெய்வேன் ?
..
என்தலையைத் தாழ்த்திநின்றே எம்மானே! உனைவணங்கி
இன்புறுவேன்! ‘சிரஞ்சீவி ‘ எனும் ‘பட்டம் ‘ நீபெறுக! ‘-
..
எனக்குனிந்தே சொன்னாளே! ‘பாற்கடலில் ‘ எழுந்தமலை
இனிமையுறக் குனிந்ததென்றால் ‘இலக்கியமே ‘ நிமிர்ந்ததன்றோ ?
..
உடலில்லாக் காற்றுக்கே உயர்ந்தமரம் ஒடிந்துவிடும்!
உடல்மறையும் மின்னலுக்கே ஒருதூணும் பொடிந்துவிடும்!
..
நிமிர்ந்ததெல்லாம் என்றும் நிமிர்ந்தே நிற்பதில்லை!
திமிர்ந்த புயலுக்கும் தேரைகள் சிரித்துநிற்கும்!
..
நாணல் குனிவதனால் வெள்ளத்தால் நலிவதில்லை!
வீணனுக்கும் ‘திமிர்ச்-சிரிப்பு ‘ வீழ்ச்சிக்குப் பாய்விரிப்பு!
.
பாரதத்தின் கெளரவர்கள் ‘நிமிர்ந்தமலைக்(கு) ‘ உதாரணங்கள்!
சீரதிகம் பெறும் ‘விதுர ‘-மாமலையோ, குனிந்தமலை!
..
இல்லையெனில், கண்ணனென்னும் இளகிய ‘தெய்வமலை ‘,
இல்லத்தில் குனிந்துசென்று விதுரனிடம் இன்னுரைகள்
..
பலஆற்றி, உணவருந்திப், பரிசுபல செய்வானா ?
நிலைஉணராக் கெளரவர்க்கும் நிமிர்ந்த ‘பலன் ‘ சொல்வானா ?
..
குனியாத அரசனெல்லாம் முனிவர்முன் குனியலையா ?
குனியமறுத் தவேந்தர்கள் குலமெல்லாம் அழியலையா ?
..
இன்றும்தான் பார்க்கலையா ?! எத்தனை அசுரர்கள்
என்கண்முன் தெரிகின்றார்! இளம்வயதில் இவரெல்லாம்
..
ரொட்டிக்கும் கையேந்தி ரோட்டோரம் நின்றவர்கள்
வெட்டிப்பேச் சால்பதவி விரைவாகப் பெற்றவுடன்,
..
இவர்துண்டும் நிமிர்கிறது; இவர்தலையும் நிமிர்கிறது!
அவர்விதியின் நாயகனோ அதோ ‘குனிந்து ‘ சிரிக்கின்றான்!
..
தலைகுனிந்தே ‘கணினியில் ‘ தவறின்றி அடிக்கின்றேன்!;
மலைகுனிந்தால் வாழ்வுவரும்; குனிந்தால்தான் வரும் ‘தெய்வம் ‘ ‘!
**************************
kaviyogi_vedham@yahoo.com
- ஆசியப் புலம் பெயர்ந்தோர் பற்றிய சர்வே
- வைரமுத்துக்களின் வானம் -9
- ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் (கூட்டுக்கவிதை )
- வருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)
- மொழியெனும் சிவதனுசு
- தனக்குத் தானே பேசிக்கொள்ளும்
- க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்
- ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)
- கடிதங்கள் – நவம்பர்-20, 2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – நவம்பர் 20, 2003
- இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)
- உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2
- காசி யாத்திரை
- கலக்கம்
- ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை
- குறிப்புகள் சில- நவம்பர் 20,2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4
- மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்
- நாச்சியார் திருமொழி
- ஆதி – ஒரு புதிய தமிழ் மாத ஏடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘
- வீணாகப் போகாத மாலை
- பிரமைகளும், பிரகடனங்களும்-2
- பொறியில் சிக்காத பிதாமகன்.
- தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…
- எங்கே நமக்குள் சாதிவந்தது ?
- நலங்கெடப் புழுதியில்…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று
- நூருன்னிசா
- அந்த நாலுமணிநேரம்
- நந்தகுமாரா நந்தகுமாரா
- காத்திருந்து… காத்திருந்து….
- கனவின் கால்கள்
- அலுவலகம் போகும் கடவுள்
- குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )
- எது மரபு
- கலியுகம்
- அன்றைக்கு அப்படியே போயிருந்தால்
- விடியும்!- (23)
- உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை
- முரண்பாடுகளில்…
- விடாத வீடு
- குனிந்த மலை
- குளம்
- நான் நானில்லை
- புரியாமல் கொஞ்சம்…
- ஒன்று நமது சிந்தனை
- தமிழ்
- காதல் லட்சம்
- மெளனம்…