கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


எனக்குக் தெரியவில்லை!
கடந்து போன
எந்தக் காலம் தொட்டு என்னைச்
சந்திக்க
நெருங்கி நீ அருகே,
வருகிறாய் என்று ?
பரிதியும், விண்மீன்களும்
ஒருபோதும்,
மறைக்க முடியாது,
என்னிட மிருந்து
உன்னை!
ஒவ்வொரு நாளும்
காலை, மாலை இருவேளையும்
உனது
காலடித் தடம் வைப்பு
அரவங்கள்,
காதில் விழும்! உந்தன்
தூதன், என்னை
ரகசியமாய் விளித்தான்,
என் இதயத்தின் உள்ளே
புகுந்து!

எனக்குத் தெரியவில்லை இன்று,
என் வாழ்க்கை
முழுவதிலும்
ஏன் கொந்தளிப்பு நேர்கிற தென்று ?
எங்கிருந்து வந்தததோ
தெரிய வில்லை,
நெஞ்சினைக் கடந்து செல்லும்
எந்தன்
பூரிப்பு நடுக்கம் ?
வேலை எல்லாம்
இடையில் நிறுத்தி விட்டு
மூட்டை கட்டி நான்
காடேகும்
தருணம்
நெருங்கி விட்டது போல்
தெரிகிற தெனக்கு!
காற்று வெளியில் எழும் எனது
வேற்றுணர்வுக்
காட்சி இது: கண்களில்
மங்கலாகிக் கொண்டு
வருகிறது,
மணக்கும் உன் இனிய
இருக்கை!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 16, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா