கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


முதுமையில் ஆற்றல் குன்றி
இறுதியில்
விளிம்பின் எல்லை தொட்டு
என் பயணம்
முடிந்துதான் போனதுவோ ?
இதுவரை
நடந்த பாதை
எதிரில் மூடித்தான் போனதுவோ ?
கைவச மிருந்த சரக்குகள்
எல்லாம்
காலியாய்ப் போயினவோ ?
ஓய்வாக
கண்காணா நிசப்த மூலையில்
காலம் தள்ளும்
வேளைதான்
வந்து விட்டதுவோ ?
என்றென் மனம்
நொந்து போனது.

ஆயினும்
அறிந்து கொண்டேன்,
எனது பயணம் முடிந்து போவது
உனக்கு
விருப்பம் இல்லை
என்பதை!
நான் படைத்த முந்தைய
பாக்கள்
நாக்கில் வரண்டு போனதும்,
புதிய கீதங்கள்
பொங்கி எழுந்தன
இதயத்தில்!
பண்டைய
தடங்கள் மறைந்து போன
இடத்தில்
புதிய பூமி உதயமானது,
அதிசயமாய்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (Revised Feb 7, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா