காமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…

This entry is part [part not set] of 31 in the series 20020217_Issue

சிறு கவிக்கோ பெரும்பிடுகு முத்தரையன்


(படையல் – குமாிக் கண்டம் மற்றும் வட அமொிக்கா வாழ் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களுக்கு)

கல் தோன்றி
மண் தோன்றாக்
காலத்தே
முன் தோன்றிய
மூத்த குடி யாம்!

அறம் பொருளுடன் இன்பத்துடன்
XXX காவியங்களும்
கண்டோம் யாம்!
(நன்றி ஜெயமோகன்)

வீடு பேறு ஆாியர்தம்
சூழ்ச்சியெனத்
தெளிந்தே…
சின்ன வீடு கண்டனம் யாம்!

எங்குற்றான் என் தமிழன்!!

வணிகன் கோவலன்
மாற்றி விட்டான் இல்லந்தனை…
இரவு செட்-அப்பும்
காலை கெட்-அப்பும்
வேறெங்கோ இங்கில்லை…

எங்குற்றாய் என் தமிழா!!!

அந்தோ…
காமத்தில் களிறுகின்றாள்
கற்புக்கரசி

சிலை கிடக்கட்டும்…
ாீட்டா மோியர்
தந்த விலை
கண்ணகியர் தரலாமா ?

மதுரை நகர்த் தமிழன்
ாமாண்புடன்ா எாிய
மரத் தமிழர் அனுமதியோம்!

‘மதுரையை எாிக்க
கண்ணகியின் மார்பென்ன
பாஸ்பரசா ? ‘ –
எனக் கேட்ட அய்யாவின்
அகங்குளிர…

பாலியற் றீங்கு நீங்க
கற்பென்ற சொல்லைக்
கற்பழிப்போம்…
இனி…
காமத்தில் களிறும் கண்ணகியர்
உடற்தீயும் உளத்தீயும்
ஒருங்கே அணைக்க
புதிய தமிழா
புறப்படுக…

(திருவள்ளுவர் ஆண்டு 2033, காதலர் திருநாளன்று அருளிப் போந்தது)

Series Navigation

சிறு கவிக்கோ பெரும்பிடுகு முத்தரையன்

சிறு கவிக்கோ பெரும்பிடுகு முத்தரையன்