அனந்த்
கணினியில்நீ ஈடுபடுங் காலை எலியாய்ப்
பணிவுடனுன் கைக்குள் படுப்பேன் தணியாத
ஆவலுடன் நீகளிக்கும் அச்சொற் *புதிரில்நீ
ஏவிடுமுன் வந்தவ் வெழுத்தாவேன் மேவிநீ
நாடும் உடற்பயிற்சி **யந்திரத்தின் காலடியில்
ஓடுமப் பாயாய்ப் பதம்பிடிப்பேன் மெய்வியர்த்து
வாடிநீ நிற்கையிலே விட்டத்தில் சுற்றுங்காற்
றாடியாய் உன்னுடலை ஆரத் தழுவிடுவேன்
மாடியில் நீபடுக்கும் மஞ்சத்தின் உள்ளிருக்கும்
கோடிக் குமிழ்ப்பஞ்சுக் குள்ளிருந்துன் நித்திரைக்குப்
பாடும்மென் தாலாட்டுப் பாட்டாயவ் வானொலியிற்
போடும் iஇசைத்தட்டில் புக்கிருப் பேன்;கண்
இiதழ்மூடி நீதுயிலும் iஇவ்வேளை யானுன்
அதரம் அரும்புஞ் சிரிப்பு.
* குறுக்கெழுத்துப் புதிர் போன்றவை; ** மிதியுருள்பொறி ( ‘ட்ரெட் மில் ‘)
- முடிவின் துவக்கம்…..
- எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு (E.T)..
- பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)
- மனக்கோலம்
- இந்தவார அறிவியல் செய்திகள் – சூலை 1, 2001
- பொறாமை
- விசித்திர வதை
- இருளில் மின்மினி
- இதயம் கூடவா இரும்பு ?
- ஆயுள்
- இருதயம் எஙகே!
- காதல் சேவை
- முன்றாவது நிலவு
- தீயவனாக இரு!
- பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2001
- செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)