காதலும் கணினியும்

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

சுஜல்


இரண்டுமே அவரவர் அறிந்து உணரும் வரை ஒர் ஆச்சிாியமான விஷயம்தான்.
இரண்டிலும் காலம் நேரம் மனது உணராது
இரண்டையும் கையாள தனித்திறமை வேண்டும்.
அவரவருக்கு அவரவரே வல்லுநர் – இரண்டிலும்!

மிஞ்சினால் கெஞ்சுவது கெஞ்சினால் மிஞ்சுவது-இரண்டிலும் உண்டு
இரண்டில் எது நின்றாலும் உலக இயக்கம் தடைபடும்
இரண்டிற்கும் மொழியோ எண்ணற்றவை -அறிந்தோருக்கே வெளிச்சம்
இரண்டின் மோகமும் கொல்லாமல் கொல்லும்

இரண்டின் வளர்ச்சிக்கும் முடிவும் இல்லை,எல்லையும் இல்லை.
இரண்டையும் முழுதுணர ஜென்மம் ஒன்று போதாது.
இரண்டின் தாக்கத்திலிருந்தும் விடுபடுவது கடினம்
இன்றும் பாரதத்தில் இவ்விரண்டிற்கும் மதிப்பு உயர்வு

இவ்விரண்டின் சுகத்தையும் பெற்று இழந்து நிலை தடுமாறினோர் அநேகம்
பலாின் எதிர்காலம் இவ்விரண்டின் கையில் தான்.
எப்பொழுது மேலுயர்த்தும்.எப்பொழுது வீழச் செய்யும்-யாரும் அறியர்

இரண்டிலும் இன்று போலிகள் வர அதன் தூய்மை கெட்டது.
எது போலி எது நிஜம் என பிாித்தறிவது கடினம்தான்.
இரண்டுமே- சிலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு கடமை சிலருக்கு புாியயாத புதிர்
சிலருக்கு அதுவே உலகம்

ஒரே வித்தியாசம்-
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் ‘-கணினியில் இயல்பு
‘பழையன கழிந்தாலும்,உயிரை கிழித்தாலும் அதன் நினைவுடனே வாழ்வது காதலில் சால்பு!! ‘

Series Navigation

சுஜல்

சுஜல்