ஹெச்.ஜி.ரசூல்
நான் காக்கைக் குரல்களை சேகரித்து
ஒரு குயில் செய்தேன்.
காக்கையின் வடிவத்தில் குயிலின் குரலும்
குயிலின் வடிவத்தில் காக்கையின் குரலும்
இரண்டும்கெட்டானாய் இருந்தது.
இறுதியாக நான் எழுதிய கவிதையிலிருந்தும்
ஒரு காக்கை பறந்து சென்றது.
காக்கைக் குரல் பிடித்துப் போக
பெருவெளியில் சுற்றியலைந்து
கானகத்தில் உறைந்தேன்.
எங்கிருந்தோவந்த காக்கைப்பாடினி
என் உடலை இறுகக் கட்டியணைத்து
ஒரு முத்தம் தந்தாள்.
பல காலமாய் அலைந்து திரிந்து
வீடு திரும்பி
அறைக்கதவைத் தட்டுகையில்
என்னோடுவந்த கருங்குருவியை
அணைத்துக் கொள்கிறேன்.
இப்போதெல்லாம்
சன்னல் விளிம்போரம் விழித்தபடி
பறவையின் குரல்களை ஒட்டவைத்து
விதவிதமாய் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஹெச்.ஜி.ரசூல்
நான் கொடுத்த புகார்மனுக்கள்
எதையும் வாசிக்காமலேயே
எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
என் கடவுளுக்கு
எப்படி மரணம் நிகழுமென்றேன்..
தற்கொலை செய்ததின் விளைவாய்
அது நிகழ்ந்திருக்கலாம் என்றாய்…
எனக்கு நம்பிக்கையில்லை
நம்பிக்கையை எல்லோருக்கும் வாரி வாரி வழங்கி
ஒரு நம்பிக்கையாகவே வாழ்ந்த என் கடவுள்
தற்கொலை செய்ய சாத்தியமில்லை
கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை
நிறைவேற்றுவதாய் வாக்குறுதி தந்த கடவுள்
துன்பப் பெருக்கிலிருந்து
மக்களை விடுதலை செய்து
பலருக்கு உருவத் தோற்றத்துடனும்
சிலருக்கு உருவமற்றும்
வணங்குதலுக்குரியவராய் இருந்திருக்கிறார்
ஆதிமனிதனுடன் உருவாகி
தொன்மையின் சுவடுகளைக் கடந்து
உயிர்வாழ்ந்த
எனது கடவுளின் மரணத்தை அறிவித்தது
ஒரு பொய்யுரையாகக் கூட இருக்கலாம் என்றேன்.
எனது கடவுளை எதிரிகள் எவரேனும்
தாக்கியிருக்கக் கூடுமோ என்றேன்.
அன்புமயமான கடவுளுக்கு
எதிரிகள் எவருமில்லையே என்றாய்.
கொஞ்ச நாட்களாகவே கவலையிலிருந்தார்
கடவுள்
பச்சிளம் பிஞ்சுகளையும்
மரங்கள் செடிகள் கட்டிடங்களையும்
உருவற்று எரித்தழிக்கும்
பாஸ்பரஸ்குண்டுகள் வீசும் கொலைக்கரங்களுக்கு
ஆதரவும் ஆசிர்வாதமும் அளித்தது
எனது இமாலயத் தவறென்று
தன்னைத்தானே நொந்தும் கொண்டிருந்தார்
கடவுளின்
கடைசி டயரிக் குறிப்புகளைச் சொல்லி
அதிகாரத்திற்கும்
ஆணாதிக்கத்திற்கும்
ஆதரவாயிருந்த கடவுளுக்கு
எதிரிகள் இல்லாமல் இல்லை என்றேன்.
கடவுளின் மரணம்
உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றென்று
மீண்டும் உறுதியாகச் சொன்னாய்.
இந்த மரணம் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்
கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தாய்.
உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை
இருள் செறிந்த ஒரு நள்ளிரவில்
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்
என் வணக்கத்துக்குரிய கடவுளை
நான்தான் கொலை செய்திருந்தேன்.
நன்றி
வார்த்தை மாத இதழ் மார்ச்2009
- நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் – கோவிந்தசாமி கடிதம் பற்றி
- டெல்லி கலாட்டா மின்னிதழ்
- I, BOSE by ELANGOVAN
- மத்திய இத்தாலிய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம் ! (2009)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -4
- கலில் கிப்ரான் கவிதைகள் << வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் ேர்தலாயிருந்தால் என்ன?) BJP (பா.ஜ.க) வாக்குறிதிகள்
- ஒரு நல்ல சிநேகிதி
- கடைசிப் புத்தகம்
- இரு கவிதைகள்
- சூன்யத்தில் நகரும் வீடு
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பது
- “எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”
- பூச்சாண்டி இதழ் – சாருநிவேதிதாவிற்கு கோபால் ராஜாரமின் பதில் குறித்து
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- சங்கச் சுரங்கம் — 9 : சங்கநிலா
- ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்
- மறைக்கப்பட்ட செய்திகளும் பக்கச்சாய்வான விவாதமும்
- சென்னை சேரிவாழ்முஸ்லிம்கள -அடித்தள தொழில்கள்
- வேத வனம் விருட்சம் 31
- அம்மாவின் துர் கதை
- காக்கைப் பாடினியின் பேச்சு/ எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது
- இன்று…
- அகதியாயும் அனாதையாயும்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -31 << என் கனவு ! >>
- தமிழ் புத்தாண்டு சித்திரை 1 மற்றும் தை 1
- மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்