கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

சத்தி சக்திதாசன்


பார்வையால் நீ பதித்த வடுக்களை
பாவையே நான் திரும்பத் தந்து விடுகிறேன்
சூரியனை எரித்த நினைவுகள் கொடுத்த
சூடான எண்ணங்களையும் எடுத்துக் கொள் – என்
உள்ளத்தை மட்டும் திருப்பிக் கொடு

காதலெனும் மேகம் பொழிந்த
கானல் நீரெனும் மழையதை
நீராவிக்கியாக்கி எடுத்துக் கொள்
நீர்க்குமிழித் தேவைதையே – என்
உள்ளத்தை மட்டும் திருப்பிக் கொடு

கன்னியுந்தன் மனதினிலே சீராகக்
காளை நான் ஓட்டியதோர் காதல் தேரென்பதையே
கனவாக திசைமாறச் செய்தவளே!
காட்சிகளை நியே எடுத்துக்கொள் – என்
உள்ளத்தை மட்டும் திருப்பிக் கொடு

திருடிய என்னுள்ளத்தை கள்ளி நீ
திருப்பித் தரப்போவது எப்படி ?
உடைத்துத் தூளாகத்தானே தருவாய் – நானறிவேன்!
ஊமைராகம் எனும் பசை கொண்டு ஒட்ட வைப்பேன்
உள்ளத்தை மட்டும் திருப்பிக் கொடு

****

எது செல்வம் ?

சத்தி சக்திதாசன்

வானிலைத் தென்றல டிக்குது ; என்மனம் துடிக்குது
வீணினை வாழும்ம னிதர்கள் பக்கமே குது

தூணிணைப் போல தாங்கிடும்வ கையற்று ஏன் நடிக்குது
துன்புற்ற மனங்களினி லையைப் பார்க்க மறுக்குது

தேனினைச்சு வைப்பது போல நன்மனங் கள் உய்க்குது என்னும்
தெள்ளிய உண்மையையு ணர உள்ளங்கள் மறக்குது

மானினைப்பொல மக்கள் ஆனந்தித்திலா டிச்செ ழித்திடுங் காட்சி
மூடிய மனங்களிலெ ப்படி தோன்றிடும் கூறிடு தோழா

சாணினைப் போலத்தூ ரமேறிய ஏழையர் பாவம் அடியினைப்போல்
சறுக்கிடும் பொழுதுகள் விளங்கிடுமு ள்ளங்கள் விழித்திடும்

ஏனினித் தோழர்களெ ல்லாம் சிரத்தினில் கொள்வீர் ; சேரிகள்
ஏற்றம் கண்டு சிரிக்கும் காட்சியொன்றே செல்வமென்றே !

****

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்