கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

சத்தி சக்திதாசன்


தேடியது கிடைக்கவில்லை
தோன்றியது நிஜமமுல்லை
தாண்டியது வழியேயில்லை
தாங்கியது சுமையுமில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

சிரிப்பினில் இனிமையில்லை
சிந்தனையில் தெளிவுமில்லை
சீரான கொள்கையில்லை
சிறகுகளில் வலிமையில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

வந்ததில் பொருளுமில்லை
வருவதில் லாபமில்லை
வாழ்க்கையில் வென்றதில்லை
வாசமுள்ள மலர்களில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

மோதலில் அர்த்தமில்ல
மோகத்தில் நியாமில்லை
மேகத்தில் மழையுமில்லை
மொத்தத்தில் உண்மையில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

கொஞ்சலில் குளிர்மையில்லை
கெஞ்சலில் இரக்கமிலை
கோலத்தில் மாற்றமில்லை
கொண்டதில் தீர்க்கமில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

காத்ததில் கருத்துமில்லை
காதலில் அன்புமில்லை
கண்டதும் நினவிலில்லை
கட்டளை ஏற்பதில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

வேதத்தில் விவேகமில்லை
வேதனை மறப்பதில்லை
வாடிக்கை காப்பதில்லை
வசந்தத்தின் வாடையில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

என்னை அறிந்ததில்லை
எதுவும் ஆறுதலில்லை
ஏனோ அமைதியில்லை
எங்கும் போகப் பாதையில்லை
பாலைவனத்துக் கானல் நீர்

0000

விழி பேசும் கதை

சத்தி சக்திதாசன்

நானிங்கு கேட்டதொரு மொழியவள் விழி பேசிய கதையன்றி வேறில்லை
நாளும் மனதில் அலையாடும் உரையாடல் மறந்தொரு வேளையுண்டோ ?

அன்பாய்ச் சொல்லும் வரிகள் அளவாய் மிதந்திடும் பார்வைத் தோணியில்
அவளின் வாயினில் வார்த்தைகள் வீணென பொருதிய பார்வைகள் போரிடும்

நினவுகள் எனும் புத்தகம் படிந்த வரிகள் கூறும் காதல் சங்கேதம் என்றும்
நீங்கா நிழல் அவள் காதல் நித்தமும் இசைக்கும் பாடல் விழிகளினோசை

கனவுகள் கண்டதும் ஒரு காதலின் சித்திரம் விழிகளின் ஓவியம் வரைந்ததுமவளே
காற்றினில் பறந்திடும் உணர்வு அல்ல சாவினில் நிலைத்திடும் காதல் சங்கமம்

இதயச் சுனையில் மலர்ந்தொரு தாமரை விரிந்தது அவள் விழிகள் மலர்ந்தே
இனிமை இசைக்கெனில் அதைக் கொடுக்கும் திறமை இளையவள் கண்களில்

நேற்று இழந்தொரு தூக்கம் நாளை எங்கனம் வாழ்வுறும் பாவையின் பார்வையின்றி
நெஞ்சம் நிறைந்த நிச்சய ராணி பதமாய் என்னுடன் பேசினாள் அவள் விழிகளால்

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்