விசாலம்
தற்கால கல்வியில் நம் எல்லோருக்கும் ஒத்து வரும்படி பல விதமான பிரிவுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. ,நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன.ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தைகள் ஒரு சி ஏ ,அல்லது ஒரு டாக்டர் ஆனாலோ அல்லது இஞ்ஜினியர் ஆனாலோதான் சிறந்த படிப்பு என்று நினைக்கின்றனர் அந்தப் பிரிவில் படித்தவன் தான் சிறந்தவன் என்ற கணிப்பு மாற்றப் பட வேண்டும் எல்லோருக்கும் . அந்தப்பிரிவில் ஆர்வமோ ,அல்லது லட்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை இல்லயா? அப்போது பெற்றோர்கள் தன் மக்களை அவர்கள் விருப்பமில்லாமல் தாங்கள் நினைத்தது தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறு. . சித்திரம் வரைவதில் ஆர்வம் உள்ள ஒருவனை “ஆமாம் நீ என்ன ,,, படம் வரைந்துக் கிழிக்கப் போகிறாய் ,,,அதுதான் சோறு போடுமா?என்று அவனது உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் வார்தைகளை அள்ளி வீசும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்,
,
என் பள்ளியில் மணி அடிப்பவனின் மகன் ,,குஷிராம் என்று பெயர் அவன் அம்மா மிகவும் ஏழை, அவனுக்காக
பாத்திரம் தேய்த்து படிக்க வைத்தாள் அவனுக்கு அவ்வளவு படிப்பு வரவில்லை ஆனால் அவனுக்கு மின்சாரம் பழுதுப் பார்ப்பதில் ரொம்ப ஆர்வம் , கஷ்டப்பட்டு 8வது வகுப்பு தேறினான் அதற்குப் பின் அவனால் முடியவில்லை நாங்கள் எல்லோரும் பணம் சேர்த்து அவனை ஒரு மின்சார சம்பந்தப்பட்ட வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம் ட்ரெய்னிங் இன்ஸ்டிடூயூட்டில் சேர்த்து இப்போது அவன் அதில் வெகு வேகமாக முன்னேறி நிறைய சம்பாத்யம். தற்போதுஒரு கடையே திறந்துள்ளான் அவனில்லாமல் ஒரு கல்யாண்மும் நடப்பதில்லை அவன் தான் விளக்கு அலங்காரம் செய்கிறான் நம் திரு ஹரிஹரன் கஜல் புகழ் ,, படிப்பில் பெரிய அளவு இல்லை என்றாலும்
குரல் வளமும் பாட்டில் இருக்கும் உயிரும் எல்லோரையும் வளைத்துப் போட்டது குழந்தையிலிருந்தே அவரை எனக்குத் தெரியும் குடுமப நண்பர்கள் ஆனதால் எனக்கு நல்ல பழக்கம் நான் ஒரு தடவை ஜெனீவா போயிருந்தபோது ஹோலிப் பண்டிகை இருந்தது.அதற்கு நிறைய இந்தியர்களைக் கூப்பிட்டிருந்தார்கள் நானும் போயிருந்தேன். அப்போது ஒரு இளைஞன் புல்கானின் தாடியுடன் மிகவும் ஸ்டைலாக நடனம் ஆடிக்கொண்டிருந்தான் .பின் நடு நடுவே என்னைப் பார்த்து புன்னகைத்தான் .எனக்கு எங்கேயோ பார்த்தாற்போல் இருந்தது பதிலுக்கு நானும் புன்னகை வீசினேன் .உடனே அவன் ஓடி வந்து “மேடம் நான் தான் மஹேஷ் ,, உங்களுக்குப் பிடிதத மாணவன் என்றான்
பின் குனிந்து என் பாதத்தை ஒற்றிக் கொண்டான் இங்கு எங்கே ? என்றுக் கேட்டேன் “நீங்கள் சொன்னது போல் நான் டெக்ஸ்டைல் டிசைன் எடுத்துப் படித்தேன் இப்போது எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்கிறேன்” எல்லாம் உங்கள் ஆசிகள்தான் என்று சொன்னதும் நான் சுவர்க்கத்திற்கே போய்விட்டேன் ஒரு ஆசிரியைக்கு தன் மாண்வன் பணிவாக பணம் இருப்பினும் கர்வமில்லாது குருவின் காலில் விழுந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு ஏது? தற்போது பெரிய மால் போன்று வியாபார ஸ்தலம் எங்கும் கட்டப்பட்டு வருகிறது. அதில் படிப்பு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் பேசும் திறன் , எல்லோரையும கவரும் ஸடைல் ,புன்முறுவலுடன் ருட்களை விற்கும் திறமை இருந்தாலே போதும் , தவிர ஏதாவது வெளிநாட்டு மொழி பேசவும் எழுதவும் கற்றாலும் நல்ல வேலைக் கிடைத்து விடுகிறது உதாரணமாக ஜப்பானீய மொழி கற்றால் மொழிப் பெயர்க்கவும் அதனைச் சார்ந்த தொழிற்சாலையிலும் வேலைக் கிடைத்து விடுகிறது. இப்போது கல்வி ஹோட்டல் மேனேஜிங் , மாடலிங் , நடிப்பு கல்லூரி ஏர் ஹோஸ்டஸ் டிரைனிங் சில்ப கலை., தோட்டக்கலை என்று பலவிதமாக இருந்து வேலை வாய்ப்பும் கிடைக்கிறது தோட்டக்கலையில் பூக்களை வளர்த்துப் பின
பூச்செண்டுகள் உண்டாக்க அதற்கு இன்று நல்ல வரவேற்பு உள்ளது ,பிறந்தநாள்,திருமண நாள் ,அரசியல் விருந்து போன்ற விழாக்களில் நல்ல மதிப்பு டிமேண்டு ,,,,,ஒரு பூச்செண்டு ரூபாய் 100லிருந்து ஆரம்பித்து ஆயிரங்கள் வரையும் போகிறது
அதை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம் . செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வளர்த்துக் கொண்டால் உலகமே நம் முட்டியில் தான் .ஆனால் வெற்றி அடைய நேர்மை , ஒழுக்கம் .அன்றன்று காரியங்களை அப்போதே முடிததல் ,
மனிதாபிமானம் போன்றவைகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் .
கல்வியில் education in human value என்பதைக் கொண்டு வர வேண்டும் அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை அதற்கு ஆசிரியர்கள் மன ம்கிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர்கள் வீடு சுபீட்சமாக இருக்க வேண்டும் அவர்களுக்குத் தேவையான செல்வம் கிடைக்க வேண்டும் ,மாணவர்களை குழந்தைகளாகவும் அதே சமயம் தன் நண்பர்களாகவும் நினைத்துப் பழக வேண்டும் ,,To sir with love ” சினிமா இதற்கு நல்ல உதாரணம்
ஒரு அறிஞர் சொல்லுகிறார் unless knowledge is transformed into wisdom and wisdom is expressed into charecter education is a wasteful process ,,,,,,,,,the end of education is charecter and the end of knowledge is love .
தங்கம் சொத்து பணம் ,,,இவைகளைவிட நமக்கு கல்வி வழியாகக் கிடைக்க வேண்டியச் சொத்து உண்மை அன்பு ஒழுக்கம் சாந்தி அமைதி ,, இந்த இரத்தினங்கள் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவைகள். இவைகளை இதயம் என்ற வங்கியில்
சேர்த்து வைப்போம் ……
rvishalam@gmail.com
- வார்த்தை மே-2008 இதழில்
- முன்னாள் தெய்வம்
- திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து
- காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !
- ‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்
- பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா
- பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்
- பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 28)
- எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்
- மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்
- உ.வே.சா வின் நினைவில்
- தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
- தீபச்செல்வன் கவிதைகள்
- கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்
- “அக்கர்மஷி”யின் அடையாளங்களைத் தேடி
- பிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா?
- “தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு
- உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.
- வரைமுறைப் படிமங்கள்
- நிழலா..?நிஜமா..?
- Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10
- கண்ணாடி மனிதர்கள்
- அறை எண் 786ல் கடவுள்!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- காலத்தைச் செலவு செய்தல்
- சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்
- சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்
- கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்
- ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்
- மைன் நதியில்..
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4
- கல்வியும் வேலை வாய்ப்பும்
- “ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்
- தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !
- பேற்றேனே துன்பம் பெரிது!
- காதலின் உச்சி
- “பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”
- தடுப்பூசி மரணங்கள்!!