கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

நம்பி.


—————

வேதியல் ஆய்வகம்னா சாராயம் காய்ச்சலாம், இயற்பியல் ஆய்வகம்னா close-up

வைக்கலாம் ஆங்கிலத்துக்கு ஆய்வகம் வச்சா என்ன செய்ய

முடியும். அதுவும் அரைக்கை காக்கிசட்டை பேண்ட் போட்டுகிட்டு வரனுமாம். ஆங்கில

ஆய்வகம் கூத்து ‘ஓரல் ‘ சுந்தரேசன் அரங்கேற்றினார். முதல் ஆண்டு. எதுத்து கேள்வி

கேட்க முடியாது. ‘ வயலும்-வாழ்வும் ‘ கந்தசாமிக்கு கடுப்பு தாங்கல. பட்டறைக்கே

(carpentry, welding, fitting) முழுக்கை காக்கிச் சட்டை போட்டுகிட்டு மாப்ள

மாதிரி வயலும்-வாழ்வும் வருவான். வாத்தியார் மெஷின்ல சட்டை மாட்டிக்கும்னு

சொன்னா அவருக்கு எதுக்க சட்டைய மடிச்சுக்குவான். ஆங்கில ஆய்வகத்துல அதுக்கும்

ஆப்பு. ஓரல், ‘ஆங்கில பாடத்துல தேறனும்னா ஒழுங்கா அரைக்கை சட்டை மாட்டிகிட்டு

வா ‘ன்னு மிரட்டிட்டாரு.

சும்மா பீர் ஊத்திகிட்டு ஒட்ட இங்கிலீஷ்ல பீட்டர் உடுறப்பவே எல்லா channelயும் அமுக்கி

ட்டு ‘ மாப்ளே…. அஞ்சு கிலோ யூரியா….. மூனு கிலோ பொட்டாஷ்….. ‘னு

தனி ஆவர்த்தனம் வப்பான். ஆங்கில ஆய்வகத்துல ஒரு அறையில இருந்து

இன்னொரு அறைக்கு ஆங்கிலத்துல தொலை பேசனும். எப்படியோ சமாளிச்சு

ஓட்டுனான் வனிதா குளிக்காம வந்துட்டா, சந்திரா பல்பு மாட்டுறான்னு. வாத்தியார் கி

ட்ட வந்துட்டா மால்கம் மார்ஷல், டேவிட் கோவர்னு ஆங்கிலம் அவுத்து வுடுவான்.

ஒரு வழியா முதல் ஆண்ட ஒப்பேத்திட்டு வந்தாலும் ஓரலுக்கும், வயலும்-வாழ்வுக்கும்

நடந்த துவந்த யுத்தம் அணையாம அப்படியே இருந்து ஓரலோட வாழ்க்கையில வி

ளையாடிட்டு. மூன்றாம் ஆண்டு பூட்டு விவகாரத்துக்கு பிறகு எங்கள் விடுதிக்கு வார்டனா

ஓரல் வந்தாரு. எப்படியாச்சும் தார் ஊத்துனவன கண்டுபிடிச்சு நல்ல பேரு வாங்கனும்னு

துடிப்பு. முதல் நாளே வயலும்-வாழ்வும் மேல ஒரு கண்ணு வச்சுட்டாரு. பய

ஆய்வகத்துலயே வித்தைய காமிச்சவன். இந்த பூட்டு வேலையும் இவந்தான் செஞ்சி

ருப்பன்னு ஒரு கணக்கு. அதுக்கு ஏத்த மாதிரி காலையில வகுப்பு தெடங்குற நேரத்துக்கு

சவகாசாமா எழுந்திருச்சி பல்லு விளக்கிகிட்டு குளியலறைக்கு வெளியில பராக்கு பாத்துகி

ட்டு நின்னான் வயலும்-வாழ்வும் . மாணவிகள் வகுப்புக்கு அரக்க பரக்க ஓட்டமும்

நடையுமா போய்கிட்டு இருக்குதுங்க. குளிக்க போன எவனோ வயலும்-வாழ்வும் பி

ன்னாலருந்து மாணவிகள பார்த்து விசில் உட்டுட்டு போய்ட்டான். அந்த நேரம் பார்த்து

ஓரல் நச்சுன்னு வந்து வயலும்-வாழ்வ அமுக்கிட்டாரு. வகுப்புக்கு மட்டம் போட்டுட்டு

மாணவிகள விசலடிச்சு கலாட்டா வேற பன்னுறியா ?ன்னு சதாய்ச்சாரு. தோள்ள இருந்த

ஓரல் கைய்ய தட்டி விட்டுட்டு வாயில இருந்த ஜொள்ள துப்பிட்டு, நிறுத்தி நி

தானமா ‘எப்படி சார் வாய்ல இவ்வளவு நுரைய வச்சுக்கிட்டு விசில் அடிக்க

முடியும் ? ‘னான். பய இன்னைக்கு தப்பிச்சுட்டான். இன்னொரு நாள் மாட்டுவான்னு

நழுவிட்டாரு. அப்பகூட வயலும்-வாழ்வுக்கு ஓரல் அவன் மேல குறி வக்கிறது தெரியல.

அன்னிக்கு காலையில பதினோரு மணிக்கு விடுதி வராண்டாவுல ரகளை நடக்குது.

என்ன ஏதுன்னு கல்லூரிக்கு மட்டம் போட்ட பயலுக போய் பாத்துனுங்க. ஓரல்

தாண்டவமாடுராரு. எவனோ ‘சுந்தர் – வனிதா, டும்…டும்…டும்… ‘னு செவத்துல கரி

க்கட்டையால கிறுக்கி வாழமரம், மனவரை படம் போட்டு வச்சுட்டான். ‘ஜாம்பவான் ‘

சுந்தர் மூனு சாரிடான் மாத்திரைய போட்டுட்டு இருவது முழுங்கிட்டான்னு ஆம்புலன்ஸ்

வரவழச்சி படங்காட்டி வனிதாவோட காதல வாங்கியிருக்கான். அத எந்த நாயோ

உற்சாகத்துல கிறுக்கிட்டு போய்ட்டு. இந்த ஓரல் ‘சுந்தேரசன் ‘ தன்னதான் பசங்க

சேர்த்து வச்சுட்டாங்கன்னு சுய-உசுப்பு ஏத்திகிட்டு ஆடுது. ரெண்டாவது ஆட்டம்

படத்துல ‘பிட் ‘ போடத எரிச்சல்ல தூங்குன வயலும்-வாழ்வும் சத்தம் கேட்டு கீழ

வந்தான். ஓரல் வயலும்-வாழ்வும வசமா மடக்கிட்டாரு. இவனுக்கு என்ன

சொல்றதுன்னே தெரியல. ‘எனக்கு வனிதா யாருன்னே தெரியாது. நான் நேத்து சினி

மா போய்ட்டேன். வேனும்னா நீங்கலே சீட்ட பாருங்க ‘ன்னு கெஞ்சி கூத்தாடுனாலும்

ஓரல் விடல. அவரு இத வச்சு பல காய்கள அடிக்க நினைச்சாரு.

சைக்கிள் கடை சினா.தானா வந்து சைக்கிள் எடுத்தது, கொடுத்தது வரைக்கும் சாட்சி

சொல்லி ஒரு வழியா தப்பிச்சான். கொஞ்சம் அசந்துருந்தா ‘ஆயுள் தண்டனை ‘ (ஒரு

மாதம் சஸ்பெண்ட்) வாங்கி கொடுத்து இருப்பாரே. இவர இதுக்கு மேல வளர விட்டா

நாட்டுக்கு நல்லது இல்லன்னு முடிவுகட்டுனான்.

ஓரலோட போக்குவரத்த கவனிக்க ஆரம்பிச்சான் வயலும்-வாழ்வும். ஒவ்வொரு வி

யாழனும் விடுதிக்கு எட்டரை மணிக்கு வந்து எவன் தூங்குறான்னு கணக்கு எடுக்குறது

தெரிஞ்சது. அந்த வியாழனும் அப்படித்தான் நைசா கணக்கு எடுத்துகிட்டு இருந்தாரு.

வயலும்-வாழ்வும் குளிக்கற மாதிரி பாவ்லா செஞ்சுட்டு ரெண்டு கைலயும்

சோப்பும், ஷாம்பும் அள்ளிகிட்டு, துண்ட இடுப்புல இப்பவோ அப்பவோ விழற மாதிரி

கட்டிகிட்டு அவசரமா ஓடியாந்தான். அப்பத்தான் ஓரல் எதுக்க வந்தாரு. அவர கண்டு

பயந்த மாதிரி ஒரு நடிப்பு காட்டி, பதற்றத்துல கைல இருந்தத கீழ போட்டு, இடுப்பு

துண்டும் கீழ விழ நெஞ்ச நிமிர்த்தி நின்னு , ‘வணக்கம் அய்யா ‘ன்னு கும்புடு

போட்டான். ஓரல் வெட வெடத்து போயிட்டாரு. திரும்பி தலையில அடிச்சிகிட்டே

ஓடிட்டாரு.

அப்புறம் அதே சூட்டோட கல்லூரிக்கு போயி, அவருக்கு எதுக்க நின்னு ‘வணக்கம் ‘னு

பரதநாட்டிய முத்திரைல சொன்னான். ஆளு ஆடிப்போயிட்டாரு. மிலிட்டரி வணக்கம்,

தனிய மாட்டுனாருன்னா ‘இஞ்சினயரிங் சல்யூட் ‘ எல்லாம் வச்சு அவர ஒரு வழி பண்னி

ட்டான். அதுக்கப்பறம் மனுசன் விடுதி பக்கம் தலைவச்சுகூட படுக்கறது இல்ல.

கொசுறு: மாப்பிளளைக்கு அப்பாவா பந்தாவா போனவர, பெண்வீட்டு சம்மந்தி கை

கூப்பி வரவேற்க, ‘அய்யோ… வணக்கம் எல்லாம் வேண்டாம் ‘னு அலறுனதா வாய் வழி

ச் செய்தி.

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி