வெங்கட் ரமணன்
கலை வெளிப்பாடு என்ற பெயரில் கொச்சைப்படுத்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சாபக்கேடு. இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நண்பர் இரா. முருகன் பிரிட்டனில் தோளைத்தொடும் காதை ஒருவர் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் கடந்த ண்டுகளில் நான் படித்த கலைக்கேவலங்கள் நினைவில் வரத்தொடங்கின. இரண்டு சம்பவங்களில் தங்கள் இனப்பெருக்க விஷயத்தை வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் கலைஞர்கள்( ?).
கனடா, அல்பெர்ட்டா மாநிலம், பான்ஃப் சென்டர், 2001 குளிர்காலம் (குளிர்காலம் என்றால் எங்கள் கனடா குளிர்காலம்), மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த கலைஞர்( ?) இஸ்ரேல் மோரா பான்ஃப் சென்டரில் வருகைதரு கலைஞராகப் பணியாற்றிய நேரம். தன்னுடைய கலையூக்கத்தின் சுயவெளிப்பாடாக (!) (என்ன ஒரு சரியான வார்த்தை இந்த இடத்தில், self-expression) தன்னுடைய சந்ததிச் சரக்கை அழகாகச் சேமித்து, கண்ணாடிக் குப்பிகளிலிட்டுக் காட்சிப் பொருளாக்கினார். இது கலைஞனின் சுய வெளிப்பாட்டின் உச்சகட்டமாக, கலாப்பிரவாகம் ஓடி, வழிந்து குப்பிகளில் நிரப்பப்பட்டது. அண்ணாரின் பெருமிதத்தின் வெளிப்பாடாக இந்தக் குப்பிகள் ஊர்வலமாக வீதிகளில் எடுத்துவரப்பட்டன. விரை( ?)வில் இதன் முழுவீச்சையும் உணர்துகொண்ட உள்ளூர் வாசிகள், வீடற்ற ஏழைகள் வீதியில் கிடப்படதையும் விழுமியங்கள் விலைபோவதையும் விளம்பத் தொடங்க விளம்பரம் கருதி விற்பன்னர் செய்த விபரீத விளையாட்டு முடிவுக்கு வந்ததாக விளம்புவர் விற்பன்னர்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.digitalbanff.com/banff/news/2001/12/4158.html
முடியவில்லை இன்னும், சுண்டலுக்கு முன்னாடி இன்னொரு கதை;
ணுக்குப் பெண் இளைத்தவளா ? மார்ச்சு 2002, நியூயார்க் நகரில் நவீன உலகில் பெண் தன்னைச் சந்தைப்படுத்திக் கொள்ளவேண்டியதன் உச்சகட்ட அக்கறையின் வெளிப்பாடாக ‘கிரிஸ்ஸி காவியர் ‘ (Chrissy Cavier) விற்பனைக்கு வந்தது. அழகான பாலிமர் பெட்டிகளில் சிலிக்கோன் திரவங்களில் மிதக்க கிரிஸ்ஸி கோனன்ட் எனும் 39 வயதுப் பெண் கலைஞி( ? ?)யின் கலைப்பொருள் பார்வைக்கு வந்தது. வழக்கமான களவியல், கற்பியல், இல்லறவியல் போன்ற வழிமுறைகளில் தற்காலப் பெண்களுக்கு இருக்கும் நேரமின்மையைச் சுட்டிக்காட்டவும் பெண்மை தன்னை நேரடிச் சந்தைப்படுத்திக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்த்தவுமே இந்தக் காவியம் படைக்கப்பட்டதாக அம்மணி கூறினார்.
இது மெக்ஸிகன் காளை செய்ததைக் காட்டிலும் சற்று சிக்கலான செயல். இதைத் திறம்பட செய்து முடித்தல் முற்றிலுமாக அய்யாவின் கைகளில் இருந்ததைப் போல் அம்மணியிடம் இல்லை. மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டது. தொடர்ச்சியாக ஹார்மோன் ஊசிகளைப் போட்டுக்கொண்டு, ஒரே தடவையில் பதின்மூன்று அண்டங்களை உற்பத்தி செய்திருக்கிறார் அம்மணி. பின்னர் மருத்துவர்கள் வழக்கமாகச் செயற்கை முறைக் கருத்தரிப்பில் செய்வதைப் போல கண்ணாடிக் குழாய்கள் உதவியால் வெற்றிடத்தில் அம்முட்டைகளை அறுவடை செய்திருக்கிறார்கள். பின்னர் என்ன, அம்மணியின் கலைவெளிப்பாடு சிலிக்கோன் திரவத்தில் மிதக்க ணுக்குப் பெண் சளைத்தவல்லள் என்பது இன்னொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. நம்பிக்கையில்லாதவர்கள் நாடவேண்டிய சுட்டி; http://www.wired.com/news/medtech/0,1286,51371,00.html
—
மன்னிக்கவும், இன்றைக்குச் சுண்டல் கிடையாது. சுண்டலுக்குத் தேவையான பட்டாணி கொண்டைக் கடலை இல்லை, வெறும் மிளகாய் மாத்திரம்தான் இருக்கிறது.
அடுத்த வேளை சோத்துக்கு வழியில்லாமல், அல்லது அடுத்தவேளை சோத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் ஜனங்களைப் பற்றிய நினைப்பும் இல்லாமல் இருப்பதால்தான் இப்படியான சுயவெளிப்பாடுகள் பிரவாகமெடுக்கின்றன என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இவை இரண்டு மாத்திரமல்ல, இன்னும் மேற்படி சமாச்சாரத்தில் வளையம் மாட்டிக் கொள்வது, கொங்களைகளில் சாவிக்கொத்தைத் தொங்கவிடுவது என்று இந்த நாடுகளில் அலைபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கலாம் என்று உத்தேசித்திருக்கும் தண்டனைகள் பல உண்டு…
http://www.tamillinux.org/venkat/myblog
- மணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்
- வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)
- விண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822
- சூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்
- ஷார்ல் பொதலேர் (Charles Baudelaire) – 1821 -1867
- ஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா
- அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)
- மாறுதலின் இக்காலகட்டத்தில்…….
- கடவுள் எழுக!
- நெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)
- ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு
- பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)
- பெரிய கருப்பு
- வார்த்தை விளையாட்டு
- கலை வெளிப்பாடு
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]
- என்னுயிர் நீதானே !
- இணையக் காவடிச் சிந்து
- அழிவா எம் காதலுக்கா
- மண்ணில் தான்
- மனசெல்லாம் நிம்மதி
- மறுவீடு…
- தாத்தா
- இணையத்துக்கு இல்லை இணை !
- குறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)
- சிஸ்டர்
- அம்மாவின் அந்தரங்கம்
- நிற்பதுவே… நடப்பதுவே.. பறப்பதுவே….
- சொல்லத்தான் நினைக்கிறேன்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி
- விடியும்! நாவல் – (17)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு
- கடிதங்கள்
- அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு
- அரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்
- யூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்
- கனடாவில் நாகம்மா -2
- வாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,
- லாந்தல் விளக்கு
- அடைப்புகளூக்கு அப்பால்….
- குமரி உலா 6
- இரவு.
- வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)
- நாகூர் ரூமி கவிதைகள்
- நிராகரிப்பில்…
- ஒரு நட்பின் முறிவு
- எண்கள்! எண்கள்!
- அவைகள்