கவியோகி வேதம்
சரஸ்-என்றால் ‘பொய்கை ‘என, சகலரும் சொன்னாரே!
சருகு-ஆன என்மனச் சகதியிலும் அமர்ந்ததனால்,
சரSவதி!அம்பிகையே!சரணடைந்தேன்!உன்னிடமே!
அருமையாய் நீயும்தான்,அதனாலோ கவிபொழிந்தாய் ?
பொய்யிலே கைவைத்தேன்!மெய்யிலே ‘பொய் ‘கலந்தேன்!
‘பொய்கை ‘ யிதுவு(ம்)எனப் புன்சிரிப்பாய்ச் சொல்தந்தாய்!
பொய்கையின் அன்னம்போல் புன்வினையில் நன்றேகண்(டு)
உய்வித்தாய் என்னையே! ஒருகோடி நன்றிசொன்னேன்!
சிவன்-உனக்காய்ச் செய்தஅந்த ‘கச்சபி ‘ வீணையிலே
பவமாயை உருகிடவே ‘பல்லிசை ‘ நெய்பவளே!
பாகிSதான், ‘ஆப்கனிSதான் ‘ போன்ற- ‘வன் தலத்தி(ல்)யினி
பாகைப்போல் அரக்கர்நெஞ்சைப் பதப்படுத்த யிசைப்பாயோ ?
வெள்ளை மனத்தில்தான் ‘விகசிப்பேன் ‘என்னாதே!
வெள்ளைக் கலையுடனே, வெள்ளைத்தா மரையுடையாய்!
வெள்ளை உளத்துடனே வினவுகிறேன் என்தாயே!
கொள்ளைகொள்ளும் உன்றன் கைபற்றும் ‘சுவடி ‘தனைப்
பையக் கைப்பற்றிப் ‘பொய் ‘கலந்து எழுதினரே ?!
நையப் புடைக்காமல் நீ,கருணை காட்டுவையோ ?
‘பின்லேடன் ‘ போன்ற பின்வந்த ‘கலிஅசுரர் ‘
முன்பின்னாய்ச் சுவடிஅர்த்தம் ‘முரண் ‘படவே ஓதிவிட்டு,
சொல்வதெலாம் புனிதமென்றும்,கொல்வதுவும் புனிதமென்றும்
கல்மனதும் கரைப்பதுவைக் கண்டுகொளா(து) யிருப்பதுவோ ?
எழுத்தை மணியாக்கி எழில்மாலை அணிந்தவளே!
பழுதுற்ற ‘சொல் ‘நாவைப் பயன்-அறச் செய்யாமல்,
உன்முன்னே நிற்கின்ற ஒய்யார மயிலிலுன்றன்
மின்னல் ‘கண் ‘மயங்குவதோ ?மீட்டுமிசை யில்நீயே
ஒன்றிநின்றால், ‘ஒமரும் ‘ ஒட்டெலி ‘லேடன் ‘களும்
கன்னெஞ்சப் பயல்களும் கனவில்வெண் டாமரை
மலரிதழை,அடுக்குகளை, ‘மன்காட்டன் ‘ கட்டிடமாய்
சுலபமாய்க் கண்டுகொண்(டு)ஓர் ‘தூய ‘வழி காண்பாரே!
- சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி
- வடிவ அமைதி
- நியதி
- பகல் நேர சேமிப்பு
- யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001
- நாகாிக மானுடமே!
- கலைமகளே!பதில் சொல்வாய்..!
- நிலவு
- கண்ணீர்
- கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்
- எனக்கு மழை வேண்டாம்
- மறக்க முடியுமோ ?
- பகல் நேர சேமிப்பு
- மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்
- கருவாட்டுக் குழம்பு