கத்திரிக்காயும் பங்கும்..

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

பத்ரிநாத்


தமிழ்மணியார், பங்குச் சந்தை கேவலமாக வீழ்ச்சியடைந்ததும் அதற்காக கம்யூனிஸ்டுகள் மீது ஏன் பாய்கிறார் என்பது புரியவில்லை. ஒரு வேளை ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டும் என்றால் ‘உண்மை சுடும்’ என்பதாலா..? பங்குச் சந்தை என்பது என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் வீட்டை விற்று முதலீடு செய்து ‘போண்டி’ னார்கள் என்று அவரே ஏற்றுக் கொள்கிறார். பின்னர் கம்யூனிஸ்டுகள் குற்றம்சாட்டாமல் வெண்சாமரம் வீசுவார்களா..?

எங்கல்ஸ் திருவாய் மலர்வதும் காலனியாதிக்கம் என்றதும் ஒரு புறம் இருக்கட்டும்.. நாம் நம் நாட்டுப் பிரச்சனைக்கு வருவோம். அன்னாருக்குத் தெரியும் என்றாலும் ஒரு நினைவூட்டல். ஒரு கம்பெனி (பெயர் சொல்ல விரும்பவில்லை) தன்னுடைய பங்கின் விலையை செயற்கையாக உயர்த்த விரும்பி, தானே அத்தனை பங்கையும் விலைக்கு வாங்கி அதன் மதிப்பு கிடுகிடு வென்று உயர்ந்தவுடன் மறுபடியும் விற்ற கதை. அதன் பின்னர் நேர்ந்த விபரீதம் போன்றவைகளை சில பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டினவே… இதற்குப் பெயர் என்னவென்று அழைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஹர்ஷத் மேத்தாக்களால் உருவான கோடீஸ்வரர்களைப் (?) பற்றிய எத்தனை எத்தனை உதாரணம் வேண்டும். உங்கள் பாஷையில் இது ‘வியாபார தந்திரம்’ எங்களைப் போன்ற சமானியர்கள் பார்வையில் சூதாட்டம். கம்யூனிஸ்டுகள் பிரச்சாரமாம். எங்களிடம் அடிமையாக இருங்கள் என்று.. ஓகோ உங்களிடம் சுதந்திர பிச்சைக்காரனாக இருக்கச் சொல்கிறீர்கள் அப்படித்தானே. என்னே சுதந்திரம்.. புல்லரிக்கிறது.. தப்பிக்க வழியில்லா காட்டில் ஒரு நிராயுதபாணியான மனிதனையும், ஒர் ட்கொல்லி புலியையும் உலவவிட்டு ‘கா பார் பார்.. உனக்கும் சுதந்திரம்… அந்தப் புலிக்கும் சுதந்திரம்.. இருவரும் §க்ஷமமா இருங்கோ..’ என்பது என்னவகையான இசம் என்றே புரியவில்லை.. ஒப்புக் கொள்கிறோம்.. ஒரு வாதத்திற்காக.. கம்யூனிசம் தோற்றுவிட்டது.. உங்கள் socalled லீட்டியம் ஜெயித்து விட்டதா..? உலகில் கம்யூட்டர் துறையில் பத்து இடங்களில் (சரியா என்று தெரியவில்லை) இருக்கும் இந்தியா, சுகாதாரத்தில் கடைகோடியில் இருப்பதாக அமைச்சர் அன்புமணி ஒரு முறை தொலைக்காட்சி பேட்டியில் வருத்தப்பட்டார்.. சார்லி சாப்ளினின் Dogs Life என்ற படம்தான் நினைவுக்கு வருகிறது.. பல்லாயிரக் கணக்கான ஏழைகள் பணம் இழப்பீடு என்பது ஒரே சமயத்தில் உண்மையாகவும் இருக்கிறதாம். அதே சமயத்தில் பொய்யாகவும் இருக்கிறதாம்.. என்னவகை மாயாவாதம் என்றே விளங்கவில்லை.

இன்போசிஸ் பங்கை வைத்து உதாரணம் சொல்கிறார்.. சந்தோசம்.. அத்தனை கம்பெனியும் இன்போசிஸ் கிவிடவில்லையே.. மாநிலத்தில் முதல் மாணவனை வைத்து எத்தனை கதைகள் வேண்டுமானாலும் சொல்லலாம்.. 40 சதவிகிதம் வாங்கும் மாணவர்கள் அதிகம் வாழும் நாட்டில் அவர்களைப் பற்றி சிந்தித்தால் சற்று நலமாக இருக்கும்.

அதற்காகத்தான் போலீசு இத்யாதி என்கிறார். கத்திரிக்காய் விற்க நம்நாட்டில் போலீசும் தேவையில்லை.. சட்டமும் தேவையில்லை.. கத்திரிக்காயும் பங்கும் ஒன்று என்பதை என் போன்ற சமானியர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை…. பணம் போட்டு ஏமாற மட்டுமே முடியும்.. அது இருக்கட்டும்.. எல்லாமும் உருப்படியாக வேலையும் செய்ய வேண்டும் என்கிறார்.. அய்யா இந்தியாவில் வாழ்கிறாரா என்று தெரியவில்லை.

நம்நாட்டில் எந்த சோஷியலிஸ்டுகள் ட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். எப்போது எந்த ண்டு பெயர் என்ன என்பதை விளக்கமாகச் சொல்ல வேண்டுகிறேன். ஒருவேளை ‘ சுதந்திர பங்கு சந்தையை’ பற்றி லேசாக முணுமுணுப்பவர்கள் அனைவரும் சோஷியலிஸ்டுகள் என்கிறாரோ..? என்னவகை சாபமோ தெரியவில்லை.
—-

பத்ரிநாத்
prabhabadri@rediffmail.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்