கண்ணகி கற்பு / செருப்பும் துடைப்பக்கட்டையு ம் = நம் கலாச்சாரம்

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

கூத்தாடி


குஷ்பு/சு ?ாசினி விவகாரம் எல்லா தர மக்களாலும் விமர்சிக்கப் பட்டு ,டிசம்பர்ல வரும் புஷ்க்கு கிட்டக் கூட கருத்துக் கேக்கும் அளவுக்கு போயிட்டதால நம்மளும் ஒரு பதிவப் போட்டு சோம்பல் முறிச்சுக்கலாம் ன்னு பாக்கிறேன்.

கற்பு பற்றிய பிரபலங்களின் கருத்தையும் ,அதற்கான அரசியல் ரீதியான எதிர் வினையும் தவிர்த்து விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மற்றவர்களின் கருத்தோடு ஒத்துப் போகிறதா என்பதைப் பேசுவோம்.

நம் சமூக அமைப்பின் பெரும்பான்மையோர் தங்களை மத்திய தர மக்களாகத்தான் கருதுகிறார்கள் ,அது கார் வைத்து இருப்பவர் முதல் ,சைக்கிள் ஓட்டிக்கொண்டு வேலைக்கு செல்பவர் வரை தங்களை மத்திய வர்க்கமாகத்தான் பார்க்க விரும்புகிறார்கள்.

அவர்கள் மத்தியில் கற்பு என்பதற்கான மதிப்பீட்டுகளை பற்றி யோசிக்க வேண்டியது தான் இந்த சர்ச்சையின் முக்கியம்.நடிகர் & நடிகை ,இலக்கிய வாதிகள் ,நம்மைப் போன்ற வலைப் பதிவரின் சொந்த விமர்சனங்கள் அதிகளவு பார்த்தாகிவிட்டது.அரசியல்வாதிகளின் தூண்டுதலால் செருப்பு,துடைப்பம் தூக்குபவர்கள் நம்முடைய சமூக அசிங்கங்களில் ஒன்று . அதைப் பற்றிய நம் சமூகத்தின் பிரதிபலிப்புகளும்,விமர்சனங்களும் தான் நாம் வாழும் சமூகத்தின் லட்சணம் நமக்குத் தெரியும்.

பொதுவாக நம் வீடுகளில் ஆண் குழந்தைக்கான சுதந்திரம் ,பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப் படுவது குறைவு தான் .பெண்கள் எவ்வுளவு தான் படித்து இருந்தாலும் ஆண்களுக்கு அடங்கி நடப்பது தான் ‘நல்ல குடும்ப ‘ பெண்களுக்கு அழகு என்பதை நம் எல்லோரும் கேட்டுத் தான் வளர்ந்து இருப்போம்.சினிமா மற்றும் டிவி ஊடகங்கள் அதை கொஞசம் மிகையாக பிரதிபலிகிறது . ?ீரோ பெண் கற்பு பற்றி விஷ்தரிப்பது எம்ஜியார் காலம் தொட்டு சின்ன்ப்பையன் சிம்பு வரை தமிழ் சினிமாக்களில் தொடர்ச்சியாக நடப்பதற்கு காரணம் ‘கற்பு ‘ பற்றிய நமது மானோபாவம் மாறாததேக் காரணம்.

நம் தமிழ் நாட்டு சிறு நகரங்களில் பெண் சிரித்து அவள் நண்பர்களுடன் பேசினாலே ஒரு மாதிரியான் பொண்ணுனு முத்திரைக் குத்தி விடுவார்கள் .இதுல் எங்க பாலியல் சுதந்தரம் பற்றி பேசுறது . சிரித்து பேசுவதும் ,தொட்டுப் பேசுவதும் பாலியல் உறவுகளில் முடியும் என்னும் மனப்பான்மை படித்த மக்களிடமே உள்ளது .சொல்லுங்கள் எத்தனைப் பெண்கள் பக்கத்து வீட்டு நண்பருடன் பைக்கில் லிப்ட் கேட்டு வீட்டு வாசலில் வந்து இறங்க முடியும் ?

நம் சமூகத்தில் வெற்றிகரமானப் பெண்களைப் பற்றிக் கூறும் அவதூறுகள் அதிகம் .நடிகை ராதிகாப் பற்றி நான் அடிக்கடி கேட்கும் வசனம் ஒன்று ‘இவ எல்லாம் சொல்ல வந்துட்டாங்க ,3 மாப்பிளை மாத்தினவ தான ‘ .இதே மாதிரியான விமர்சனம் லக்ஷ்மி பற்றியும் உண்டு . இதே சமயம் சரத் குமார் கற்பு பற்றி சொல்லும் போது எந்த விமர்சன்மும் எழுவதில்லை.அவரும் ?ீரா ,நக்மா என சுற்றியவர் தானே , நம்ம அரசியல்வாதி கூட ராதிகாவை காதலித்து கைவிட்டதாக 80 ‘sல கதைகள் உண்டு .ராதிகா என்ற பெண்மணி சில மற்ற நடிகைகளைப் போல் தற்கொலை செய்யாமல் வெற்றி பெற்றிருப்பது நம் ஆணாதிக்க மனங்களுக்கு ஒவ்வாதவை . செத்துப் போய் இருந்தால் கற்புடையவள் என்று சிலை வைத்து இருப்போமோ என்னவோ. நம் கற்பு பற்றிய பார்வை கண்ணகி காலத்திலேயே முடங்கியுள்ளது .

வள்ளி என்ற ‘புரட்சி ‘ படம் வந்திருந்தது பார்த்துருப்பீர்கள் ,அதில் ‘கெட்டு ‘ ப் போன பெண் கெடுத்தவனை கொல்வது புரட்சியாக சித்தரிக்ப் படுவது நம் சிந்தனையின் குறைப்பாட்டை சுட்டுகிறது.

‘கெட்டு போனவ ‘ ‘கற்பழிப்பு ‘ போன்ற வார்த்தைகள் நம் சமூகத்தில் புழங்கும் சாதாரண வார்த்தைகள்.அது போன்ற வார்த்தைகளை குழந்தைகள் கூட பயன் படுத்துவது நம்மிடையே எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தாது . அந்த அளவுக்கு நாம் condition பண்ணப் பட்டு இருக்கிறோம். பத்திரிகை ,சினிமாக்களை குறை சொல்லாதீர்கள் அவை சமூகத்தை பிரதிபலிப்பதாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும் ,இல்லையேல் ஏன் அதிகம் அந்த பத்திரிகைகள் விற்க வேண்டும் ,அல்லது படங்கள் ஏன் அதிகம் ஓட வேண்டும் . So blame us ,not others .

எனக்கு chaos theory மேல் நம்ப்பிக்கை உண்டு , நம் சமூக உயர்வுக்கும் /சீரழிவுக்கும் நம்முடைய சிறு செயல் கூட காரணம் என்பது என் நம்பிக்கை. பெரும்பான்மையோர் எதுவுமே சொல்வதில்லையே அவர்களை ஏன் குற்றம் சொல்லுகிறேன் என்று கேட்காதீர்கள் , அப்படி இருப்பது கூட ஒரு செயல் தான் .அது நல்லதாகவோ கெட்டதாகவோ சமுகத்தில் பிரதிபலிக்கும் .

செருப்பு / துடைப்பக்கட்ட காலச்சாரம் தான் நம்முடைய கலாச்சாரம் என்று நம் அரசியல் வாதிகள் சொல்வதற்கு நம் மக்கள் எதுவும் சொல்லாமல் இருப்பது அதை ஆமோதிப்பதாகத் தான் படுகிறது . இதே அரசியல் வாதிகள் தேர்தலில் ஜெயித்து வருவதை பார்க்கும் போது அவர்கள் சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள் என்பதே உண்மை . குஷ்பு/சுகாசினிக்கு ஆதரவு தரும் எவருமே மக்கள் மன்றத்தில் ஜெயிக்க முடியாது .அது வேறு உலகம் அறிவு ஜீவிகள் அல்லது அப்படி காட்ட விரும்புவோரின் உலகம் ,அதற்கும் நம் தமிழ் சமூகத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது .சொல்லுங்கள் எத்தனைப் பேருக்கு அ.மார்க்ஸ் ,சாருவையும் ,ம்னுஷ்யபுத்திரனையும் தெரியும் ,அதே சமயம் அந்துமணி ,ரமணி சந்திரன் எவ்வுளவு பிரபலம் . நமக்கு வைரமுத்து தானே கவிஅரசர் ..இந்த சமூகத்தில் கற்பு பற்றி ஆரோக்கியமான் விவாதத்தை எதிர் பார்ப்பது முட்டாள்த்தனம் .

நம்முடைய கோர்ட் பாருங்கள் நம்மைப் போல்தான் இருக்கிறது , சட்டத்துக்கு common sense கூடத் தேவையில்லை போலிருக்கிறது .நீதிபதிகளும் இதே சமூகதில் இருந்து வந்தவர்கள் தானே அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் .(எனக்கு கோர்ட அவமதிப்பு செய்யணுணு ஒரு intension யும ?இல்லப்பா )

கருத்து சொல்லுறதுக்காக ‘கருத்து ‘ ன்னு இணையம் ஒண்ணை கனிமொழியும்,கார்த்திக்கும் ஆரம்பிச்சிருக்காங்க .பாருங்க கருத்து சொல்லுறதுக்கு கூட இங்க அரசியல் பின் புலம் வேண்டியிருக்கு.

வாழ்க கருத்து சுதந்திரம்

http://koothaadi.blogspot.com/

Series Navigation

கூத்தாடி

கூத்தாடி