கடிதம் – செப்டம்பர் 23,2004

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

தமிழ்மணவாளன்


எனது கட்டுரைக்கு சூர்யா ஒற்றை வரி எதிர்வினையாற்றியிருக்கிறார். நான்

எழுதியதிலிருக்கும் உள்நோக்கம் மலினமானதாம்.

ஒரு கட்டுரையை வாசிக்கும் போது,அதன் தொனியை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

வாசிப்பது என்பது உள்வங்கிக்கொள்வதிலேதான் நிறைவுறுகிறது. ஜெயமோகன்

பேச்சு அலங்காரமாய் இருந்தது எனநான் கூறவில்லை. தேவிபாரதி காலச்சுவட்டில்

எழுதியிருந்ததைச் சுட்டிக் காட்டி, அதற்கு எதிர்வினையாக அங்கதத்துடன் ‘ஆமாம் சே என்ன

கூட்டம் ? எனக்குறிப்பிட்டிருந்தேன். இந்த எளிய விஷயத்துக்கு விளக்கம் சொல்ல நேர்வதெல்லாம்

துரதிர்ஷ்டம். அவகாசமிருப்பின் சூர்யா என் கட்டுரையை மீண்டும் வாசித்து புரிதலும்,

நேர்மையும் வாய்க்குமாயின் திண்ணையில் பதிவு செய்யட்டும். இது போன்ற

பதட்டமான, பொறுப்பற்ற ஆதரவு ஜெயமோகனுக்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்தும்

தமிழ்மணவாளன்

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்