சூர்யா – விடுதலைக்குயில் – நாக.இளங்கோவன் – விஸ்வாமித்ரா
நாக இளங்கோவனின் கடிதங்கள் சொதப்பப்பா இல்லாத குறையை நீக்குகின்றன. திராவிட இயக்கங்களின் முதலீடு என்ன என்பது தெள்வான தெரிகிறது
சூர்யா
suurayaa@rediffmail.com
—-
வணக்கம்!கள்ளத்தோணி குறித்து கடந்த வாரம் ஒருவர்
அங்கலாய்த்திருிந்தார்.வைகோ சட்டத்தை மீறி
விட்டதாக….உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீிறி
வழிபாட்டுத்தலங்களை உடைத்தவர்கள் பிரதமர் பதவிக்கு
ஆசைப்படும்போது…சட்டமீறல் குற்ித்து பேசுவது
வியப்பளிக்கிறது!ஓ…மாமியார் உடைத்தால் மண்குடமா… ?
கள்ளத்தோணியில் என்ன சாமான்களையா கடத்தினார்….இந்தியதலைவர்களை
கொன்றவர்களைத்துதி பாடுவதாக அடுத்த குற்றச்சாட்டு….,மகாத்மாவை
கொன்றவர்வர்களோடு உறவு வைத்ததை
சொன்னீர்களோ….!புரியவில்லை!அட…சுபாஷ் போஸ் கூட
ரகசியமாய் கப்பல் பயணம் செய்தாராம்….அவருடைய லட்சியத்தை
அடைய….!அவரும் இனி கள்ள நீர் மூழ்கி போல….!நன்றி !….
விடுதலைக்குயில்….!!!
viduthalaikuyil@yahoo.com
(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)
—-
திரு.ஆசாரகீனன் அவர்கள் பெரியாரின் கருத்துகளைப்
பரப்புவது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது.
பெரியார், குமுகாயக் களத்திலே ஒரு மாமலை. அந்த மலை
மெல்ல அசைந்த போது கடுகுகள் கண்ணைக் கசக்கி
கண்ணீர் பொழிந்தன. திரு.பித்தன் அவர்கள்
வேறோரு கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல
பெரியாரின் கருத்துகளோடு அவர்களால் மோத முடியவில்லை.
குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவியது போல்தான்
பெரியாரை எதிர்ப்பவர்களின் நிலை அன்றும் இன்றும்.
பெரியாரை எதிர்ப்பது என்பதும் மறுப்பது
என்பதும் கருத்துச் சுதந்திரம். அதில் வளமான வாதங்கள்
இருப்பின் அவை ஏற்கத்தக்கவையே.
ஆனால், பெரியார் என்றாலே அருவெறுக்கும் கூட்டம்
தற்போது ஒரு நவீன-மலிவு வேலையைச் செய்து வருகிறது.
அதாவது, பெரியாரை முழுதும் மறுப்பார்கள்; ஆனால்,
பெரியார் எங்கேயாவது தமிழ் அல்லது
தமிழர்களைப் பற்றிச் சாடியிருந்தால், உடனே,
அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கோள் மூட்டுவார்கள்.
இவர்கள், பெரியாரின் தொண்டர்கள் போல பேசுவதும் எழுதுவதும்
மிக மிக இழிவான ஒன்றாகும். நவீன-மலிவு இரகம்.
ஏதாவது ஒரு நிலைப்பாடென்றால் அதில் நிலைக்க வேண்டும்.
ஆசாரகீனன் கொஞ்ச நாளைக்கு முன்னால்
பாவாணரின் தமிழை மூன்றாந்தரத் தமிழ் என்றார்.
அண்மைய காலத்திய பாவாணரின் தரம் தெரியா
ஆசாரகீனனால் சிலப்பதிகாரத்தின் தரம் பற்றியும்,
அதனைப் பற்றிய பெரியாரின் கருத்தின் தரம் பற்றியும்
எப்படி அறிவார் என்று தெரியவில்லை.
பெரியாரை ஏன் மலை என்று குறிப்பிடுகின்றேன்
என்றால் அவரின் கருத்துகளுக்கு முன்னால்
எதுவும் தப்பியதில்லை. ஏற்றத்தாழ்வில்லை. அது
சிலப்பதிகாரமாகட்டும் இராமாயணமாகட்டும்.
அதனால்தான் அவர் உயர்ந்து நிற்கிறார்.
ஆனால் இராமாயணம் என்றால் வெல்லம்,
சிலப்பதிகாரம் என்றால் குள்ளம் என்று பரப்பிக் கொண்டு
திரிவோர்களுக்கு, தமிழர்களை, தமிழை எதிர்க்கவேண்டும்
என்பது மட்டுமே நோக்கமாக இருந்து வருவதால்,
தமிழை வைத்தே சிண்டு முடியும் சிறுமதி என்பதாகத்தான்,
சிலப்பதிகாரத்தைப் பற்றிய பெரியாரின் கருத்தை
எடுத்து எழுதியிருப்பதில் தெரிகிறது.
எனினும், ஆசாரகீனனின் பணியைப் பாராட்டுகிறேன்.
இதேபோல இராமாயணம், மாபாரதம் போன்ற இலக்கியங்களைப்
பற்றிய பெரியாரின் கருத்துகளையும் திரு.ஆசாரகீனன்
எழுதுவதை வரவேற்கிறேன்.
அடுத்து, திரு.வரதனின் அவசரக் கடிதம் பற்றிய சில கருத்துகள்.
ஒரு குடும்பமோ ஒரு இனமோ சேர்ந்திருந்தால் சிலருக்கு
அது உறுத்திக் கொண்டேயிருக்கும். அதை எப்படியாவது
உடைத்து விடவேண்டும் என்பதே அவர்களின் பண்பாடு.
தமிழர்களின் பண்பாடு அப்படியானது அல்ல. பிரிந்து
கொள்கிறார்கள் அல்லது பிரிக்கப் படுகிறார்களே தவிர
பிறர் குடியைக் கெடுப்பதில்லை.
ஆனால், அடுத்தவர் குடியை கெடுப்பவர்களையும் அவர்களின்
கூட்டத்தையும் நிறைய காணலாம். இராமாயணத்தில்
வாலி-சுக்ரீவன் குடியையும், இராவண-விபீசனக் குடியையும்
கெடுத்தவர்களுக்காகத்தான் அயோத்தியில் கோயில் கட்டப் போகிறார்கள்.
பங்காளிகளைப் புல் பூண்டு இல்லாமல், கிருட்டிண பகவான்
பெயரில் நயவஞ்சகம், சூழ்ச்சி, நரித்தனம் இவைகளைக்
கொண்டுதான் அண்ணன் தம்பிகளின் குடியைக் கெடுத்தார்கள்.
சரி – பழைய கதை வேண்டாம். இப்ப என்ன நடக்கிறது என்று
பார்த்தால், சோனியாவிற்கு எதிராக மேனகா குடும்பம், தாமரைக்கனிக்கு
எதிராக அவரின் பிள்ளை, ஈவிகேஎசு இளங்கோவனுக்கு எதிராக
அவரின் தாயார், கொஞ்ச காலத்திற்கு முன்னால் மு.கருணாநிதிக்கு
எதிராக மு.க.முத்து என்று குடியைப் பிளக்கும் பண்பாட்டையே
நாம் இன்று காண்கிறோம். அந்தப் பண்பாட்டின் தொடர்ச்சியே,
இவர்களின் கருணாநிதி எதிர்ப்புக் கருத்துகள், எப்பொழுதும்
கருணாநிதியின் குடும்பத்தைச் சுற்றியே வருவதும். தயாநிதி
மாறனுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்காமல் இருந்திருந்தால்
இவர்கள் என்ன கருணாநிதிக்கா வாக்களித்து விடப்போகிறார்கள் ?
மனு எப்படிக் குடி பிளந்தானோ அப்படித்தான் இன்றும்
நடந்து வருகிறது என்று எண்ணுகையில் ஏதோ இடிக்கத்தான்
செய்கிறது.
பிரிந்து போய்க் கிடந்தாலும் சேர்கையில் மகிழ்ச்சி கொள்வது
தமிழர் பண்பாடு. சேர்ந்திருப்பவர்களின் குடி பிளக்கும் பண்பாட்டிற்கும்
தமிழர்களின் பண்பாட்டிற்கும் இடைவெளி அதிகம் என்றால்
அது உண்மைதான் போலிருக்கிறது!
அன்புடன்
நாக.இளங்கோவன்
elangov@md2.vsnl.net.in
—-
சென்ற இதழில் திரு.பித்தன் ஜெயமோகனுக்கு எழுப்பியுள்ள ஒரு வினாவில் ஜெயமோகனுக்கு ஈவேராவைப் பிடிக்காதக் காரணம் என்ன என வினவுகிறார். அதில் ஈவெராவின் ஒரு மேற்கோளைக் கூறி அது வெறும் வார்த்தைகள்தான் என்று அபத்தமாக சப்பைக் கட்டுக் கட்டுகிறார். அப்புறம் ஈவெரா அப்படி யாரையும் அடித்துக் கொல்லவில்லை எவ்வளவு நல்ல மனிதர் என்று சான்றிதழ் வேறு அளித்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். ஈ வெ ரா கீழ்த்தரமான வார்த்தைகளைக் கண்டிப்பதை விட்டு, விட்டு வெறும் வெற்று கோஷம்தான் என்று வக்காலத்து வாங்குகிறார் பித்தன். நாகரீகமான, சிந்திக்கும் திறன் உள்ள, பண்பாடு உள்ள எந்தவொரு மனிதனும் அத்தகைய அருவருப்பான வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ மாட்டான். ஒரு உதாரணத்துக்கு அத்வானி ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது ‘முயலையும் முல்லாவையும் பார்த்தால் முயலை விட்டு, விட்டு, முல்லாவைக் கொல் ‘ என்று பேசினால், அதை வெறும் வார்த்தை என்று பித்தனும் அவரது தி க கட்சிக்காரர்களும் ஏற்றுக் கொள்வார்களா ? அத்வானி அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களை தவிர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூறினார், அவருக்கு சிக்கந்தர் பகத்திடம் கூட கூட நல்ல நட்பு இருந்ததே ?, முஷாரப்பைச் சந்திக்கும் பொழுது இருவரும் தேனீர் குடித்தார்களே ? அத்வானி, ஆரிஃப் முகமதுகானை நேற்றுக் கூட சந்தித்தாரே, அவரை அடிக்கவில்லையே, இருவரும் ஒன்றாக சீட்டு விளையாடுவார்களே ?, அவராக சென்று எந்த முல்லாவையும் கொல்லவில்லையே ? வெறும் கருத்து மோதல்தானே ? அவர் சொல்வது ஒரு பேச்சுக்குத்தானே ? வெறும் வார்த்தைகள்தானே ? என்று வக்காலத்து வாங்குவாரா இந்தப் பித்தன் ? பித்தம் தலைக்கேறியவர்கள் கூட அப்படிப்பட்ட ஒரு பேச்சை ஆதரிக்க மாட்டார்களே ?
ஈ வே ரா யாரையும் சென்று அடிக்க வேண்டியதில்லை, அவரிடம் ஒரு தொண்டர் கூட்டமே உண்டு, இந்த மாதிரி வன்முறையைத் தூண்டும் வார்த்தைகளை, ஒரு தலைவர் பேசும்பொழுது, யோசிக்கும் திறனில்லாத, புரிந்து கொள்ளும் சக்தியில்லாத, படிப்பறிவில்லாத, சுய அறிவு இல்லாத எண்ணற்ற தொண்டர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது பித்தனுக்குத் தெரிந்தும், இந்த கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஆதரித்து எழுதியுள்ளது கேவலமான, பண்பட்ட மனிதர்கள் நினைக்கக் கூசும் ஒரு ஆபாசமான செயலாக இருக்கிறது. அப்படியே இது வெற்று வார்தைகளாக இருந்தால், ஏன் நூற்றுக்கணக்கான பிராமணர்கள் தாக்கப் பட்டார்கள், அவர்களின் பூணுல் வன்முறையாக அறுக்கப் பட்டது ? குடுமி ஏன் வன்முறையாக தி.க குண்டர்களால் வெட்டப் பட்டது ? இவையாவும் ஈ வே ராவின் வெ(ற்று)றித்தனமான வார்த்தைகளின் பின்விளைவுகள் இல்லையா ? யாரை ஏமாற்ற எண்ணுகிறீர்கள் பித்தன் ? வன்முறையைத் தூண்டும் ஈவேராவை விட அதை ஆதரித்து நியாயப்படுத்துபவர்கள் மிகப் பெரியத் தீவீரவாதிகள்,சமுதாய விரோதிகள். ஜெயமோகன் ஒத்துக் கொள்கிறாரோ இல்லையோ, இப்படிப்பட்ட வன்முறைக் கருத்துக்களைக் கூறியவர்களும், அதை ஆதரிப்பவர்களும் ஒரு கடைந்தெடுத்த, சந்தேகமில்லாத, இனவாதியாக, வன்முறைவாதியாக, காட்டுமிராண்டியாக மட்டுமே இருக்க முடியும். எனது பார்வை மேற்போக்கான வெற்றுப் பார்வை இல்லை. ஈ வெ ராவின் பேச்சால், வெறியூட்டப் பட்ட குண்டர்களின் அராஜகத்தைக் கண்ணெதிரேக் கண்டு, இப்படிப்பட்ட ஒரு அராஜகவாதியை, இன விரோதியை பெரியார் என்றும் தந்தை என்றும் கூசாமல் கொண்டாடும் கேவலத்தை எண்ணி, மனம் வெதும்பிய பார்வை.
அதேபோல் கிழட்டு வயதில் இளம் பெண்ணை மணந்தவருக்கு பெண்ணுரிமை பற்றிப் பேச எவ்வித யோக்கிதையோ, அருகதையோ கிடையாது. கேட்டால் அவர் தன்னிலையை விளக்கமாகப் கூறிப் புத்தகம் போட்டுள்ளார் என்று வக்காலத்து வாங்க ஒரு அடிவருடிக் கூட்டமே வரும். வெட்கக்கேடு.
மிகுந்த மன வருத்தத்துடன்
விஸ்வாமித்ரா
(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)
viswamitra12347@rediffmail.com
—-
- Dalit History Month: 1 April to 30 April
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- ரோறா போறா சமையல்காரன்
- கடிதங்கள் – மார்ச் 11,2004
- கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
- யாரோ, அவர் யாரோ ?
- நரேந்திரனின் கட்டுரை பற்றி
- அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்
- கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது
- கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி
- போனதும், போனவைகளும்
- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- பதிவிரதம்
- இனிய காட்சி
- வீடு
- இரண்டு கவிதைகள்
- நீயும் நானும்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- மூன்று கவிதைகள்
- Bowling for Columbine (2002)
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- தாகம்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- ஐஸ்கிரீம் வகைகள்
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்