K. ரவி ஸ்ரீநிவாஸ்
கவிதாசரண் இதழில் வெளியான கட்டுரை காலச்சுவட்டின் மூலம் இணையத்தில் வெளியாகி,(1) பின் தீராநதியில் ஒரு குறிப்பும் வெளிவந்த பின் வேறு வழியின்றி ஒரு விளக்கத்தை தர வேண்டிய நிலையில் ஜெயமோகன் திண்ணைக்கு ஒரு கடிதம் மூலம் தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். அந்த விளக்கம் மேலும் கேள்விகளுக்கு வழிவகுக்கிறது..
I
வேல்சாமி கவிதாசரண் இதழின் ஆசிரியரோ அல்லது வெளியீட்டாளரோ அல்ல. கவிதாசரண் இதழினைப் பார்க்காமல் எழுதுவது என்ன நியாயம். கவிதாசரண் அவதூறுகளுக்காவே நடத்தப்படுகிறதாம். கவிதாசரணில் சர்ச்சைகளில் தனி நபர் விமர்சனம் உண்டு, ஆனால் அது அவதூறுகளுக்காக நடத்தப்படுகிறது என்பதுதான் அவதூறு. இத்தகைய பல அவதூறுகளின் ஊற்றுக்கண் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சர்ச்சை எழும் போது அதை கிளப்பும் இதழில் என்ன வெளிவருகிறது என்பதைக் கூட தெரிந்துகொள்ளாமல் பொதுப்படையாக எதிர்வினையாற்றுவது எப்படி நியாயமாகும். என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்காமல் கருத்து சொல்வது போல்தான் இது. படிக்காமலே புத்தகத்தை தடை செய் என்று கூறுபவர்கள் போல் ஜெயமோகன் எதிர்வினையாற்றியுள்ளார்.
ஜெயமோகன் சரவணன்1978ன் செயல்பாடுகள் காரணமாக இப்பிழை நிகழ்ந்துவிட்டது என்கிறார். ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவரின் பெயரில் அவர் எழுதாத கட்டுரை ஒரு இதழில் சில காரணங்களால் பிரசுரமானால் அடுத்த இதழில் அதைப் பற்றிய ஒரு குறிப்பினையும், அக்கட்டுரை எதைச் சார்ந்து எழுதப்பட்டது என்பதையும் தெரிவித்திருக்கலாம். இதை செய்யாதது ஏன். யார் இதையெல்லாம் படித்து மூலம் எதுவென கண்டுபிடிக்கப்ப போகிறார்கள் என்ற அலட்சிய மனப்போக்கா இல்லை தமிழ் வாசகர்களுக்கு இது போதும் என்ற மனப்பாங்கா. இதுதான் குளறுபடி என்றால் அது திண்ணையில் ஏன் அதை எழுதாதவர் பெயரில் வெளிவரவேண்டும்(2). இதை திண்ணைக்கு அப்படி அனுப்பியது யார்-சரவணன்1978 ஆ , இல்லை ஜெயமோகனா ? குளறுபடி காரணமாக அச்சில் ஒருவர் பெயரில் வெளியாகிவிட்டது, எனவே இணையத்தில் இது இடம் பெற வேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாமே ? திண்ணைக்கு அனுப்பும் முடிவினை யார் எடுத்தது ? இதற்கும் சரவணன்1978 பொறுப்பா ?. குளறுபடி என்று தெரிந்தும் வேறொரு இதழில் அப்படியே மறுபிரசுரத்திற்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம் ?.ஜெயமோகன் பதிலில் இது குறித்து ஏதும் இல்லை. திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு கட்டுரையை மின்னஞ்சலில் அனுப்பியது யார் அல்லது யார் முகவரியிலிருந்து அது அனுப்பட்டது என்பதே கேள்வி.
கட்டுரையாளர் தன் கண்டுபிடிப்பாக வைக்காத போதும் தகவல்களின் மூல சான்றுகளை தந்திருக்கலாம். தமிழ் இசை குறித்த குறிப்புகள் கீழ்க்கண்டவற்றிலிருந்து பெறப்பட்டன என்று குறிப்பிடுவதில் என்ன சிக்கல். மேலும் இவை ‘அடிப்படை தகவல்கள் ‘ என்பதாலே அதை எழுதியவர் பெயர் வெளியீடு ஆகியவற்றை குறிப்பிடாமல் விட்டதில் எந்த நியாயமும் இல்லை. கலைக்களஞ்சியங்களில் குறிப்புகள்/கட்டுரைகள் பலவற்றில் எழுதியவர் யார், அவர் குறித்த தகவல்களும் இடம் பெறுவதுண்டு. பெரும்பாலும் அவை இன்னொரு நிபுணரால் படித்துப் பார்க்கப்பட்டு பின்னரே பதிப்பிக்கப்படுகின்றன. எனவே ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரைக்குப்பின் உள்ள உழைப்பினையும், அக்கறைகளையும் அறிந்த யாரும் அவை ‘ஏற்கப்பட்ட அடிப்படை தகவல்கள் ‘ என்பதலாயே அதை எழுதியவர்,வெளியீடு குறித்த தகவல்களை தர வேண்டாம் என்று முடிவு செய்யமாட்டார்கள்.( ‘ஏற்கப்பட்ட அடிப்படை தகவல்கள் ‘ என்ற வாதம் பொருந்தாது. ஏனெனில் அக்கட்டுரை தரும் தகவல்கள் குறிப்பிட்ட துறை பற்றியவை. 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது என்பதை எழுத எந்தக் கலைக்களஞ்சியத்தையும் துணைக்கு அழைக்கத் தேவையில்லை. ஆனால் இந்திய அரசியல் சாசன உருவாக்கம் குறித்து எழுதும் போது குறிப்பான விபரங்கள்/தகவல்கள், விவாதங்கள் குறித்து எழுதும் போது சான்றாதாரங்கள் காட்டுவதே பொருத்தமாயிருக்கும். அது போல்தான் இதுவும்.) . .மாறாக அவைகளை தருவதன் மூலம் குறிப்புகள் நம்பகமானவை, சான்றுகள் இவை என்பதால் மேலகதிக தகவல்களை வாசகர்கள் இதிலிருந்து பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுவார்கள். பிறர் உழைப்பினை திருடும் கேவல புத்தி கொண்டவர்கள் வேறுவிதமாக நினைக்கலாம், தங்கள் செயல்களை நியாயப்படுத்த வெட்கப்படாமல் பல காரணங்களைக் கூறலாம்.
கவிதாசரணில் வெளியான கட்டுரையில் மூலமும், சொல் புதிதில் வெளியான கட்டுரையும் தரப்பட்டிருந்தன. அதைப் படிக்கும் எவரும், மூல வெளியீட்டினை படித்துப் பார்த்து கவிதா சரணில் வெளியானது உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளக்கூடும். ஆனால் என்ன வெளியாகியுள்ளது என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். கையும் களவுமாக பிடிப்பட்டபின் என்ன விளக்கம் தருவது என்பது குறித்து ஊழல் செய்வோருக்கு ஆலோசனை கூற முழுத்தகுதியும் அவருக்கு உண்டு. அவர் கையாண்டுள்ள உத்தி, முதலில் மறுத்து அலட்சியப்படுத்து, குற்றம் சொல்லுபவர் மீது அவதூறு பரப்பு, , பிரச்சினை பெரிதானால முதலில் பெயருக்கு ஒரு விளக்கம், இன்னும் பெரிதானால் தவறு என்னுடையது, ஆனால் மூலக்காரணம் இன்னொருவர், நான் மன்னிப்புக் கோருகிறேன் என்று பதில் கூறு.
இந்த சர்ச்சையில் சரவணன்1978 என்பவரால்தான் குளறுபடி நடந்தது என்று வாதிடுகிறார் ஜெயமோகன்.ஆனால் இதே திண்ணையில் சொல்புதிது பற்றி சில மாதங்கள் முன்பு அவர் எழுதிய போது அப்பெயர் இடம் பெறவில்லை. ஏன் ? அதில் ஏன் ‘டூஒளஅட்ீவ்ில் ட்ப் றூண்ந்றூளூிழூபக்வ்ிச்ீவ்ி ளறூீப்ி டூச்ஆய் ஞ்க்ச்ிச்சஈஞ்ிச்ஒள ‘ என்பது குறித்து ஒரு வார்த்தைக் கூட இல்லை. இப்போது ‘டூஒள ளறூீப்ி றூண்ிட்ஞ்ிச்ட்ிட்க்ிக் ஞ்ங்ிட்ந்ிழூர்ி கூஆவ்ம்டழூிஊண்ி ளச்ந்ுஞண்ி ‘ என்று எழுதுபவர் அன்று இதையெல்லாம் ஏன் குறிப்பிடவில்லை.அப்படியெனில் ஆசிரியர் குழு என்ன பணிகளை செய்தது. சரவணன்1978 அனைத்துப்பணிகளையும் செய்தார் எனில் ஆசிரியர் குழு எது எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும், இதழ் வெளியானால் சரி என்பதற்காக எந்தக் குளறுபடியையும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மையா ? அப்படியாயின் ஆசிரியர் குழு பொறுப்புடன் செயல்பட வில்லை என்றுதானே பொருள். சரவணன்1978 மீது இப்போது பழி போடப்படுகிறது. குளறுபடிகள், பிழைகள், சமரசங்கள் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் வேறு ஏதேனும் சர்ச்சை எழலாம் என்பதனால் முன்னெச்சரிக்கையாக இந்தக் காரணங்கள் கூறப்படுகின்றனவா ?. சரவணன்1978 இது குறித்து என்ன கூற விரும்புகிறார். சொல் புதிதின் சந்தாதாரரகளுக்கு இந்த உண்மைகள் எப்போதாவது தெரிவிக்கப்பட்டுள்ளனவா ? சில மாதங்கள் முன் எழுதிய கட்டுரையில் இவை குறித்து ஏன் ஒரு வார்த்தை இல்லை, ஆனால் இப்போது ‘கூட்ிஅட்ீஒள ளறூீப்ி டூச்ஆய் சநழூிழூஅம் கூம்அந் ளறூத்ிஒளளழூீங்ிஈடஞ்ிச்ஆண்த்ீப் ‘ என்ற விளக்கம் தர்ப்படுகிறது, சரவணன் ஒரூ பலி ஆடாக பயன்படுத்தப்படுகிறார் என்று தோன்றுகிறது. தவறு நடந்தது உண்மைதான், ஆனால் அதன் முக்கிய பொறுப்பு அவரைச் சார்ந்தது என்று கூறுவது ஒரு தந்திர யுக்தியாகத் தோன்றுகிறது. ஏனெனில் மேலே கூறியுள்ளபடி குளறுபடி நடந்த பின்னும் அது திண்ணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திண்ணையில் அது வெளியாவதை தடுத்திருக்கலாம். திண்ணையில் மே 2002 ல் இக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அந்த சொல் புதிது இதழ் எப்போது வெளியானது. அதற்கும் திண்ணையில் வெளியானதற்கும் கால இடைவெளி என்ன ?.
II
அப்போது சொல் புதிதின் ஆசிரியர் குழுவில் வேதசகாய குமாரும் இருந்திருக்கிறார். முனைவர் வேதசகாய குமார் ஒரு ஆய்வு மாணவர் இத்தகைய செயலை செய்திருந்தால் அதை ஆமோதிருப்பாரா இல்லை அந்த மாணவர் செய்தது தவறு என்று கண்டித்திருப்பாரா ? Plagiarism ஒரு கண்டிக்கதக்க செயலாக, குற்றமாக பல்கலைகழகங்களில் கருதப்படுகிறது. எது Plagiarism என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில் பல மேனாட்டு பல்கலைகழகங்கள் மாணவர்கள் கவனித்திற்கு அது குறித்த விரிவான விளக்கங்களை வெளியிடுகின்றன. சான்றை மறைப்பதை ஏற்க இயலாது என்பதையும் குறிப்பிடுகின்றன. ‘ரூட ஊல்ுட்ிங ழூஆப்ழூிழூர்னூிறூுத்ண்ி றூீந்ிஞ்ிஒள கூஆண்ம்ச்ுப்ி ட்ுஆய்த்ுப்ிஆப் ‘ ஆனால் அந்த அடிப்படையை
குறிப்பிடாமல் விடுவதும், அதை ஒருவர் பெயரில் அவர் எழுதியதாக வெளியிடுவதும் பிழைதான். தெரிந்தே செய்த பிழைகள், அதை திண்ணைக்கு அனுப்பியதன் மூலம் உறுதி செய்யப்பட்ட பிழைகள். இவை ஆசிரியர் குழுவினருக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று இன்று சொல்லக் கூடும். ஆனால் சர்ச்சை எழுந்த பிறகு நானறிந்த வரையில் வேத சகாய குமார் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஏன் ?. தன் மாணவர்களுக்கு எப்படி எழுதக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக இதை அவர் பயன்படுத்துவாரா ?.
குளறுபடி நடந்துள்ளது என்று தெரிந்து அதை சரி செய்ய எதுவும் செய்யாமல், அது திண்ணையிலும் பிரசுரமாகி, பிரச்சினை பெரிதான உடன் கட்டுரையை நீக்க முடியுமா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் திண்ணையில் அது நீக்கப்பட்டாலும் இணையத்தில் இது குறித்த தகவல்கள் இருக்கும், கட்டுரை அச்சிலும் உள்ளது. மேலும் எங்கப்பன் குதிரில் இல்லை என்ற ரீதியில் திண்ணையில் ஜெயமோகன் கடிதம் இருக்கிறதே ? அதையும் நீக்கக் கோருவாரா ?. திண்ணையில் ஜெயமோகன் கடிதம் மட்டும் இருந்து, கட்டுரை இல்லாவிட்டாலும் கூட வாசகர்கள் கட்டுரையை வேறொரு தளத்தில் படித்து முடிவு செய்ய முடியும். இதில் இன்னொரு வேடிக்கை மார்ச் 18 2004 திண்ணை இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூட சர்சைக்குரிய கட்டுரையின் இணைய முகவரி தரப்பட்டுகிறது. இதையாவது தவிர்த்திருக்கலாமே ? இதற்கு யார் பொறுப்பு. சரவணன்1978 என்று பதில் வராது என்று நம்புகிறேன்.ஒரு கட்டுரை சர்சைக்குள்ளாகியிருக்கும் போது அது பற்றிய உண்மைகளை தெரிந்தவர், அக்கட்டுரை யார் பெயரில் வெளியாகியுள்ளதோ அவர் அதை எழுதவில்லை என்பதை தெரிந்தவர் குறைந்தபட்சம் அதை சுட்டுவதையாவது தவிர்த்திருக்கலாம். உண்மையை ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டு ஜெயமோகன் முழுத் தகவல்களுடன் எழுதியிருந்தால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக ஆகி இருக்காது. எனவே முத்ற கோணல் முற்றிலும் கோணல் என்றபடி ஆனதற்கு அவர்தான் பொறுப்பு. இந்த விளக்கத்திலும் சில விபரங்கள் தரப்படவில்லை.வரலாற்றை திரித்து பொய்யையயும் , புனைவையும் கலந்து பதில் கூறலாம். ஆனால் என்ன செய்வது நிகழ் கால சான்றுகளை அவ்வளவு எளிதாக திரிக்க முடிவதில்லையே. உலகம் ஒரு மரத்தடியல்லவே.
III
ஒரு வெளியீட்டிலிருந்து பகுதிகளை பயன்படுத்த சில விதிகள் உள்ளன. பதிப்புரிமை பெறப்பட்டுள்ளவற்றிலிருந்து பகுதிகளை சில சந்தர்ப்பங்களில் பதிப்புரிமை பெற்றவர் அனுமதியின்றி பயன்படுத்தலாம். ஆய்வு கட்டுரைகளில், விமர்சனக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டலாம். ஆனால் அதற்காக எட்டு பத்திகள் உள்ள கட்டுரையிலிருந்து 6 பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன் என்று பயன்படுத்தி விட்டு முன்னும் பின்னும் இர்ண்டு பாராக்களை சேர்த்துவிட்டு தான் எழுதிய கட்டுரையாக காட்டுவது ஏற்புடையதல்ல. மேலும் மேற்கோள் காட்டும் போது எதிலிருந்து மேற்கோள் காட்டுகிறோம் என்பது குறித்த தகவல்களையும் தர வேண்டும். நியாயமான உபயோகம் (fair use) என்பது ஏற்கப்பட்ட நடைமுறை, அதற்கென்று சில விதிகள் உள்ளன. சர்ச்சைக்குரிய, அருண் மொழி நங்கை பெயரில் வெளியாகியுள்ள கட்டுரையை நியாயமான உபயோகம் என்று கருத முடியாது. இது வெறும் குறிப்பாக வெளியாகவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் கவனக்குறைவு காரணமாக சான்று தரப்படவில்லை என்றேனும் கூற முடியும். மாறாக இது தனிக்கட்டுரையாக, ஒரு தலைப்புடன், ஒருவர் எழுதியதாகவே வெளியாகியுள்ளது. இதை கவனிக்க வேண்டும். சொல் புதிதை இலவசமாக கொடுத்தோம் என்று வாதிட்டாலும் கூட அதை நியாயமான உபயோகம் என்று கருத முடியாது. சொல் புதிது இதழ் கடைகளில் விற்கப்பட்டது, சந்தாதார்களுக்கு சந்தா அடிப்படையில் அனுப்பப்பட்டது. எனவே எந்த முறையில் பார்த்தாலும் நியாயமான உபயோகம் என்று இதை கூற முடியாது. (சொல் புதிது தனிச் சுற்றிற்கானது, பதிவு செய்யப்படாத இதழ் என்ற வாதத்தை முன் வைக்கமுடியாது, மேலும் திண்ணை தனிச் சுற்றிற்கானதல்ல. எனவே குளறுபடி எனத் தெரிந்தும் திண்ணைக்கு அனுப்பியது ஏன், யார் இதை செய்தது என்ற கேள்விகளை தவிர்க்க முடியாது.)
மூலக்கட்டுரையை எழுதியவர் என்ற முறையில் அங்கயற்கண்ணி யின் தார்மீக உரிமைகளும் (moral rights) மீறப்பட்டுள்ளன. தார்மீக உரிமைகளும் இந்தியாவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை. ஒருவரின் படைப்பை அல்லது அதன் பகுதியை, இன்னொருவர் தன் படைப்பாக காட்ட முயல்வது படைப்பாளியின் தார்மீக உரிமைக்கு எதிரான ஒன்று. இந்தக் கட்டுரையில் பத்திகள் அப்படியே தரப்பட்டுள்ளண, மூலக்கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சில மாறுதல்களுடன் தரப்பட்டுள்ளன. கட்டுரையை யார் பெயரில் வெளியாகியுள்ளதோ அவர் பங்களிப்பு என்று எதுவும் இல்லை என்றே கூறலாம். கட்டுரை ஒரு தலைப்பும் தரப்பட்டு, அருண் மொழி நங்கை பெயரில் வெளியாகியுள்ளது. எனவே படைப்பாளியின் தார்மீக உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. பதிப்புரிமை கட்டுரையாசிரியர் வசம் இல்லாத போதும் தார்மீக உரிமை மீறப்பட்டால் அது குறித்து அவர் வழக்கு தொடரலாம். தான் கட்டுரையை எழுதாத போதும் இந்தக் கட்டுரை தன் பெயரில் வெளியான பின் அதை பல மாதங்கள் மறுக்காத நிலையில் ஒருவர் தனக்கு தெரியாமல் இது நடந்து விட்டது என்று கூற முடியாது. மேலும் இங்கு சம்பந்தப்பட்டவர் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறார். எனவே அனைத்து வகையில் அவர் சொல் புதிதுடன் தொடர்புடையவர்தான். (அவர் தான் எழுதவில்லை என்று இதுவரை மறுத்திருக்கிறாரா இல்லை திண்ணைக்கு அவ்வாறு கடிதம் எழுதியுள்ளாரா ? ). இது திண்ணையிலும் அப்படியே மறுபிரசுரமாகியுள்ளது. நடந்தது என்ன என்பதை ஜெயமோகன் கடிதம் குறிப்பிடுகிறது. எனவே இதை அறியாப் பிழை என்று கருத முடியாது. ‘அ ‘ எழுதாத ஒரு புத்தகத்தை ‘ஆ ‘ எழுதி, அது ‘அ ‘ பெயரில் வெளியாகி, அதை ‘அ ‘ மறுக்காத போது அந்நூலசிரியர் மீது யாரேனும் வழக்கு தொடர்ந்தால் ‘அ ‘ அதை நான் எழுதவில்லை என்று மறுக்கலாம், ஆனால் அதை தன் பெயரில் வெளியாக அனுமதித்ததால், பல மாதங்கள் உண்மையை தெரிவிக்காமல் மெளனமாக இருந்து விட்டு பிரச்சினை எழும் போது மறுத்தால், வேறு வலுவான காரணங்கள் இருந்தாலொழிய அம்மறுப்பு எடுபடாது. எனவே இப்போது அருண் மொழி நங்கை தான் எழுதவில்லை என்று கூறினாலும் இதை முன்னரே ஏன் தெரிவிக்கவில்லை, தான் எழுதாத போதும் தன் பெயரில் அது வெளியான போது என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வி எழுகிறது.திண்ணையில் அது மறுபிரசுரமானதும் அவருக்குத் தெரியாதா ?. எனவே ஆரம்பகட்ட குளறுபடிக்கு சரவணன்1978தான் பொறுப்பு என்று வாதிட்டாலும், அதன் பின் நடந்தவற்றிற்கு அவரை குற்றம் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. இக்கட்டுரை வெளியான இதழ் சொல் புதிதின் கடைசி இதழ் அல்ல. அடுத்த வந்த இதழில் இது குளறுபடி என்பதை குறிப்பிட்டு, எழுதியவர் யார் என்பதைத் தெரிவித்திருக்கலாம். அத்தகைய முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜெயமோகன் கடிதத்திலிருந்து பொருள் கொள்ள முடியும்.
பதிப்புரிமை பெற்றவர்(கள்), அங்கயற்கண்ணி சட்டரீதியாக இதில் நடவடிக்கைகள் எடுக்க முகாந்திரங்கள் உள்ளன என்றே நான் கருதுகிறேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட நடந்துள்ளது ஒரு இழிவான செயல். இதை பிழை என்று ஒதுக்கவோ அல்லது நியாயப்படுத்த முடியாது. மூலம் எது -கலைக்களஞ்சியமா இல்லை மனோரமா இயர் புக்காக என்பது முக்கியமல்ல, நடைபெற்றுள்ளவையே முக்கியம்.சிறுபத்திரிகைகளில் அச்சுப் பிழைகள், தகவல் பிழைகள் இருக்கலாம். அவற்றை புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் பல பிரச்சினைகளுக்கிடையேதான் அவை வெளிவருகின்றன. அடுத்த இதழ் வெளிவ்ருமா என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில்தான் பல இதழ்கள் வெளிவருகின்றன. எனவே சிறு பிழைகளை பெரிதுபடுத்த வேண்டியதில்லை ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. எந்தக் காரணம் கூறினாலும் இது ஒரு திருட்டுதான்.
IV
சில மாதங்கள் முன்பு ஜெயமோகன் திண்ணையில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்
:
‘ச்ண்ுய்ுப்ி ரூட ட்ஆக்ட்ிஆட் டூர்ளூிழூஆப்ழூிஊ ட்ீக்ண்ீழூிழூுவ்ீப்ி பூச்ிச்ஆவ்
ப்க்ிறூண்ி ப்ீட்ண்ி டூடழூிஊண்ி பூவ் ஞ்ீண்ி கூல்ுஅம்ீண்ி. கூச்ல்ிஊ பூவ்ிவ்
ளறூத்ிம்ஒள பூவ்ிமண்ி கூல்ுஅம்ீண்ி. கூச்ல்ிஊ ளறூத்ித்அம்ங்ிஈத்ம்ல்ிஆல்
ளறூத்ிம்ச்ுப்ி தூர்ிர் ஏத் டூய்ும்ுவ்ி ழூீந்ங்ண்ீழூஅம் ம்ீவ்ச்ு அட்ீவ்ில் ளட்டண்ி
ட்ச்ுட்ிட்ீர்ந்ிரக் கூட்ிட்ழூிழூண்ி ச்ஆப்ஆம்ச்ிஒளட்ிட்ஒட்ிட்ஒள டூப்ிஆப். ‘
http://www.thinnai.com/ar0108044.html கூம்னமழூர்ி ளச்ீக்ீச்
டூக்ண்
பாடமாக்குவது என்பது விதி முறைகளுக்குட்பட்டது. அவை செவ்வனே பின்பற்றப்பட்வில்லை எனில் அதை குறிப்பிட்டு எழுதலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக இப்படி எழுதுவது எந்த விதத்தில் சரியானது. காலச்சுவடு, சுந்தரராமசாமி குறித்து எழுதும் போது ஏன் இந்த வாக்கியங்கள் எழுதப்பட வேண்டும்.தன் நாவல் ஒன்று பாட நூலானது குறித்து பெருமாள் முருகன் எழுதியுள்ளார், ஆனால் அதில் அவர் இழி செயல், சுய இழிவு குறித்து எழுதியுள்ளதாக தெரியவில்லை (இதை என் நினைவிலிருந்து எழுதுகிறேன்). நானறிந்த வரையில் ஒரு படைப்பை பாட நூலாக்குவத்ற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை சில சந்தர்ப்பங்களில் மீறப்படிருக்கலாம் அல்லது குளறுபடிகள் நடந்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக அதில் எதுவும் சரியில்லை என்ற ரீதியில் எழுதியுள்ளார் அவர். இதை விமர்சித்து/கண்டித்து இதுவரை திண்ணையில் ஒரு கடிதம் கூட வரவில்லை. இப்படி ஒட்டுமொத்தமாக பாட நூல்களை தேர்வு செய்வோர், நூல் வெளியிட்டாளர் மீது அவதூறு பரப்புவது சரியா என்ற கேள்வியை ஒருவர் கூட எழுப்பவில்லை. (இது அவதூறு என்பதை திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு தனிப்பட்ட கடிதம் மூலம் தெரிவித்தேன், அதை பிரசுரிக்க வேண்டும் என்று கோரவில்லை.) இப்படி லட்சக்கணக்கில் எத்தனை பேர் லாபம் சம்பாதித்துள்ளார்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன்.ஜெயமோகனுக்கு தைரியமிருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள், அமைப்புகள் பெயரை பகிரங்கமாகத் தெரிவிக்கட்டும். தெளிவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இப்படி அவதூறு செய்வதை நிறுத்திக் கொள்ளட்டும். யாரும் எதிர்க்காததனால் இத்தகைய அவதூறுகளை ஏற்கிறார்கள் என்று பொருளில்லை. பதில் தரவே தகுதியில்லாத அவதூறு என்றே பலர் நினைத்திருக்ககூடும். ஆனால் புனிதராகக் காட்டிக் கொள்ள அவருக்கு அவதூறுகளும், வீர வசனங்களும் தேவைப்படுகின்றன. (கடந்த ஆண்டு சொல் புதிது வெளியிட்ட ஒரு கதையை ஒட்டி எழுந்த சர்ச்சையில் எத்தகைய நிலைப்பாடுகள் முன் வைக்கப்பட்டன, எத்தகைய விளக்கங்கள் தரப்பட்டன என்பதும் திண்ணையில் பதிவாகியுள்ளது. எந்த முகாந்திரமுமின்றி ஒரு முன்னாள் துணைவேந்தர் பெயர் அந்த சர்ச்சையில் அடிபட்டது ,அவதூறுகள் பல வகைகளில் வெளியாகலாம்).
அப்படி அவதூறு செய்தவர் நடந்து கொண்ட விதம் இன்று அம்பலமாகியுள்ளது. திருவாளர் ‘புனிதர் ‘ சில உண்மைகளை காலம் கடந்தேனும் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. அவதூறுகள் தொடங்கும் ஒரு இடம் எது என்பதும் தெளிவாகியுள்ளது. அந்த வகையில் பொ.வேல்சாமிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
(1)
http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu51/fullstory.php ?id=13384704
http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu51/fullstory.php ?id=13384704&page=2
http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu51/fullstory.php ?id=13384704&page=3
(2) http://www.thinnai.com/ar0512024.html May 12
Sunday 2002
பிற் குறிப்பு: 1, இன்னொரு சிற்றிதழிலும் கிட்டதட்ட அதே நேரத்தில் தமிழிசை குறித்து கட்டுரைகள் வந்ததாக நினைவு. இது தற்செயலான ஒன்றா ?
2, ஜெயமோகன் தான் ‘பெரும்பணியில் ‘ ஈடுபட்டிருந்தார். சொல் புதிது சம்பந்தபட்ட வேறு யாரேனும் கூட சர்ச்சை எழுந்தவுடன் தங்கள் தரப்பு வாதத்தை திண்ணையில் எழுதியிருக்கலாமே. அல்லது குறைந்தபட்சம் அக்கட்டுரை வெளியான பின்புலத்தை தெரிவித்திருக்கலாமே. அப்போதிருந்த ஆசிரியர் குழுவிலிருந்த யாருக்கும் இது குறித்த விபரங்கள் தெரியாதா ?.
ravisrinivasin@yahoo.co.in
- முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்
- இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை
- தாமதமான காரணம்
- வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)
- பேரீச்சம்பழ மிட்டாய்
- கேரட் அல்வா
- கடலைப்பருப்பு அல்வா
- தாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)
- ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்
- நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –
- கடிதங்கள் மார்ச் 25 2004
- திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்
- வேதனையின் நிழல்…
- ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்
- காதல் பொதுவானது
- தரிசானாலும் தாயெனக்கு!
- தொடர்ந்து வரும் நட்பு..
- கேட்க முடியா ஓசை
- ஞாயிற்றுக்கிழமை மின்விசிறி
- இட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்
- அனிதா கவிதைகள்
- புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்
- மானுடம்
- தனக்கான நிகழ் காலங்கள்
- மதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்!
- கதை 01 – அலீ தந்த ஒளி
- கொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)
- வடு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17
- புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12
- சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா
- இருபது/இருபது
- வாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்
- காவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்
- வாழ முற்ப்படுதல்.
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2
- பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்
- மெக்ஸிக்க மணித்துளிகள்
- சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு
- நண்பன்
- நான்
- ஜென் கதை ஒன்று
- இயன்றது
- தொடரட்டும் பயணம்…!!!
- அன்புடன் இதயம் – 12 – நெருப்பு