ஏன் அதை மட்டும் !

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

கு.முனியசாமி.


அம்மாவின் கைதொட்டு
அழுது புறண்டு
அகரம் பயிலச் சென்ற
அந்த நாளும் மறந்து போகும்…

மணமக ளாகி
மாமா கைபிடித்து
அக்கா பிாிந்து சென்ற
அந்த நாளும் மறந்து போகும்…

கண்கள் மிறள
கால்கள் துவழ
கல்லூ ாிக்குள் நுழைந்த
அந்த நாளும் மறந்து போகும்…

படிப்பை முடித்து
பரவசம் மேற்கொண்டு
நண்பரைப் பிாிந்து நின்ற
அந்த நாளும் மறந்து போகும்…

முயற்சிமேல் முயற்சிசெய்து
முருகனுக்கு முடிகொடுத்து
முதன்முதலாய் வேலை சேர்ந்த
அந்த நாளும் மறந்து போகும்…

கல்யாண வேளைவந்து
களமிறங்கிப் பெண்பார்த்து
கயல்விழியை மணந்து கொண்ட
அந்த நாளும் மறந்து போகும்…

மகன்பிறந்த செய்திகேட்டு
மனமெல்லாம் உவகைகொண்டு
மணைவியைக் காணச் சென்ற
அந்த நாளும் மறந்து போகும்…

மகளுக்கும் மணமுடித்து
மற்றதெல்லாம் செய்துவித்து
தாத்தா வான செய்திவந்த
அந்த நாளும் மறந்து போகும்…

வயதாகிப் பல்விழுந்து
வாழ்க்கையின் ஓரத்தில்
வடுக்களை எண்ணி நிற்கும்
அந்த நாளும் மறந்து போகும்…

எதனை மறக்க முடிந்தாலும்,

எட்டாவது படிக்கையிலே
கொட்டாவி விட்டவரை – தலையில்
கொட்டடா என்ற போழ்து…

வாத்தியார் மகளை மட்டும்
வலிக்காமல் தொட்டுவிட…

வம்புக்காய் நண்பன்
காதலா என்ற போழ்து…

நெஞ்சில்,
ஜில்லென முள்ளொன்று
தைத்ததையும்…

உள்ளம்,
பஞ்சென வானில்
பறந்ததையும்…

உயிர்,
தீயினைத் தொட்டதாய்
சுட்டதையும்…

மறக்க முடிய வில்லை

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி