எாிச்சலின் புதல்வன்…

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

சேவியர்.


யார் மீதோ எதெதற்கோ
எாிந்து விழுகிறேன்.
காிந்து கொண்டிருக்கின்றன என்
பொறுமையின் கரங்கள்.
நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன.
குழப்பத்தின் படபடப்பின்
பத்தாயிரம் விரல்கள்
என் உள்ளப்பிரதேசம் உழுகின்றன.
தேவையில்லாத தேடல்களின்
கண்மூடித்தனமான கொக்கிகளில் தொங்கி,
குரல்வளை கிழிய கோபம் குதித்துப் பிழிகிறது.
அவயங்கள் அவயங்களோடு
அவசியமில்லாத ஓர் யுத்தக்களத்தில்…
ஏதேனும் பாறையில் மோதி
சிரசை சிதைத்து கோபத்தை உடைக்க
மனம் வேகப்பாய்ச்சலில் ஓடுகிறது.
கைகளும் கால்களும் பாறையாய் கனத்து தொங்க,
கோபத்தின் முனை பிதுக்கிய அந்த
முகம் தொியாத காரணம் மட்டும்
வேறொரு முகமூடியோடு காத்திருக்கும்
என் கோபம் தணியும் நேரம் காத்து.
இன்னொரு போருக்கான ஓலைச் சுவடி சுமந்து.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்