எழுத்து எழுதுகிறது

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

எச்.முஜீப் ரஹ்மான்



நான் இந்த வாக்கியத்தை எழுத துவíகுவதற்கு முன் நிச்சயமாக எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது.ஆனால் துவக்கம் உண்டானால் முடிவு உண்டு என்று தெரியும்.துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே எத்தனை போராட்டíகள்,எத்தனை சவால்கள் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வார்த்தை எழுது முன் அது மனதில் உருக்கொள்ளுகிறதா என்றால் அப்படியிருக்க சாத்தியமில்லை.ஏனென்றால் இன்னும் வார்த்தை எழுதி முடிக்க படாமலே உள்ளது.வார்த்தை ஒரு விளையாட்டு பொருளாய் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.ஆனால் அது அப்படி இல்லை.அப்படி இல்லாமலும் இல்லை.ஒருவேளை இந்த வார்த்தை எதிர்காலத்தில் என் கண்ணுக்கு அகப்படாமலே போகலாம்.நான் அப்படி நம்புகிறேன்.சிலசமயம் அவ்வாறு நிகழாமல் கூட இருக்கலாம்.நான் ஒவ்வொரு சமயமும் எழுத உட்காரும் போது அல்லது மனதளவில் எழுத எத்தனிக்கும் போது முடிவு எவ்வாறு இருக்கும் என்று தோன்றிவிடுகிறது.எது எப்படியானாலும் நிகழ்வது நிகழட்டும் என்ற மனகோலத்திலிருந்து எழுத துவíகினாலும் ஆரம்பத்துக்கும் முடிவுக்குமான ஒரு இடைவெளி சில தருணíகளில் தோன்றிவிடுகிறது.இíகே முக்கியமாக வார்த்தைகளை நிர்வகிக்கும் இலக்கணம் அல்லது விதிகள் வார்த்தைகளின் துவக்கத்துக்கும் முடிவுக்குமான சரடுகளை மெல்ல இறக்குகிறது.ஆனால் இந்த விதிகள் நிச்சயமாக துவக்கத்துக்கோ முடிவுக்கோ தீர்மானíகளை உருவாக்கவில்லை என்பது தெளிவு.வாக்கியத்துக்கு என்ன ஒரு சிறப்பென்றால் அது எழுதப்படும் என்றோ அல்லது வாசிக்கப்படும் என்று எதிர்பார்த்து உருவாகவில்லை என்றாலும் அவ்வாறு நிகழ்ந்து விடுகிறது.எழுத்தை எழுதுபவரின் அல்லது வாசகரின் பார்வையில் பார்த்தாலும் அப்படி சர்வநிச்சயமானதாக எண்ணிக்கொள்ள இடம் தராமலே வார்த்தை நழுவிவிடுகிறது.ஆனால் வார்த்தை எழுதி முடிக்கப்படும் வேளையில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருக்கும் வார்த்தைகள் எழுதிமுடிக்க படும் என்ற ஆச்சரியத்தை தருகிறது.எப்படி முடிவே இல்லாமல் இந்த வார்த்தை ஒரு முடிவினை தருகிறது என்ற ஆச்சரியம் தோன்றுகிறது.எழுத்துக்கு உள்ள சந்தர்ப்பம் என்னவென்றால் அது எப்படி முடியும் என்று எழுதும் போது அல்லது வாசிக்கும் போது ஒரு அனுமானத்தை உருவாக்கவிடுகிறது.எழுத்து அல்லது வாசிப்பு சில சாத்தியíகளை துவக்கத்திலேயே உருவாக்கி ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்ப்படுத்துகிறது.சில விளைவுகள் இருக்கின்றன என்பதை அவை பறை சாற்றுகின்றன.இலக்கியத்தை பொறுத்தவரை சில நிபந்த்தனைகளுக்கு உட்பட்டு எழுத்து இயíக துவíகுகிறது.எதை எழுதினாலும் அதாவது ஒரு கவிதையையோ அல்லது கதையையோ அல்லது விவரணத்தையோ எழுதும் போது அது தன்னளவில் உணர்ச்சி கூறுகளை எழுத்தினூடே சமைக்க வல்லதாக இருக்கிறது.உண்மையான சம்பவத்தையோ அல்லது சமூக அரசியல் நிலவரத்தையோ அந்த வார்த்தை எழுத்தில் பிரதிபலித்தாலும் உணர்ச்சிகூறுகளை அது தவறவிடுவதில்லை.இன்னும் எழுத்துக்கும் உண்மைக்குமான இடைவெளி ஒன்றுள்ளதா என்று பார்க்கும் போது அப்படி இல்லாமலிருக்க சாத்தியம் இல்லை என்றே கூறலாம்.இலக்கியத்தை பொறுத்தவரை உண்மைக்கும் எழுத்துக்குமான இடைவெளிகளை தான் இலக்கியம் கொண்டிருக்கிறது.உருவகíகளும் அணிகளும் இலக்கியத்தை உண்மையில் இருந்து உண்மையை திரிபுபடுத்தினாலும் அவை உண்மையை சொல்லாமலில்லை என்பது தான் முக்கியம்.மனதோற்றாதரíகளை இன்னும் அதிகமாக உருவாக்கி கொள்ள இலக்கியம் முயன்றாலும் சிந்தனைகளை ஏற்படுத்துவதற்க்கும் சாத்தியíகளை உருவாக்கி கொள்ளுவதற்க்கும் அவை எப்போதும் தவறியதே இல்லை.ஆனால் படிமíகள் சிந்தனையை தவறான பிரதிபலிப்புக்கும் அல்லது தவறான புரிதலுக்கும் வழிகோலுவதாக அமைகிறது என்று சொன்னால் மிகையொன்றும் இல்லை.உண்மையான தன்மை என்பதற்க்கும் உண்மை என்பதற்க்கும் இடையில் வார்த்தைகள் இலக்கியமாக மாறும் போது சில குளறுபடிகள் நேரிடலாம் என்பது சாத்தியமானதே.ஆனால் இலக்கணமற்றதன்மை எழுத்தில் விளையாடப்படும் விளையாட்டே அன்றி வேறொன்றையும் நிச்சயப்பது இல்லை.சில சூழல்களில் இந்த விளையாட்டுகள் அபாரமான தோற்றத்தை அளிக்கிறது.இலக்கியத்தில் எழுத்தின் வரைபடம் குறிபானை பயன்படுத்தும் நிலைகளில் இருக்கிறது.இலக்கிய எழுத்தில் குறிப்பானின் தனிகவனம் முக்கிய இடத்தை பெறுவதால் மற்றவை சிறப்பானதாக இல்லாமல் போய்விடுகிறது.வடிவíகளும்,வகைமாதிரிகளும் எழுத்தை இன்னும் பல தளíகளுக்கு இழுத்து சென்று விடுகிறது.நிச்சயமாக தத்துவ எழுத்தில் குறிப்பான் முக்கிய இடத்தை பெறவில்லை.அதே சமயம் தத்துவ எழுத்தின் விதிகளில் குறிப்பான் தெளிவாக ஓடையாகத்தான் இருக்கவேண்டும்.அது குறிப்பீட்டை விசேசமாக சொல்லுவதாய் அமையவேண்டும்.ஆனால் இந்த இடத்தில் நீட்சே விதிவிலக்கானவர்.தெரிதா சொல்லும் போது
இலக்கியத்துக்கும் மற்ற எழுத்துகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் கனவின் தொடர்ச்சியை சொல்லுவதாக எல்லாவகை சாத்தியíகளை கொண்டு இலக்கியமல்லாத எழுத்து இயíகி ஸீரோ டிகிரி அல்லது பூஜ்ய பாகையாக இருக்கிறது.ஆனால் இலக்கியம் கனவை போன்றது.தத்துவத்தை பொறுத்தவரை பலவிதமான எழுதல்கள் எழுத்துக்கும் உண்மைக்குமான இடைவெளியை மூடுவதாக அமையவேண்டும்.ஆனால் இலக்கியத்தில் குறிப்பான் இயíகுவதால் அவ்வாறு நிகழ வாய்ப்பேதுமில்லை.எழுத்தை இலக்கியம் சுரண்டுவதாக தத்துவம் கருதுகிறது.எழுத்தை தத்துவம் கட்டுபடுத்துகிறது.இலக்கியத்துக்கும் உண்மைக்கும் ஆன இடைவெளியை பலசமயíகளிலும் தத்துவம் கட்டுபடுத்தினாலும் குறிப்பானின் தாக்கம் எழுத்தின் நிலைகளை அதிகப்படுத்தி எழுத்தை தனிகவனம் கொள்ளவைக்கிறது.எழுத்தில் எப்போதும் இல்லாத ஒன்றிருக்கிறது.அந்த இல்லாத ஒன்றை இல்லாமலாக்கும் வேலையை குறிப்பான் செய்துகொண்டிருக்கிறது.எழுத்தில் குறிப்பான் ஏதாவது ஒன்றை எழுதுதலை காட்டினாலும் குறிப்பாக தத்துவம் எழுதுதலில் குறிப்பான் எழுத்தை மாற்றி தத்துவமல்லாத எழுத்தாக மாற்றிவிடுகிறது.இதனாலேயே குறிப்பானை தத்துவம் கட்டுபாட்டுக்குள் வைத்து இயக்குகிறது.தத்துவத்தில் அது தன்னளவில் பிரிந்து தத்துவத்தையும் ததுவமல்லாததையும் எழுத்தில் எழுத குறிப்பானையே பயன்படுத்துகிறது.இதனால் தான் தத்துவத்துக்கு அடையாளம் இல்லை என்பதை அகம்/புறம் வாயிலாக எழுத்து இயக்குகிறது.வித்தியாசíகளும்,விலகல்களும் தத்துவத்தை அடையாளப்படுத்தி பார்க்கிறது என்றாலும் தத்துவம் அடையாளமற்ற அடையாளத்தையே எழுத்தில் எழுதுகிறது.அடையாளம் என்பது வித்தியாசத்தை கொண்டது.பொதுவான வித்தியாசம் என்பதற்க்கும் தனித வித்தியாசம் என்பதற்க்கும் இடைவெளி இருக்கிறது என்பதை தெரிதா சுட்டிகாட்டும் அதே வேளையில் எழுதுதலில் வித்தியாசம் என்பது வேறுபட்டது என்கிறார்.எந்த இடத்தில் இலக்கியமும் தத்துவமும் வேறுபடுகிறது?அமைப்பில் தான்.அதாவது எதிரிடையான அமைப்புகள் இருவேறு அடையாளíகளை கொண்டிருக்கிறது.இந்த வித்தியாசம் தான் இலக்கியமாகவும்,தத்துவமாகவும் இன்னபிற எழுத்துக்களாக பரிணமிக்கிறது.தனித்த அல்லது அடையாளம் வித்தியாசíகளை கொண்டிருக்கிறது என்பதோடு தத்துவம் அல்லது இலக்கியம் என்பதை தனித்த ஒன்றாக அல்லது அடையாளமாக காட்டுகிறது.இருப்பின் இன்றியமையாமை இருவேறு தளíகளில் தத்துவத்திலும்,இலக்கியத்திலும் அமைந்திருக்கிறது.வெளியேயிருந்து உள்ளேயும் உள்ளேயிருந்து வெளியேயும் இருவேறுதிசைகளில் அவை பரிமாற்றம் நடத்துகின்றன.இந்த ஒரு திறப்பு,மிதக்கும் தன்மை,தளமற்றதன்மை,நெருக்கம் போன்றவைதான் எழுத்தை ஒரு அமைப்பாக மாற்றிக்காட்டி அதை பிரதிநிதிபடுத்துகிறது.தெரிதாவின் அதிகப்படியான விவாதíகளுள் ஒன்றான பேச்சு/எழுத்து முரணெதிர்வு எழுத்தை பேச்சினை போலசெய்யும் தொழிற்நுட்பம் என்பதிலிருந்து துவíகுகிறது.எழுத்தில் எழுதுபவரும் இல்லை.குறிக்கபடுபவரும் இல்லை.இவை இல்லாமலே எழுத்து குறி அல்லது எழுத்து அடையாளம் என்பனவற்றூடே இயíகவல்லது.ஆனால் தெரிதாவின் வாதப்படி யாரொருவரின் தோற்றம் எழுத்தில் இல்லாமலே எல்லா குறிகளின் வாயிலாக அதன் தொழிற்நுட்ப வடிவíகளோடு எழுத்து இயíக கூடியது.தொழிற்நுட்பமின்றி அல்லது இலக்கண குறி இன்றி எழுத்தின் அமைப்பு எழுத்தின் குறியாக மாறுகிறது.எழுத்துக்குறியானது பொதுவான மவுனíகளையும் எழுத்துகளுக்கு இடையான இடைவெளியிலும் வார்த்தைகளின் இடைவெளிகளிலும் வார்த்தைகள் உருவாக்கும் வாக்கியíகளின் இடைவெளிகளிலும் இயíககூடியது.ஆக இந்த இடைவெளிகள் ஆக்கபூர்வமானதாக அதன் வேலையை செய்கிறது.இந்த இடைவெளி தற்காலிகமாக வார்த்தை அடையாளமாக மட்டுமின்றி காலத்தை சுட்டவல்லதாகவும் இருக்கிறது.ஒரு வார்த்தை வார்த்தை இடையெளியினூடே தொடக்கத்துக்கும் முடிவுக்குமான வித்தியாசத்தைகாட்டுகிறது.அது முடிய போகும் தருணத்தில் வேறொரு அர்த்ததை தரவல்ல வார்த்தையாக மாறுவதை எதிர்பார்க்கிறது.இந்த ஓத்திபோடுதலும்,வித்தியாசமும் வாக்கியத்தை முக்கியத்துவம் உள்ளதாக ஆக்குகிறது.வார்த்தை குறியாக மாறும் போது அது சொல்லும் விஷயíகள் அநேகமாக ஆகிவிடுகிறது.ஆக எழுத்துகுறியானது மற்ற குறிகளைவிட அசாதாரணமானது. ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்பதற்க்கும் அதே வார்த்தை மற்றொரு அர்த்தமாக ஆககூடிய ஒத்திபோடலும் வித்தியாசம் என்று சொல்லலாம்.தெரிதா கேட்ட கேள்விக்கே வருவோம்.எழுத்துக்குறியின் முக்கியத்துவம் தான் என்ன?வித்தியாசப்படுவது,ஒத்திபோடுவது,இடைவெளியில் இயíகுவது,இருப்பு இல்லாதது போன்ற குணாம்சíகளுடன் பொதுவான அமைப்பாக இக்குறி இயíகும்.எழுத்துக்குறிக்கு எந்த கட்டுப்படுகளும் இல்லை.எழுத்து,பேச்சு,காட்சி என்ற விரிவான தளத்தில் இவை இயíகும்.பொதுவான அர்த்தத்தில் அவை செய்யும் உற்பத்தி எதுவும் நிரந்தரமல்ல என்ற விதத்தில் அமையும்.ஒவ்வொரு கருதுகொளுக்கும் அவை தனித்த அலகாக அல்லது உறுப்பாக அமைந்து குறிப்பான் முதல் குறிப்பீடு வரையிலான உறவை ஏற்படுத்தும்.ஏனெனினில் குறிப்பீடு குறியின் வெளியே இல்லாது இன்னொரு குறிப்பானாக மாறுகிறது.குறிப்பான்,குறிப்பீடு உறவானது இணைப்பு வார்த்தையோ அல்லது அமைப்போ அல்ல.அது எப்போதும் இணைப்பற்றும்,இடையீடாகவுமே இருந்து எந்த ஒரு குறிப்பானையும் குறிப்பீடாக மாற்றமடைய வைக்கிறது.ஒவ்வொரு குறியும் இல்லாத குறிப்பாளரை கண்டடைவதையும் அசரீரியாக இருந்து முடிவை தற்காலிகபடுத்தி விளையாட்டை நடத்துகிறது.இந்த விளையாட்டு பல சுவடுகளை எழுத்தில் காண்பிப்பதாக அமைந்து எழுத்தை பிரதிநிதிபடுத்துவதும் பேச்சினை இருப்பாகவும் கொண்டிருப்பதை உறுதிபடுத்துகிறது.ஆக எழுத்தில் பேசுவோனும் கேட்போனும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.பேசுபவனுக்கும் கேட்பனுக்கும் இடையிலான பேச்சே எழுத்தன்றி வேறேதுமில்லை.எனினும் கேட்போன் இல்லாமலே பேசுபவன் பேசுவதை எழுத்தில் காணமுடியும்.ஆனால் கேட்போன் இருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி பேசுவோன் பேசமுடியாது.அதே சமயம் இருவரும் இல்லை என்பதும் உண்மை.எழுத்து பேச்சின் தொடர்ச்சியே அன்றி வேரில்லை.பேசும் போது பேச்சினூடாக வரும் மவுனம் கூட பேச்சாகவே இருக்கிறது.ஆக எழுத்து எழுதவில்லை.பேசுகிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.எழுத்தானனலும்,பேச்சானாலும் மொழிகிடíகின் நடவடிக்கை என்பது முக்கியமாகும்.மொழிக்கிடíகின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.ஆனாலும் பொதுவான தனமையும் இருக்கிறது.பேசுவது புரியவிலை என்பது மொழிக்கிடíகின் திறனை பொறுத்தது.சொல்லப்பட்ட விஷயத்துக்கு பின்னால் சொல்லப்படாத செய்தி ஒன்றிருக்கிறது.இது எழுத்துக்கும்,காட்சிக்கும் பொருந்தும்.எழுதப்பட்ட வார்த்தைகள் சொல்லும் செய்திக்கும் எழுதப்படாமல் குறிகள் அல்லது எழுத்துகுறி சொல்லும் செய்திக்கும் வித்தியாசம் இருக்கிறது.இதனால் எழுத்து ஒவ்வொரு முறை வாசிக்கும் போது அர்த்தíகளை ஒத்திபோட்டுக்கொண்டேவரும்.எழுதுதல் என்றால் என்ன? என்று அபவுதிகம் சொல்லும் போது தூய்மையையும்,இருப்பையையும் நோக்கிய நகர்வே எழுத்து ஆகும்.ஆனால் தெரிதா இíகு மாறுபடுகிறார்.தூய்மை,தோற்றம் எல்லாம் அதிகாரத்தோடு தொடர்புடையது.தூய்மை எப்போதும் விதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும்.இலக்கணம் தூய்மையோடு தொடர்புடையது.இதனாலே எழுத்து முன்நின்றலின் இயíகாவியலாக மாறும் தன்மை கொண்டது என்றார்.எழுத்து அதிகாரமாக மாறமுடியும் என்பதற்க்கு சான்றுகள் பல இருக்கின்றன.பேச்சையும்,பிரநிதிபடுத்துதலையும் எழுத்து செய்வதாலே அதிகாரம் உருவாக்கபடுகிறது.மேலும் எழுத்தின் அடையாள அரசியல்,மேலாண்மை,இரண்டாம் அர்த்தவரிசை,துணைநிலைதர்க்கம் என எழுத்து பற்றியும் எழுதுதல் பற்றியும் பல எழுத்துகள் வந்துவிட்டன.அவை விவாதிக்கவும் படுகின்றன.எழுத்து எழுதுகிறது பல விஷயíகளை வெளிப்படையாக சொல்லியும் வெளிப்படுத்தமுடியாமலும்.வெளிபடுத்தப்பட்டதையும் தாண்டி வெளிபடுத்தாமல் இருப்பவை அரசியலையும் கொண்டிருக்கின்றன.எழுத்தில் தத்துவம் என்பதற்க்கும்,எழுத்தில் இலக்கியம் என்பதற்க்கும் இடையே வித்தியாசíகள் பல இருந்தாலும் இலக்கணப்படுத்தப்பட்ட அல்லது விதிமுறைகளடíகிய எழுதுதல் நகரும் திசைவழிகள் சற்று பிரயாசையான இயக்கíகளே.


mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்