எய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

தேவயானி கோஷ்


கேள்வி: எய்ட்ஸ் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் எதனால் ?

பதில்: இந்தியாவில் மிகவும் ஆபத்தான அளவுக்கு எய்ட்ஸ் நோய் சென்றுவிட்டதால் அதனைப்பற்றி ‘ஃபிர் மிலேங்கே ‘ படத்தில் பேசப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். இந்த கருத்துக்கு பல தயாரிப்பாளர்களும் பண உதவி செய்ய தயாராக இல்லாதபோது சஹாரா நிறுவனம் உதவ முன்வந்தது. பிறகு நான் மூலக்கதையை எழுதி அதனை திரைக்கதையாக வடிவமைத்து பின்னர் அதனை திரைப்படத்துக்காக ஒப்புக்கொண்டோம்.

கேள்வி: நீங்கள் கேட்ட அளவுக்கு நடிகர்கள் நடித்துக்கொடுத்தார்களா ?

பதில்: நிச்சயமாக. அவர்கள் சிறப்பான நடிகர்கள். உணர்வுப்பூர்வமாகவும் அதே நேரத்தில் கவர்ச்சிகரமாகவும் இருக்கும் ஒரு பெண் வேண்டுமென்பதற்காக ஷில்பா செட்டியை தேர்ந்தெடுத்தேன். இது போன்ற உணர்வுப்பூர்வமான ஒரு வேடத்தில் சல்மான் கான் நடிப்பார் என்று நான் நினைத்திருந்ததில்லை. ‘கர்வ் ‘ என்ற படத்தில் ஷில்பா, சல்மான் கானுடன் நடித்துக்கொண்டிருந்ததால், நான் யதேச்சையாக ‘இந்தப்படம் நடிப்பீர்களா ? ‘ என்று கேட்டேன். அவரோ சரி என்று சொல்லிவிட்டார். அபிஷேக் பச்சனும் உடனே ஒப்புக்கொண்டுவிட்டார். எனக்கு தீவிரமான உணர்வுப்பூர்வமாக நடிக்கக்கூடியவர் வேண்டுமென்பதால் அவரைக்கேட்டேன். இதில் ஹீரோக்களோ ஹீரோயின்களோ இல்லை. இந்தப்படத்தில் எல்லோருமே முக்கியமான பாத்திரங்கள்.

கேள்வி: இந்தப்படத்தை எடுப்பது எப்படி இருந்தது ?

பதில்: எல்லா நடிகர்களும் தொழில்முறை நடிகர்கள் மேலும் அவர்கள் மிகவும் மிகவும் நட்பான மனிதர்கள். கேமராவின் முன்னே யாரும் பெரிய ஸ்டார் கிடையாது. பார்வையாளர்களுக்கு மட்டுமே அவர்கள் அப்படி.

கேள்வி: இப்படிப்பட்ட ஒரு படம் இந்தியாவில் நன்றாக வரவேற்கப்படும் என்று கருதுகிறீர்களா ?

பதில்: இந்தியா உலகத்திலேயே மிக அதிகமாக எய்ட்ஸ் நோயுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பார்வையாளர்கள் அதனை உணர்ந்திருக்கவேண்டும். இந்தப்படம் மக்களின் மனதைத் தொட்டதென்றால், இது நன்றாக வரவேற்கப்படும். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பக்கத்தை நாம் பார்க்கவேண்டும்.

கேள்வி: டைரக்ஷன் என்று நீங்கள் எடுக்கக்காரணம் என்ன ?

பதில்: நடிப்பிலிருந்து இயக்குனராக வருவது என்பது இயற்கையான வளர்ச்சி எனக்கு. நான் இயக்குனராக ஆகவேண்டும் என்பது என் விருப்பம் என்பது எனக்கு எப்போதும் தெரியும். ஆனால் நான் நடிப்பதை விட்டுவிடவில்லை. நான் பிர் மிலேங்கே படத்தில் மும்முரமாக இருந்ததால் வேறெந்த வேடத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. கதை நன்றாக இருந்தால் நான் நிச்சயம் நடிக்க எந்த வாய்ப்பையும் எடுத்துக்கொள்வேன்.

– Devyani Ghosh

***

நன்றி: பயனீயர் நாள் இதழ்

***

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

தேவயானி கோஷ்

தேவயானி கோஷ்